19-03-2019, 05:49 PM
“அரைமணிநேரம்தான் உனக்கு ஆபரேஷன் பண்ணனும்னு முடிவுபண்ணியிருந்தேன். ஆனா, தொடையில எக்ஸ்ட்ரா எலும்பு வளர்ந்து மசில்ஸுக்குள்ள பிண்ணிக்கிட்டிருக்கு. அதை, க்ளீன் பண்ணவே 5 ½ மணிநேரம் ஆகிடுச்சு. போராடி காப்பாத்தியிருக்கேன். அனெஸ்தடிக் (மயக்கவியல் நிபுணர்) கிட்ட இன்னும் ஒரு ஃபைவ் மினிட்ஸ் டைம் கேட்டேன். இன்னும் டூ மினிஸ்ட்ஸ் போனாலே ஜீரோவாகிடும்னு சிக்னல் காண்பிச்சுட்டார். அதனால, அர்ஜண்டா ஸ்டிச்சிங் பண்ணிட்டேன். இன்னும் ஒரு ஆறு மாசம் ஆகட்டும். உனக்கு ஹிப் போர்ன் ரீப்ளேஸ்மெண்ட் பண்ணி நடக்கவைக்கிறேன்” என்று டாக்டர் சுப்பிரமணியன் சொல்ல, வேறு வழியில்லாமல் ஏற்றுக்கொண்டார் குமாரசாமி.
அதிலிருந்து, குமாரசாமியும் சுப்பிரமணியனும் டாக்டர்-நோயாளி என்றில்லாமல் அப்பா-மகனாய் பழக ஆரம்பித்தார்கள். 15 நாட்களுக்கு முன்பே பணம் கட்டி அப்பாயிண்ட்மெண்ட் வாங்கவேண்டிய டாக்டர் சுப்பிரமணியனிடம் சிகிச்சைக்கு எந்தவிதமான அப்பாயின்மெண்டும் இல்லாமல் அடிக்கடி, மதுரையிலிருந்து சென்னை மந்தவெளிக்கு வந்துசென்றார் குமாரசாமி.
2002 பிப்ரவரி- 02 ந்தேதி…
மந்தவெளியிலிருந்து டாக்டர் சுப்பிரமணியனின் மகள் செல்ஃபோன் நம்பரிலிருந்து ஃபோன் வந்தது.
“அப்பா உங்கக்கிட்ட பேசணும்ங்கிறார்”
“அப்பாக்கிட்ட ஃபோனை கொடும்மா” என்றார் குமாரசாமி. “மகனே, எப்படியிருக்க?” என்று வழக்கப்போல் நலம் விசாரித்துவிட்டு,
“ரீப்ளேஸ்மெண்ட் ஆபரேஷனுக்கு ரெடியா?” என்று கேட்டார் டாக்டர் சுப்பிரமணி.
“இப்போ, கூப்பிடுங்க… நாளைக்கு மார்னிங் வந்து நிற்குறேன் டேடி” உணர்ச்சிவசப்பட்டார் குமாரசாமி.
“ஜெர்மன்லேர்ந்து ஸ்பெஷலா உனக்காக ரெண்டு டாக்டர்களை இன்வெட் பண்ணியிருக்கேன். ஃப்ளைட் டிக்கெட் புக் பண்ணிக்கொடுக்கமுடியுமா?”
“என்ன டேடி இப்படி கேட்குறீங்க… ஆல்வேஸ் ஐ ஆம் கெட் ரெடி டாடி…”
“ஒரு டிக்கெட் 1.5 லட்ச ரூபாய். ரெண்டு டிக்கெட் ரெண்டரை லட்ச ரூபாய். எனக்கு 50,000 ரூபாய் அனுப்பிடு மகனே”
“வித் இன் ஆஃப் அண்ட் ஹவர் டேடி… யுவர் அக்கவுண்ட் பர்ட்டிகுலர்லி மென்ஷன் அமவுண்ட் ஃப்ளைட் டிக்கெட் 2 1/2 லேக்ஸ்+ 50,000 டோட்டல் த்ரி லேக்ஸ் அக்கவுண்ட் ட்ரான்ன்ஸ்ஃபர் ஃபெடரல் பேங்க் ஆஃப் இண்டியா. போதுமா டாடி?”
பாதிக்கப்பட்ட குமாரசாமி
“போதும்டா” என்று சிரித்தபடி ஃபோனை துண்டித்தார் டாக்டர் சுப்பிரமணியன்.
“போதும்டா” என்று சிரித்தபடி ஃபோனை துண்டித்தார் டாக்டர் சுப்பிரமணியன்.
ஆகமொத்தம், மூன்று லட்ச ரூபாயை அன்று மாலை மதுரை ஈஸ்ட்வேலி எதிரில் (சிந்தாமனி தியேட்டர் இருந்த இடத்தில்) இருந்த ஃபெடரல் பேங் ஆஃப் இண்டியா அக்கவுண்ட் மூலம் அவருக்கு ட்ரான்ஸ்ஃபர் செய்தார் குமாரசாமி. பணம் வந்துவிட்டது என்று டாக்டர் சுப்பிரமணியிடமிருந்து மீண்டும் மகிழ்ச்சியுடன் ஃபோன் வந்தது.
சென்னை இசபெல்லா…
மறுநாள் சனிக்கிழமை மருத்துவமனையில் அட்மிட் ஆனார் குமாரசாமி. செவ்வாய்க்கிழமை ஆபரேஷனுக்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்துவிட்டு ஸ்ட்ரெக்சரில் வைத்து தள்ளிக்கொண்டு ஆபரேஷன் தியேட்டருக்குள் செல்கிறார்கள். அப்போது, டாக்டர் சுப்பிரமணியின் காதில் ஜெர்மன் டாக்டர் ஏதோ சொல்கிறார். உடனே, குமாரசாமியின் ஸ்ட்ரெக்சரை நிறுத்திவனார் டாக்டர் சுப்பிரமணியன்.
“மகனே… நீ உடனே தேவி ஹாஸ்பிட்டலுக்கு போயி சி.டி.ஸ்கேன் எடுத்துவிட்டு வா’ என்றதும் குழப்பமானார் குமாரசாமி.
“என்னாச்சுப்பா… எனக்கு நீங்க ரீப்ளேஸ்மெண்ட் ஆபரேஷன் பன்றதா சொல்லித்தானே கூப்ட்டீங்க. இப்போ, திடீர்ன்னு தேவி ஹாஸ்பிட்டல் போயி ஸ்கேன் எடுக்கச் சொல்றீங்க? ஆபரேஷன் பண்ணலையா?”
“அப்பா, சொல்றதை செய். நீ போயிட்டு வர்றதுக்குள்ள எனக்கு ரிப்போர்ட் வந்துடும் உடனே போயி எடு” என்று அவசரப்படுத்தினார்.