22-11-2020, 09:36 PM
அத்தியாயம் - 29
சென்னை வடபழனி நெடுஞ்சாலை
அக்டோபர் 4 2020 இரவு 10 .30 மணி
ராதா அந்த வணிக வளாகத்தில் உள்ள கார் பார்க்கிங்கில் நடந்த சம்பவத்தை நினைத்தபடி ஏதும் பேசாமல் ஜன்னல் வழியே வெளிப்புறத்தை நோட்டமிட்ட படி அமைதியாக காரில் பயணம் செய்து கொண்டு இருந்தாள், அவளின் கண்கள் அவளையும் அறியாமல் கலங்கிக்கொண்டு இருந்தது.அந்த பெண்மணி போனில் பேசிய வார்த்தைகள் திரும்ப திரும்ப ராதாவின் காதுகளில் ஒளிந்துகொண்டு இருந்தது. அசோக்கிற்கு நடந்தது ஒன்றும் தெரியாததால் ஒன்றும் புரியாமல், எதற்கு இவள் இப்பொழுது கண் கலங்கினாள், என்று நினைத்து அவனும் கலக்கத்துடன் வீட்டுக்கு வண்டியை ஓட்டிக்கொண்டு இருந்தான், மெல்ல அவளிடம் பேசலாமா, என்று நினைத்தபடி, மெல்ல கியர்இன் இருந்த அவனின் கையை எடுத்து மெல்ல தங்கையின் மடியில் வைத்தான்
அசோக்: ராதா, ராதா, என்ன மா ஆச்சு, வரும்போது ரொம்ப சந்தோசமா பேசிட்டே வந்த, இப்ப எதையோ பறிகொடுத்த மாதிரி வரியே என்ன ஆச்சு மா, அண்ணா ஏதாச்சும் உனக்கு பிடிக்காத மாதிரி நடந்துக்கிட்டானா டா, எதுனாலும் சொல்லு மா, அண்ணா கண்டிப்பா திருத்திக்கிறேன் மா, ஆனா உன்னோட இந்த மவுனம் எனக்கு ஒரு மாறி கஷ்டமா இருக்கு மா.
ராதா: ஒன்னும் இல்ல அண்ணா நீங்க ஒன்னுமே பண்ணல ஆனா எனக்கு சில பழைய விஷயம் எல்லாம் நெனச்சா எனக்கு ஒரு மாறி கஷ்டமா இருக்கு (விசும்பி கொன்டே)
அசோக்: புரியலையே டா ராதா என்ன டா யோசிக்கிற, எதுனாலும் அண்ணா கிட்ட மனசு விட்டு சொல்லு டா, அண்ணா உன்னோட வலிய கண்டிப்பா போக்குறதுக்கு என்னால முடிஞ்சதா செய்வேன் டா
ராதா: அண்ணா, எனக்கு அம்மாவை நெனச்சா ஒரு மாதிரி கஷ்டமா இருக்கு அண்ணா
அசோக்: புரியல டா ராதா, அம்மாக்கு என்ன டா, அன்பான பொண்ணு நீ இருக்க, பாசமா பாத்துக்க நான் இருக்கேன் அப்பறம் என்ன டா கண்ணா கவலை
ராதா: இல்லை அண்ணா, அம்மா ரொம்ப கஷ்ட பட்டு இருக்காங்க அண்ணா வாழ்க்கைல, அது நான் கண்கூட பார்த்து இருக்கேன், அவங்க இனி அப்படி கஷ்டப்பட கூடாது அண்ணா
அசோக்: கண்டிப்பா அம்மா இனி எதுக்கும் கலங்க மாட்டாங்க டா ராதா நம்ம நல்லா பார்த்துக்கலாம், ஆமா இப்ப என்ன ஆச்சு உனக்கு, ஏன் இப்படி மனசு கஷ்டமா பேசுற, இவ்ளோ நேரம் சந்தோசமா சிரிச்ச படி தானே இருந்த, இப்ப என்ன ஆச்சு என்னோட ராதாவுக்கு
ராதா மெல்ல அண்ணனை ஏக்கமாக பார்த்து அங்கு நடந்தை அனைத்தும் விவரிக்க தொடங்கினாள், அதை சொல்லிக்கொண்டு இருக்கும் போதே அவளின் கண்களில் கண்ணீர் துளி எட்டி பார்த்தது, அசோக்கும் தங்கை சொல்வதை ஒரு வித சோக முகத்துடன் கேட்டுக்கொண்டு இருந்தான், இப்பொழுது அவனுக்கு நடந்தது ஒரு அளவு புரிய தொடங்கியது, ராதா, அம்மாவை அந்த இடத்தில வைத்து பார்த்து கலங்கிக்கிறாள் என்று அவனின் மனம் வெதும்பியது, இருவரும் காரில் ஒருவரின் ஒருவர் முகத்தை பார்த்தபடி கலங்கிய கண்களுடன் அமர்ந்துகொண்டு இருந்தனர்.
