30-11-2020, 07:49 AM
"மார்னிங் உங்களை பார்க்கணும்னு எவ்ளோ ஆசையா வந்தேன் தெரியுமா, எச்.ஓ.டி ஒரு வேலை குடுத்துட்டாரு, பச்… அதனால தான் மார்னிங் முடில சாரி கிரிஷ், உங்களை நா ரொம்ப மிஸ் பண்ணேன் தெரியுமா, நீங்களும் என்ன மிஸ் பண்ணி இருப்பிங்கன்னு எனக்கு தெரியும் இன்னைக்கு என்கூட லன்ச்க்கு ஜாய்ன் பண்றீங்க தானே?? " என அந்த அழகிய யுவதி கேட்பவர்கள் காலையில் இவள் வந்து பார்க்காததுதால் தான் இவன் கோபமாக உள்ளது போலவும், இருவரும் சேர்ந்து உணவு உண்பது தான் இயல்பு போலவும் பேசிவைத்ததில் பொன்னிற மேனியனுக்கோ கட்டுப்படுத்த முடியாத எரிச்சல், அதை சிறிதும் மறக்காத குரலில்,
"ஜஸ்ட் கால் மீ ஆர்.கே, மார்னிங் நீங்க வந்து இருந்தாலும் என்னை பார்த்து இருக்க முடியாது, நான் பிஸியா இருந்தேன், சாரி நானும் ராதாவும் சாப்பிட போறதா ஏற்கனவே முடிவு பண்ணிட்டோம், சோ…. பை" என அதே எரிச்சலுடன் பேச அந்த அழகிய யுவதியின் முகத்தில் இவனின் அலட்சியத்தால் இவனிடம் செல்லுபடியாகாதா கோவத்தின் சாயல். அதோட பேச்சு முடிந்தது என திரும்பிய ராகவ் தன் பின்னால் வந்த கார்மேகத்தை எங்கே என தேடி , வாசலில் தேங்கிய அவளை " அங்கேயே ஏன் நிக்கிற, வா ராதா போகலாம்" என அழைத்தான்.
இரண்டு வருடமாக இவளும் தான் ஒரு நாளேனும் அவனோடு உணவு குறைந்த பட்சம் ஒரு காபி அருந்த எத்தனை விதமாக அழைத்து பார்த்தும் அவனின் பதில் எப்பவுமே பெரிய நோ தான். அதில் ஒரு பெரிய திருப்தி என்னவென்றால் அவன் இதுவரை இவளோடு மட்டும் இல்லை வேறு யாரோடும் சென்றதும் இல்லை. இன்று பொன்னிற மேனியன் ராதா என்றதும் இந்த கல்லூரியே பின்னால் சுற்றும் தன்னை விட அப்படி என அவள் அழகி என இவனின் குரலில் திரும்பி ராதிகாவை நோக்கிய அந்த அழகிய யுவதியின் உள்ளம் திகுதிகுவென எரிந்தது, அந்த கோவத்தை ஒரு அலட்சிய பார்வையாக ராதிகாவை நோக்கி செலுத்தி, " ஓ… இவங்க தான் அந்த ராதாவா,ஏன் ஆர்.கே உங்க டேஸ்ட் இவ்ளோ மட்டமா இருக்கு, உங்க அழகுக்கு இந்த மாதிரி ஆளுங்க கூட எல்லாம் நீங்க பேசுறதே அதிகம் இதுல லன்ச் வேற, இந்த லச்சனத்துல, இந்த ரதிக்காக என் கூட சாப்பிட வர மாட்டேன்னு வேற சொல்றிங்க"