19-03-2019, 05:54 PM
"இனிமே இதுதான் உன் இடம்.. வேற எங்கயும் போகணும்னு நெனைக்க கூடாது..!! சமத்தா இங்கயே இருக்கணும்.. என்கூடவே இருக்கணும்.. எப்போவும்.."
ஆதிரா மணிமாறனை முதன்முதலாக சந்தித்தபோது.. அவர் தோட்டத்து செடிகளுடன் பேசிக்கொண்டிருந்தது நினைவுக்கு வந்தது..!! அதெல்லாம் செடிகளிடம் பேசினாரா.. அல்லது.. செடிகளுக்கு அடியில் உறங்கிய பிரேதங்களிடம் பேசினாரா என்று ஆதிராவுக்குள் இப்போது ஒரு கேள்வி..!!
சுற்றிநின்ற காவலர்களுக்கு மையமாக, மஃப்டி உடையில் காட்சியளித்தார் இன்ஸ்பெக்டர் வில்லாளன்.. முகத்தை சீரியஸாக வைத்துக்கொண்டு, மும்முரமாக வேலையில் ஈடுபட்டிருந்தார்.. எல்லோருக்கும் ஏதேதோ ஆணையிட்டுக் கொண்டிருந்தார்..!! அவரிடம் ஆதிராவின் வருகையை ஒரு காவலர் உரைக்கவும்.. உடனே இவர்கள் பக்கமாக திரும்பிப் பார்த்தார்..!!
"ஒருநிமிஷம் இருங்க.. வந்துடுறேன்..!!"
என்றுவிட்டு மீண்டும் அந்தப்பக்கம் திரும்பிக்கொண்டார்.. தனக்கு கீழ் வேலை பார்க்கும் காவலர்களுக்கும், பொக்லைன் இயந்திரத்தை இயக்க வந்திருப்பவர்களுக்கும், மேலும் சில கட்டளைகளை பிறப்பித்தார்..!! அவர் சொன்ன ஒருநிமிடம் முடிவதற்கு முன்பாகவே.. ஆதிராவையும், சிபியையும் வந்து அணுகினார்..!!
"வாங்க.. உள்ள போய் பேசலாம்..!!"
வில்லாளன் இருவரையும் வீட்டுக்குள் அழைத்து சென்றார்.. மூவரும் ஹாலுக்குள் பிரவேசித்து உள்ளே நடந்தனர்..!! இடப்புறமாக தெரிந்த அந்த அறைவாசலை அடைந்ததும்..
"நீங்க இங்கயே இருங்க.. அவங்கட்ட தனியா பேசணும்..!!"
என்று சிபியை அறை வாசலிலேயே தடுத்து நிறுத்தினார் வில்லாளன்.. ஆதிராவை மட்டும் அழைத்துக்கொண்டு அறைக்குள் நுழைந்தார்..!! அறைக்குள் வேறு யாரும் இல்லை.. வாசலில் மட்டும் சிபியோடு சேர்த்து இன்னும் இரண்டு காவலர்கள்..!! உள்ளே சென்றவர்கள் எதிரெதிர் நாற்காலியில் அமர்ந்துகொண்டனர்.. வில்லாளன் அதிக நேரம் எடுத்துக்கொள்ளாமல் உடனடியாக விஷயத்திற்கு வந்தார்.. விசாரணையை ஆரம்பித்தார்..!!
"ஆர் யூ ஆல்ரைட் நவ்..??" ஆரம்பத்தில் ஒரு சம்பிரதாய கேள்வி.
"ம்ம்.. ஐ'ம் ஓகே நவ்..!!" ஆதிரா உலர்ந்துபோன குரலில் சொன்னாள்.
"ஹ்ம்ம்.. காலைல நீங்க போன்ல சொன்னதுல, நெறைய விஷயம் எனக்கு சுத்தமா புரியலைங்க.. சரி ஏதோ கொழப்பத்துல இருக்கிங்க போலன்னு விட்டுட்டேன்..!! எனக்கு இன்னும் நெறைய டவுட்டு இருக்கு.. அதான் இப்போ நேர்லயே பாத்து பேசிறலாம்னு ஆள்விட்டு வரச்சொன்னேன்..!! இப்போ கேக்கலாமா..??"
"ம்ம்.. கேளுங்க..!!"
