Thread Rating:
  • 5 Vote(s) - 3.4 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
தமிழ் திரைப்பட செய்திகள்
[Image: nedunalvadai%20heroine%20-%20Copy.jpg]


படத்தின் அடிப்படையான பிரச்சனையாக சொல்லப்படுவது கருவாத்தேவர் குடும்பத்தின் வறுமைதான். ஆனால் அதை உணர்த்துவதற்கான காட்சிகளோ, குறியீடுகளோ, பின்னணிகளோ சரியாக இல்லை. இறுதிக்காட்சிக்கு முன்னால் வரும் தேவையற்ற அந்த சண்டைக்காட்சியும் அதற்கான சூழலுமே கூட குழப்பத்தையும் கேள்வியையுமே உண்டாக்குகிறது. ஆனால் இறுதியில் காதலர்கள் இருவரும் சந்தித்துக் கொள்வதாய் இருந்த நாளின் இரவில் என்ன நடந்தது என்பது உணர்வாழமிக்க காட்சி. அந்தக்  காட்சியின் காரணமும் படமாக்கப்பட்ட விதமும் நடிகர்களின் நடிப்பும் கனகச்சிதமாய் இருந்தது. இரு வேறு துருவங்களில் இருந்து வெளிப்படும் அன்பு, ஒன்று சேர நினைக்கிறது. இன்னொன்று தவிர்க்க நினைக்கிறது. இரண்டின் பின்னால் இருக்கும் காரணமும் அன்புதான். இந்தக் காட்சியில் இருக்கும் இந்த அழகான முரணும் அடர்த்தியும் அசலாகவும் இயல்பாகவும் இருந்தன.

 இப்படி தவிர்க்க முடியாத காரணங்களுக்காக, அன்பின் தேவைகளுக்காக, உறவுகளின் நன்மைகளுக்காகப் பிரிந்துபோன உறவுகள் எத்தனை எத்தனை? அந்த தருணம் எதிர்மறையாக பதிவாகாமல், சூழலின் யதார்த்தங்கள் கோரும் வேறு வழியற்ற முடிவாக நேர்மறையாக பதிவாகியிருப்பது சிறப்பு. காதலின் பிரிவு என்பதை பெரும்பாலும் தவறவிடப்பட்ட தருணங்களாகவே காட்சிப்படுத்தும் தமிழ் சினிமாவில், தேர்ந்தெடுக்கும் கையறு நிலையாக பதியவைத்திருக்கிறது அந்த காட்சி.  அதேபோல சேராத காதலை நினைத்து கடைசி வரை தனியே வாழ்வதற்கு மாற்றான ஒரு முடிவை அழகாக விளக்கியதும் சிறப்பு.


ஆனால் அந்தக் காட்சியில் இருந்த ஆழமும் நேர்த்தியும் படமெங்கிலும் இருந்திருந்தால், கதைக்கு அடிப்படையான காதலும் உறவு சிக்கல்களும் நேர்த்தியாக பதிவு செய்யப்பட்டிருந்தால் நிச்சயம் ஒரு முழுமையான நிறைவான படமாக உருவெடுத்திருக்கும் நெடுநல்வாடை 
Like Reply


Messages In This Thread
RE: தமிழ் திரைப்பட செய்திகள் - by johnypowas - 17-03-2019, 09:59 AM



Users browsing this thread: 10 Guest(s)