19-03-2019, 05:51 PM
குற்றச்சாட்டு குறித்து, சென்னை மந்தவெளியைச்சேர்ந்த டாக்டர் சுப்பிரமணியனை தொடர்புகொண்டு நாம் கேட்டபோது, “அவருக்கு ஆபரேஷன் செய்யலாம் என்று முடிவுசெய்தோம். ஆனால், அதில் சிக்கல் இருக்கிறது என்று வெளிநாட்டு டாக்டர்கள் சொன்னதால் ஆபரேஷனை தவிர்த்துவிட்டோம்” என்றவரிடம், 2001- முதல் முதலில் ஆபரேஷன் செய்தீர்கள் அல்லவா? அப்போது, யூரினரி ட்யூபை வைத்து தைத்துவிட்டீர்களா? என்று நாம் கேட்டபோது, “நான், ஆர்த்தோ டாக்டர் எனக்கும் யூரினரி ட்யூபுக்கும் எந்த சம்பந்தமுமில்லை. அதனால், நான் அப்படிப்பட்ட ஒரு ஆபரேஷனை செய்யவில்லை. இதற்குமுன் விபத்து ஏற்பட்டபோது அப்படி வைக்கப்பட்டிருக்கலாம். அதேபோல், வெளிநாட்டு மருத்துவர்களுக்கு ஃப்ளைட் டிக்கெட் பணமெல்லாம் அவர் அனுப்பவில்லை. அவரும் நானும் அப்பா-மகன் என்று பழகவில்லை. அவர் என்னை டாக்டரைய்யா என்றுதான் அழைப்பார். குடும்பச்சூழ்நிலை மற்றும் பிசினஸ் காரணமாக அவர் இப்படியாகிவிட்டார். அதனால், இப்படி என்னைப்பற்றி தவறான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். அதையெல்லாம் நம்பாதீர்கள்” என்றார் தனது தரப்பு விளக்கமாக.
மெடிக்கல் நெக்லிஜென்ஸ் என்பது மருத்துவ அலட்சியம். எவ்வளவு சிறந்த மருத்துவர்களுக்கும் மருத்துவ அலட்சியத்தின் மூலம் நோயாளிக்கு ஆபத்து ஏற்படலாம். அது, நிரூபிக்கப்பட்டால் அதற்கான இழப்பீட்டை மருத்துவர் கொடுக்கவேண்டும். ஆனால், குமாரசாமியின் குற்றச்சாட்டுகள் வெறும் மெடிக்கல் நெக்லிஜென்ஸ் மட்டுமல்ல, நம்பி வந்த நோயாளியிடம் பணமோசடியிலும் ஈடுபட்டிருக்கிறார் என்பதுதான். இதனால், தன்னுடைய வாழ்க்கையையே இழந்து கோடீஸ்வரனாக இருந்தவர் பிச்சை எடுக்கும் சூழலுக்கு தள்ளப்பட்டிருக்கிறார். இதுகுறித்து, சுகாதாரத்துறையும் மருத்துவக்கவுன்சிலும் விசாரித்து நடவடிக்கை எடுக்கவேண்டும். ஏனென்றால், நம் நாட்டில் மருத்துவர்களின் அலட்சியத்தால் பல உயிர்கள் மட்டுமல்ல… பணத்தையும் இழந்து பல குமாரசாமிகள் உலாவிக்கொண்டிருக்கிறார்கள்.