"மொதல்ல.. அந்தாளு எப்படி உங்களை மயக்கமாக்குனான்..??"
"கைல ஏதோ ஸ்ப்ரே வச்சிருந்தாரு..!!"
"ஹ்ம்ம்.. மயக்கமாக்கியாச்சு.. வீட்டுக்கு தூக்கிட்டு வந்தாச்சு.. கட்டிப்போட்டாச்சு.. அந்த சீக்ரட் ரூமுக்கு கூட்டுப்போயாச்சு.. கைல கத்தியை எடுத்துக்கிட்டு உங்களை.."
"கத்தி இல்ல.. உளி..!!"
"ஓகே.. கைல உளியை எடுத்துக்கிட்டு உங்களை ஹர்ட் பண்ணவந்திருக்கான்.. கரெக்டா..??"
"ம்ம்.. கரெக்ட்..!!"
"அந்தமாதிரி அவ்வளவு வசமா அவன்கிட்ட மாட்டிக்கிட்டிங்க சரி.. அப்புறம் எப்படி தப்பிச்சிங்க..?? யார் ஹெல்ப் பண்ணா..??"
"அதான் காலைலயே சொன்னனே.. கு..குறிஞ்சிதான் வந்து என்னை காப்பாத்தினா..!!"
"ப்ச்..!!!!"
ஆதிராவின் பதிலைக்கேட்டு உடனடியாக ஒரு சலிப்பை உதிர்த்த வில்லாளன்.. குரலில் ஒரு கடுமையை கூட்டிக்கொண்டு தொடர்ந்து பேசினார்..!!
"இங்க பாருங்க ஆதிரா.. இந்த ஊர்க்காரய்ங்களுக்கு இனிமேயாவது நல்லபுத்தி வரப்போகுதுன்னு, நான்லாம் சந்தோஷமா நெனச்சிக்கிட்டு இருக்கேன்.. நீங்க கூடக்கொஞ்சம் அவய்ங்களை கிறுக்கய்ங்களாக்கிறாதிங்க..!! குறிஞ்சின்லாம் யாருங்கெடையாது.. எல்லாத்தையும் பண்ணிட்டு இருந்தது இந்த சைக்கோப்பயதான்..!! சொல்லுங்க.. என்ன நடந்துச்சுன்னு எதையும் மறைக்காம சொல்லுங்க..!!"
"நடந்ததைத்தான் சொல்லிட்டு இருக்கேன் ஸார்..!!"
"என்ன.. இதா நடந்துச்சு.. அந்தாளு உங்களை டார்ச்சர் பண்ண வந்தப்போ, அந்த குறிஞ்சி வந்து, அந்தாளை அடிச்சுப்போட்டு உங்களை காப்பாத்துனாளா..?? படத்துலலாம் வர்ற மாதிரி..??" வில்லாளனின் குரலில் ஒருவித ஏளனம் தொணித்தது.
"ம்ம்.. ஆமாம்..!! ஆனா அந்தாளை அடிச்சுப்போட்டது குறிஞ்சி இல்ல.." ஆதிரா இயல்பாகவே பேசிக்கொண்டிருந்தாள்.
"அப்புறம்..??"
"ஒரு புலி..!! குறிஞ்சி கூடவே வந்த ஒரு புலி..!!"
"புலியா..??"
வில்லாளனின் முகத்தில் அப்பட்டமாய் ஒரு நம்பிக்கையின்மை தெரிந்தது.. ஆதிராவை அவர் பார்த்த பார்வையில் ஒருவித எரிச்சல் கலந்திருந்தது..!! அவரது ஏளனப்பார்வையை கண்டுகொள்ளாமல்.. இரவு நடந்த விஷயங்களை இன்னொருமுறை அவருக்கு விளக்கி சொன்னாள் ஆதிரா..!! அவள் சொன்னதையெல்லாம் நம்பிக்கையில்லாமலே கேட்டுமுடித்த வில்லாளன்.. அதன்பிறகும் சில வினாடிகள் அவளது முகத்தையே கூர்மையாக பார்த்துக் கொண்டிருந்தார்..!! பிறகு சலிப்பாக தலையசைத்தவாறே.. இல்லாத தலைமயிரை பரபரவென சொறிந்துகொண்டார்..!!