18-03-2019, 09:47 AM
துணை முதல்வரும் அதிமுக ஒருங்கினைப்பாளருமான ஓ. பன்னீர்செல்வத்தின் மகன் ரவீந்திரநாத்துக்கு தேனி தொகுதியில் போட்டியிட வாய்ப்ப்ய் வழங்கப்பட்டுள்ளது. முன்னாள் சபாநாயகர் பி.எச்.பாண்டியனின் மகன் மனோஜ் பாண்டியனுக்கு திருநெல்வேலி தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது.
கருணாநிதி, ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு இரு கட்சிகளிலும் வாரிசுகள் வாய்ப்புகள் வாரி வழங்கப்பட்டுள்ளன. திமுகவில் 35 சதவீத இடங்களும் அதிமுகவில் 25 சதவீத இடங்களும் வாரிசுகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன. ஆனால், இந்த விஷயத்தில் அதிமுகவை திமுக ஓவர் டேக் செய்துவிட்டது. குறிப்பாக சென்னையில் உள்ள மூன்று தொகுதிகளிலும் திமுகவில் வாரிசுகளே களமிறக்கப்பட்டுள்ளனர். வாரிசுகளுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது சமூக ஊடங்களில் விவாதப் பொருளாக மாறியிருக்கிறது