அசோக்: கண்ணா, நீ மனசுல என்னத்த நெனச்சு கவலை படுறானு எனக்கு நல்லா புரியுது டா, அண்ணா இத பத்தி உங்கிட்ட பேசலாமா கூட தெரியல, ஆனா அண்ணா ஒன்னு மட்டும் சொல்றேன் டா, இனி நம்ம அம்மா அந்த மாரி கஷ்டம் எல்லாம் பட மாட்டாங்க டா, நம்ம அம்மாவை நம்ம நல்லா ராணி மாதிரி பாத்துக்கலாம் டா, அவங்க தான் நம்ம குடும்பம் ஓட ஆணி வேரு டா, அவங்கள நம்ம எப்பவும் சந்தோசமா பார்த்துப்போம் டா ராதா
ராதா: (மெல்ல அண்ணனின் கைகளை பற்றிக்கொண்டு) அண்ணா, அம்மா ரொம்ப நல்லவங்க அண்ணா, உனக்கு அவங்கள பத்தி எவ்ளோ தெரியுமு எனக்கு தெரியாது, ஆனா நான் அவங்க கூட பதிமூணு வருஷம் வாழ்ந்து இருக்கேன் அண்ணா, அவங்க எண்ணெயை அவங்க மகளா தத்து எடுக்கும் போது எனக்கு ஏழு வயசு அண்ணா, அப்ப நம்ம அம்மாக்கு ஒரு இருபத்தி ஏழு வயசு தான் இருக்கும், அவங்க நெனச்சா வேற ஒரு கல்யாணம் பண்ணிட்டு அவங்களுக்கு பிடிச்ச மாதிரி வாழ்ந்து இருக்கலாம், ஆனா அந்த வயசுல அம்மா அவங்க கசப்பான வாழ்க்கைனால, எல்லா ஆம்பிளையும் தப்பானவங்க தான், இருந்தாங்க, எண்ணெயை அவங்க பொண்ணா தத்து எடுத்தாங்க ஆனா என்ன அவங்க சொந்த பொண்ணு மாதிரி தான் வளத்தாங்க, எனக்கு நல்லா படிப்பை குடுத்தாங்க, நல்லா அன்ப குடுத்தாங்க, என்னோட கண்ணுல இருந்து ஒரு சொட்டு கண்ணீர் வராம பார்த்துக்கிட்டாங்க, அப்படி பட்ட அம்மாக்கு நான் என்ன அண்ணா கைமாறு செய்ய போறேன்
அசோக்: நீ நல்லா படிச்சு அம்மாக்கு பெருமை சேர்த்தாலே போதும் டா ராதா, எனக்கு அம்மா எவ்ளோ கஷ்ட பட்டு இருப்பாங்கன்னு நல்லா புரியது, அவங்க சந்தோசமா இனி இருப்பாங்க டா
ராதா: எப்பவும் எங்களை இப்படியே பார்த்தப்ப தானே அண்ணா, உனக்குன்னு கல்யாணம் ஆகிட்டா, அம்மாவை விட்டுற மாட்ட தானே
இப்படிக்கு
Loveyourself1990
என்னுடைய (கதைகள்) திரிகள்:
காதலுக்கு வயதில்லை
https://xossipy.com/showthread.php?tid=31384
காலம் என் கையில்
https://xossipy.com/showthread.php?tid=31598
அன்பிற்கு உண்டோ அடைக்கும் தாழ்
https://xossipy.com/thread-32596.html
Loveyourself1990
என்னுடைய (கதைகள்) திரிகள்:
காதலுக்கு வயதில்லை
https://xossipy.com/showthread.php?tid=31384
காலம் என் கையில்
https://xossipy.com/showthread.php?tid=31598
அன்பிற்கு உண்டோ அடைக்கும் தாழ்
https://xossipy.com/thread-32596.html