அன்பிற்கு உண்டோ அடைக்கும் தாழ்
#49
விடியல் - 2 


இடம்: வைஷ்ணவியின் மாமியார் இல்லம்
நாள்: ஜனவரி 1 2020 
நேரம்: காலை 9 : 25 மணி

வைஷ்ணவி அவளின் அத்தையின் வீட்டிற்கு சென்றாள், அங்கே அவளின் அத்தை அகல்யாவிற்கு சாப்பாடு ஊட்டி கொண்டு இருந்தாள், அகல்யாவும் ஒரு ஒரு வாய் சாப்பிட்டு கொண்டு விளையாடி கொண்டு இருந்தாள். வைஷ்ணவி அதை பார்த்ததும் லேசாக ஒரு புன்னகை சிந்தி விட்டு வீட்டுக்குள் வந்தாள்

வைஷ்ணவி: என்ன அத்தை இப்ப தான் டிபன் சாப்பிடுறீங்களா, பாப்பா இப்ப தான் சாப்பிடுற போல, அப்ப நீங்க இனி தான் சாப்பிடணுமா

அத்தை: இனி தான் சாப்பிடணும் மா, அகல்யா சாப்பிட்டு முடிக்கட்டும், நம்ம ஒண்ணா சாப்பிடலாம், ஆமா கந்தன் எங்க அள காணும், அவனை கூட்டிட்டு வரலையா

வைஷ்ணவி: அத்தை அவரு எப்பவும் போல குடிச்சுட்டு வந்துட்டாரு, இன்னும் அசதியா தூங்குறாரு, அதான் வீட்டை வெளி பக்கமா பூட்டிட்டு வந்து இருக்கேன், அகல்யாவை கூட்டிட்டு சீக்கிரம் அங்க போகணும், இல்லனா முழிச்சு வீட்டை ஒரு வலி பன்னிடுவாரு

அத்தை: (மெல்ல பெருமூச்சு விட்ட படி) கல்யாணம் பண்ணியும் பொறுப்பு வராம இன்னும் எத்தனை நாள் உன்னையே கஷ்ட படுத்த போறானோ, இவனை நம்பி நீ படிக்கிற வயசுல உன்னோட மனச பறிகொடுத்துட்ட, வருஷம் தான் எறிகிட்டு போகுது ஆனா அவன் திருந்துர பாடு இல்லை

வைஷ்ணவி: அத்தை, என்ன இருந்தாலும் அவரு உங்க மகன், நீங்களே இப்படி வருத்தப்பட்டு பேசுனா எப்படி, நம்ம தான் அவரை கொஞ்சம் கொஞ்சமா மாத்தணும், இப்ப வாடகை ஆட்டோ ஓட்டுற அவரை கொஞ்சம் கொஞ்சமா பேசி அவருக்குனு சொந்தமா மூணு இல்லனா நாலு ஆட்டோ வச்சுட்டு வாடகைக்கு விடணும், இன்னும் எத்தனை நாலு தான் நானே வேலைக்கும் போய்ட்டு, வீட்டையும் பார்த்துக்க போறேன்னு தெரியல அத்தை, பாப்பா வேற வளந்துட்டா, அவளுக்கு படிப்பு பார்க்கணும், வீட்ல சமையல் வேலை, மத்த வேலை எல்லாம் பார்க்கணும் ரொம்ப அசதியா இருக்கு அத்தை, நான் சரியா தூங்கியே பல மாசம் ஆச்சு

அத்தை: புரியுது மா, நான் அங்க வந்து தங்கலாம், ஆனா எனக்கும் என் பையனும் எப்பவும் ஆகாது, இந்த வயசான காலத்துல அவன் கிட்ட எல்லாம் பேச்சு கேக்க முடியாது, அவன் பெத்தவங்களே மதிக்க மாட்டான், இப்ப கட்டுன பொண்டாட்டி உன்னயும் மதிக்கமா தான் இருக்கான், எப்ப தான் இவனுக்கு ஒரு பொறுப்பு வந்து பொறுப்பான குடும்ப தலைவரா நடந்துக்க போறானோ தெரியல 

வைஷ்ணவி: நம்புவோம் அத்தை, அத தவிர நம்மால ஒன்னும் பண்ண முடியாது, நம்ம பேச வேண்டியது எல்லாம் பேசிட்டோம், ஆனா இன்னும் அவரு எப்பவும் போல குடிச்சுட்டு தான் இருக்காரு, அவரா குடும்ப சூழ்நிலை எல்லாம் புரிஞ்சிக்கணும் அப்ப தான் எல்லாருக்கும் நல்லது அத்தை, நம்ம வேண்டுதல் நிச்சயம் ஒரு நாள் பழிக்கும் அத்தை, நம்பிக்கையை இழக்க வேண்டாம்

அத்தை: ஹ்ம்ம் சரி வைஷ்ணவி, நீயே இவ்ளோ தைரியமா இருக்கும்போது எனக்கு என்ன கவலை நீ நிச்சயம் என்னோட புள்ளை மனச மாத்தி அவனை நல்ல வழிக்கு கொண்டு வந்துருவ, அதுல எனக்கு எந்த வித சந்தேகமும் இல்லை

வைஷ்ணவி: ஹ்ம்ம் நம்புவோம் அத்தை, சரி வாங்க சாப்பிடலாம், எனக்கு பசிக்குது நான் வீட்ல ஏதும் சமைக்கல, இங்கேயே சாப்பிட்டு கிளம்புறேன்

அத்தை: கை கழுவிட்டு வா மா, இட்லி சாம்பார் வச்சு இருக்கேன் சாப்பிடு

வைஷ்ணவி: சரிங்க அத்தை
இப்படிக்கு 
Loveyourself1990

என்னுடைய (கதைகள்) திரிகள்:

காதலுக்கு வயதில்லை 
https://xossipy.com/showthread.php?tid=31384

காலம் என் கையில் 
https://xossipy.com/showthread.php?tid=31598

அன்பிற்கு உண்டோ அடைக்கும் தாழ்
https://xossipy.com/thread-32596.html
[+] 1 user Likes Loveyourself1990's post
Like Reply


Messages In This Thread
RE: அன்பிற்கு உண்டோ அடைக்கும் தாழ் - by Loveyourself1990 - 26-11-2020, 09:04 PM



Users browsing this thread: 5 Guest(s)