Thread Rating:
  • 3 Vote(s) - 3.67 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
தற்போதைய செய்திகள்
[Image: goa-cm.jpg]பாரிக்கர் மறைவிற்கு பின், நள்ளிரவில் பதவியேற்ற கோவா மாநிலத்தின் புதிய முதல்வர்!

கோவா மாநிலத்தின் முதலமைச்சராக இருந்தவர் மனோகர் பாரிக்கர். இவர் உடல்நலக்குறைவு காரணமாக, நேற்று முன் தினம் காலமானார். நேற்று மாலை இறுதி அஞ்சலி செலுத்தப்பட்டு, அரசு மரியாதை உடன் பாரிக்கர் உடல் மிராமர் கடற்கரையில் தகனம் செய்யப்பட்டது. இதையடுத்து புதிய முதல்வர் யார் என்ற கேள்வி எழுந்தது. 

40 உறுப்பினர்கள் கொண்ட கோவா சட்டமன்றத்தில் பாஜக 12, காங்கிரஸ் 15 உறுப்பினர்கள் இருக்கின்றனர். கோவா பார்வர்டு கட்சி 3, எம்.ஜி.பி 3, சுயேட்சைகள் 3 பேர் உள்ளனர். மேற்கூறிய சிறிய கட்சிகளின் 9 உறுப்பினர்கள் உடன் கூட்டணி சேர்ந்து, மொத்தம் 21 உறுப்பினர்கள் உடன் பாஜக ஆட்சி நடத்தி வருகிறது. 

பாஜக முதல்வர் மறைவு; ஆட்சியமைக்க உரிமை கோரும் காங்கிரஸ் - கோவா அரசியலில் பரபரப்பு! 
காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்ற 19 இடங்களில், 2 உறுப்பினர்கள் மறைவால் காலியானது. மேலும் 2 உறுப்பினர்கள் கடந்த ஆண்டு ராஜினாமா செய்தனர். 





இதற்கிடையில் தனிப்பெரும் கட்சியாக இருக்கும் தங்களுக்கு ஆட்சி அமைக்க அழைப்பு விடுக்க வேண்டும் என்று ஆளுநர் மிருதுளா சின்ஹாவிடம் காங்கிரஸ் கட்சி கோரிக்கை விடுத்தது. இதனால் கோவா மாநிலத்தில் அரசியல் குழப்பம் நிலவியது. புதிய முதல்வரைத் தேர்ந்தெடுக்க பாஜக கூட்டணி கட்சிகள் ஆலோசனை நடத்தி வந்தன. 

இதையடுத்து அமித்ஷா தலைமையில் பாஜக எம்.எல்.ஏக்கள் கூட்டம் நடைபெற்றது. அதில், கோவா சபாநாயகராக இருந்த பிரமோத் சாவந்த்தை புதிய முதல்வராக நியமிக்க முடிவு செய்யப்பட்டது. இதற்கு கூட்டணி கட்சிகளான மகாராஷ்டிரவாடி கோமந்தக் கட்சி, கோவா பார்வர்டு கட்சி உள்ளிட்டவை சம்மதம் தெரிவித்தன. 

இதையடுத்து இன்று அதிகாலை 2 மணியளவில் பிரமோத் சாவந்த்(45), கோவா மாநிலத்தின் புதிய முதல்வராக பதவியேற்றுக் கொண்டார். இவர் இளங்கலை ஆயுர்வேத மருத்துவர் பட்டம் பெற்றுள்ளார். இதையடுத்து சமூகப் பணியில் முதுகலைப் பட்டம் பெற்றார். 

இவரது மனைவி சுலக்‌ஷனா, கோவா மாநில பாஜக மகிளா மோர்ச்சா பிரிவின் தலைவராக இருக்கிறார். புதிய முதல்வருக்கான தேர்வில், கடந்த சில மாதங்களாகவே பிரமோத் சாவந்த் பெயர் பரிசீலனையில் இருந்து வந்தது குறிப்பிடத்தக்கது.

 
Like Reply


Messages In This Thread
RE: கரண்ட் affairs தமிழில் - by johnypowas - 19-03-2019, 11:32 AM



Users browsing this thread: 87 Guest(s)