Thread Rating:
  • 3 Vote(s) - 3.67 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
தற்போதைய செய்திகள்
கோடீஸ்வரனை பிச்சைக்காரனாக்கினாரா பிரபல டாக்டர்? -அதிரவைக்கும் மெடிக்கல் க்ரைம் குற்றச்சாட்டு!

ராகவேந்திரா புக் ஸ்டால், எஸ்.டி.டி. பூத், ஜானு ட்ராவல்ஸ், மகாசக்தி ஃபைனான்ஸ்… 14 விலையுயர்ந்த கார்கள்… பல லட்ச ரூபாய் மதிப்புள்ள வீடு… என மதுரையில் கோடீஸ்வரனாக கொடிக்கட்டிப்பறந்த குமாரசாமி தற்போது சென்னையிலுள்ள பிரபல கோயில் வாசலில் பிச்சை எடுத்துக்கொண்டிருக்கிறார். இதற்குக்காரணமாக, அவர் குற்றஞ்சாட்டுவது பிரபல டாக்டரைத்தான்.
 
என்ன நடந்தது? என்று நாம், விசாரிக்க ஆரம்பித்தபோதுதான் டாக்டர்களிடம் செல்லும்போது ஒவ்வொருவரும் எவ்வளவு எச்சரிக்கையாக இருக்கவேண்டும் என்ற விழிப்புணர்வை ஏற்படுத்துகிறது குமாரசாமியின் ஃப்ளாஷ்பேக்….
 
1999 செப்டம்பர்-29 இரவு 11:30…
 
நண்பர்களுடன் மதுரையிலிருந்து சேலத்துக்கு காரில் சென்றுகொண்டிருந்தார்  ‘கோடீஸ்வரன்’ குமாரசாமி. அதிவேகத்தில், ராசிபுரம் அருகில் சென்றுகொண்டிருந்தபோது சாலையில் நின்றுகொண்டிருந்த டிப்பர் லாரியில் மோதியது கார். அதிகாலை… விபத்துக்குள்ளான இடத்திற்கு வந்த காவல்துறை, காருக்குள்ளிருந்த ஐந்துபேரும் விபத்தில் இறந்துவிட்டார்கள் என முடிவுசெய்து அதற்கான வேலையில் ஈடுபட ஆரம்பித்தது. ஆனால், காருக்குள்ளிருந்து உயிருக்குப்போராடும் முனகல் சத்தம் வெளியில் கேட்க… பொதுமக்களில் ஒருவர் பதறியடித்துக்கொண்டு போலிஸிடம் சொன்னபோதுதான் குமாரசாமி உள்ளிட்டவர்கள் மீட்கப்பட்டு அருகிலுள்ள பிரபல மருத்துவமனையில் அட்மிட் செய்யப்பட்டார்கள். கோமாவில் இருந்த குமாரசாமிக்கு தீவிரசிகிச்சை அளிக்கப்பட்டது. கண்விழித்தபோதுதான் தெரிந்தது இடதுபக்கம் இடுப்பு எலும்பு முறிவு ஏற்பட்டிருக்கிறது என்ற தகவல்.
 
 
இரண்டுவருடங்களுக்குப்பிறகு….

 
2001 ஆம் ஆண்டு சென்னை நண்பர் ஸ்ரீராம் மூலம் குமாரசாமிக்கு அறிமுகமாகிறார் மெடிக்கல் எக்யூப்மெண்ட்களை விற்கும் மேனேஜர் சண்முகவேல். அவர்கள், இருவரும் சென்னை மந்தைவெளியிலுள்ள பிரபல  டாக்டரிடம் குமாரசாமியை இடுப்பு எலும்புமாற்று அறுவைசிகிச்சைக்கு அழைத்துசென்றார்கள். அதற்குப்பிறகு, என்ன நடந்தது?

