17-03-2019, 10:04 AM
உண்மை கதை தான் என்றாலும், பாசம், சென்டிமெண்ட், காதல், நட்பு என அனைத்தையும் சேர்த்து திரைக்கதை அமைத்து இயக்கியிருக்கிறார் தினேஷ் பாபு. படம் தொடக்கத்தில் இருந்து க்ளைமாக்ஸ் வரை எதார்த்தத்தை மீறாமல் சீராகவும், சிறப்பாகவும் எடுத்திருக்கிறார். பக்தி படம் என்பதற்காக, சதா சாமி புராணம் பாடாமல், வெகுஜன மக்கள் ரசிக்கக் கூடிய வகையில் படத்தை எடுத்துள்ளார் இயக்குனர். க்ளைமாக்ஸ் காட்சி சிலிர்ப்பை ஏற்படுத்துகிறது.
பக்தி தான் பிரதானம் என்றாலும், படத்தில் காட்டப்பட்டுள்ள அப்பா - மகன் உறவு அனைவராலும் ரசிக்கும் படியாக உள்ளது. அதேபோல், மிகையில்லாமல் காட்டப்படும் ஆன்மீகம் சம்மந்தப்பட்ட காட்சிகளும், திகட்டாத இனிப்பாக இருக்கிறது. அதேபோல், தமிழ் வசனங்களும், டப்பிங்கும், இது ஒரு மலையாள டப்பிங் படம் என்ற உணர்வை ஏற்படுத்தாத வகையில் இருக்கிறது.
நடிகர் சாய்குமார் ஒரு எக்சாம்பிள் அப்பாவாக வாழ்ந்திருக்கிறார். நம்முடைய அப்பாவும் இப்படி தான் இருக்க வேண்டும் என பசங்க நினைக்கும் அளவிற்கு எதார்த்தமாக நடித்துள்ளார். கண்டிப்பான தாயாக வரும் சாந்தி கிருஷ்ணா, நம் அம்மாக்களை நினைவூட்டுகிறார்