19-03-2019, 05:57 PM
"ஹேய்.. ஆதிரா.. என்ன இது.. கண்ணை தொடைச்சுக்கோ.. ஃபீல் பண்ணாத ப்ளீஸ்..!!"
"ம்ம்..!!"
"நடந்து முடிஞ்சதை நெனைச்சு கவலைப்படாத ஆதிரா.. நடக்கப் போறதை பத்தி நெனை..!!"
"ம்ம்..!!"
"இந்தக் கஷ்டத்துல இருந்து எப்படி நார்மலுக்கு திரும்பலாம்னு யோசி..!!"
"ம்ம்..!!"
"தாமிராவோட டெட்பாடியை உனக்கு பாக்கணுமா..??"
"இல்லத்தான்.. என் தங்கச்சியை அந்தமாதிரி கோலத்துல என்னால சத்தியமா பாக்கமுடியாது.. என் மனசுல அந்த தெம்பு இல்ல..!! போலீஸா பார்த்து கன்ஃபார்ம் பண்ணட்டும்.. நான் பாக்க வரமாட்டேன்..!!"
"அப்போ.. நாளைக்கு காலைலயே மைசூர் கெளம்பிறலாமா..??"
"ம்ம்.. கெளம்பிறலாம்..!!"
"உனக்கு ஒன்னும் வருத்தம் இல்லையே.. அகழில இருக்கணும்னு ரொம்ப ஆசைப்பட்ட..??"
"இல்லத்தான்.. அந்த ஆசைலாம் எப்போவோ போய்டுச்சு..!! இந்த அஞ்சாறு நாள் ரொம்ப கஷ்டப்பட்டுட்டேன் அத்தான்.. இங்க வந்ததுல இருந்தே எதுவும் சரியில்ல.. நாம மைசூருக்கே போயிறலாம்..!! உண்மையிலேயே தாமிராவுக்கு என்னாச்சுனு தெரிஞ்சுக்க ஆசைப்பட்டேன்.. அதுவும் இப்போ தெரிஞ்சு போச்சு.. போதும்.. கெளம்பிறலாம்..!!" பரிதாபமாக சொன்ன ஆதிராவை ஏக்கமாக ஏறிட்டான் சிபி.
"நானும் நேத்து நைட்டு முழுக்க ரொம்ப துடிச்சுப் போயிட்டேன் ஆதிரா.. உனக்கு என்னாச்சோ ஏதாச்சோன்னு..!!"
"ம்ம்..!!"
"நீ அங்க இருந்து ஃபோன் பண்ணதும்தான் எனக்கு உசுரே வந்தது..!!"
"ம்ம்..!!"
"குறிஞ்சியை பத்தி இத்தனை நாளா எனக்கு ரொம்பலாம் நம்பிக்கை இல்ல.. இப்போ நம்புறேன்..!!"
"ம்ம்..!!"
"தாமிரா சொன்னது உண்மைதான் ஆதிரா..!!"
"எ..என்ன..??"
"குறிஞ்சி நல்லவதான்.. என் கண்மணியை எனக்கு காப்பாத்தி குடுத்திருக்குறாளே..?? நீ இல்லாம நான் என்ன செஞ்சிருப்பேன்னு எனக்கு தெரியலடி..!!" உணர்ச்சி பெருக்கெடுத்தவனாய் சிபி சொல்ல,
"அத்தான்..!!" அவனது அன்பில் கசிந்துருகிப் போனாள் ஆதிரா.
"இனி நமக்கு எந்தக்கஷ்டமும் இல்ல ஆதிரா.. நிம்மதியா தூங்கு.. காலைல இந்த ஊரை விட்டு கெளம்பிறலாம்..!!"
"ம்ம்.. சரித்தான்..!!"
மனைவியை இறுக்கி அணைத்துக் கொண்டான் சிபி.. கணவனின் அணைப்புக்குள் சுகமாக அடங்கிப் போனாள் ஆதிரா..!! இமைகளால் விழிகளைப் போர்த்திவிட்டு.. இருவரும் நித்திரைக்காக காத்திருந்தனர்..!!
அடுத்தநாள் காலை.. எப்போதையும்விட சற்று தாமதமாகவே கண்விழித்தாள் ஆதிரா..!! ஜன்னலின் வழியே பாய்ந்த சூரியக்கதிர்களின் வெப்பம்.. முகத்தில் பரவவுமே இமைகளை மெல்ல மெல்ல பிரித்தாள்..!! உடம்பை முறுக்கி புரண்டு படுத்தாள்.. சிபி படுத்திருந்த இடம் இப்போது காலியாக இருக்க, நெற்றியை சற்றே சுருக்கினாள்.. அடுத்த நொடியே வாயை அகலமாக திறந்து, ஒரு பெரிய கொட்டாவியை வெளிப்படுத்தினாள்..!!
சோம்பலுடனே எழுந்து முகம் கழுவிக்கொண்டாள்.. ப்ரஷில் பேஸ்ட் பிதுக்கி பல்தேய்த்துக் கொண்டாள்..!! கலைந்திருந்த கூந்தலைச் சுருட்டி கொண்டையிட்டவாறே.. படியிறங்கி கீழே வந்தாள்..!!
"என்னங்க..!!" கணவனை ஒருமுறை அழைத்துப் பார்த்தாள்.
கீழ்த்தளத்திலும் சிபியை எங்குமே காணவில்லை..!! சமையலறையில் இருந்து ஏதோ சப்தம் வந்தது.. எட்டிப் பார்த்தாள்.. உள்ளே.. வனக்கொடி பாத்திரங்கள் தேய்த்துக் கொண்டிருந்தாள்..!! எட்டிப்பார்த்த ஆதிராவை அவள் காண நேரிட்டதும்..
"ஆதிராம்மா.. எந்திரிச்சாச்சா..?? காப்பி போட்டு கொண்டாரவா..??" என்று கனிவாக கேட்டாள்.
"ம்ம்.. கொண்டாங்கம்மா..!!"
"இரும்மா.. ரெண்டே நிமிஷம்..!!"
வனக்கொடி சொன்னதும் அங்கிருந்து நகர நினைத்த ஆதிரா.. சற்றே தயங்கி நின்று.. பிறகு மீண்டும் சமையலறைக்குள் பார்த்து கேட்டாள்..!!
"அவர் எங்கயும் வெளில போனாராம்மா.. பாத்திங்களா நீங்க..??"
"இல்லையம்மா.. பாக்கலையே..?? நான் இப்பத்தான வந்தேன்..!!"
"ஓ.. சரி சரி..!!"
ஆதிரா கிச்சனை விட்டு கிளம்பினாள்..!! ஹாலின் இன்னொரு மூலைக்கு சென்று.. ஜன்னல் வழியாக வெளியே எட்டிப் பார்த்தாள்.. பனியில் நனைந்துபோய் நின்றிருந்தது அவர்களது கார்..!! தொலைவாக எங்கும் செல்லவில்லை என்று தோன்றியது.. அருகில் எங்காவது உலாவ சென்றிருப்பார் என்று நினைத்துக் கொண்டாள்..!!