 
[Image: subramanian%2001.jpg]
                                                         டாக்டர் சுப்பிரமணியனின் க்ளினிக்


“அரசு இராயப்பேட்டை மருத்துவமனையில ஆர்த்தோ டிபார்ட்மெண்ட் சீஃப் டாக்டரா இருக்காரு. தனியா க்ளினிக்கும் வெச்சிருக்காரு. அவரோட, அப்பாயின்மெண்ட் வாங்கணும்னா 15 நாட்களுக்கு முன்பே 5,000 ரூபாய் முன்பணம் கட்டணும். அப்போதான், தேதி கிடைக்கும். 15 நிமிடத்துக்குமேல அவர் யார்க்கிட்டேயும் பேசமாட்டார்” என்ற பில்ட்-அப்புகளோடு அழைத்து செல்லப்பட்டார் குமாரசாமி.
 
 ‘இவர்தான் நாங்க சொன்ன டாக்டர். இவர், பேரு சுப்பிரமணியன்’ என்று நண்பர்கள் அறிமுகப்படுத்திவைத்ததும், “ராயப்பேட்டை ஹாஸ்பிட்டலில் எப்போ வந்து அட்மிட் ஆகலாம் டாக்டர்?” என்று கேட்டார் குமாரசாமி.
 
“ராயப்பேட்டை வேணாம்… இசபெல்லா ஹாஸ்பிட்டல் வா… அங்க, வெச்சு ரீ ப்ளேஸ்மெண்ட் பன்றேன். 15 நாள்ல நடக்க வெச்சிடுறேன்” என்றதும் மற்றவர்கள்போல் நாமும் நல்லபடியாக நடக்கலாம். தான் வைத்திருக்கும் விதவிதமான கார்களை ஓட்டுவதிலும் இனி பிரச்சனை இருக்காது என்று நம்பிக்கையுடன் டாக்டரை ஏறெடுத்துப் பார்த்தார் குமாரசாமி.
 
“புதிய ஹிப் ஜாயின் போர்ன் (இடுப்பு மூட்டு எலும்பு) இம்ப்ளேண்ட் பண்ண 1 லட்சத்து 25,000 ரூபாய், என்னோட ஃபீஸ் 50,000 ரூபாய், ஹாஸ்பிட்டல் ஃபீஸ் தனி”என்று மருத்துவச்செல்வை பட்டியலிட்டார் டாக்டர் சுப்பிரமணியன்.
 
“எவ்வளவு, செலவானாலும் பரவாயில்ல… எழுந்து நடந்தாப்போதும்” டாக்டர்களிடம் எதைச்சொல்லக்கூடாதோ அந்த வார்த்தையைச் சொல்லிவிட்டார் குமாரசாமி.
 
[Image: subramanian%2002.jpg]
                                                   விருதுபெறும் டாக்டர் எம்.சுப்பிரமணியன்


2001 ஜூலை-23 சென்னை இசபெல்லா மருத்துவமனை…
 
ஆபரேஷன் முடிந்து நார்மல் வார்டுக்கு வந்ததும் திடீரென்று டாக்டர் சுப்பிரமணியன் பதறியடித்துக்கொண்டு ஓடிவந்தார்.
 
“மகனே மன்னிச்சுக்கோ” என்ற அலறல் சப்தம் குமாரசாமியின் காதுகளில் ஒலித்தது.
 
எவ்வளவு பெரிய டாக்டர். தன்னைப்பார்த்து மகனே என்று ஓடிவந்து அழுதது குமாரசாமிக்கு குழப்பத்தை ஏற்படுத்தியது. ஒன்றும் புரியாமல்,
 
“என்னாச்சுப்பா?” மகனே என்று டாக்டர் அழைத்ததால் இப்படிக்கேட்டார் குமாரசாமி.  
 
“15 நாள்ல உன்னை நல்லா நடக்கவைக்கணும்ங்குற கனவு கெட்டுப்போச்சு” என்றதுமே குமாரசாமியின் தலையில் இடி விழுந்ததுபோல் இருந்தது. ஆனாலும், டாக்டர் சுப்பிரமணியன் அதற்கு என்னக் காரணம் சொல்லப்போகிறார்? என்றபடி பதைபதைப்போடு பார்த்தார்.
Like Reply


Messages In This Thread
RE: கரண்ட் affairs தமிழில் - by johnypowas - 19-03-2019, 05:49 PM



Users browsing this thread: 100 Guest(s)