11-11-2020, 07:41 PM
(This post was last modified: 11-11-2020, 08:28 PM by Doyencamphor. Edited 2 times in total. Edited 2 times in total.)
பாகம் - 44
பெற்றோருக்கு என்மேல் பெரிதாக பாசம் இல்லை, தாத்தாவும் ஆச்சிகளும் இன்னும் எவ்வளவு நாளைக்கு இருப்பார்கள் என்று தெரியாது, எனக்கென்று வாழ்க்கையில் இருந்த பிடித்தம் மது மட்டும்தான். ஆனால் இன்று அவளே தன் வாழ்க்கையில் இன்னொருத்தன் இருக்கிறான் என்று சொல்ல, உயிரற்ற உணர்வற்ற ஒரு பிணமாய் அங்கு நின்று இருந்தேன். எவ்வளவு நேரம் நின்று இருப்பேன் என்று தெரியவில்லை, யாரோ ஒருவர் வந்து
"யாருப்பா நீ எதுக்கு இங்க நிக்குற?" அந்த தெருவில் வசிப்பவர் ஆக இருக்கலாம்.
கலங்கியிருந்த கண்களைத் துடைத்துவிட்டு, அவரை பார்க்க, என் மேல் பரிதாபம் கொண்டு மேலும் கேள்வி கேட்காமல் திரும்பிச் சென்றுவிட்டார். இப்படி யாரென்று தெரியாதவர்கள் எல்லாம், என் மேல் கரிசனம் காட்ட, அதற்கு காரணம் நான் உயருக்கு மேலாய் நினைத்த மது தான் காரணம் என்று எண்ணம் என் பித்தம் ஏறியது.
மூச்சு முட்டிவது போல் இருக்க, பைக் எடுத்துக்கொண்டு கிளம்பினேன், ஏதோ ஒரு கடையில் நிறுத்தி சிகரட் பாக்கெட் ஒன்று வாங்கினேன். ஒரு சிகரெட் எடுத்து பற்றவைத்து, உள்ளிழுத்த அடுத்த நொடி உள்ளிலுத்த வேகத்தைவிட, இருமடங்கு வேகத்தில், நுரையீரல் புகையை, இருமலோடு வெளியே தள்ள, உச்சயில் பிடித்தது. நெஞ்சில் கைவைத்து நான் இரும, கடைக்காரன் சிரித்தான், அவமானமாக இருந்தது. அவனை முறைத்து விட்டு, கையில் இருந்த சிகரெட்டை தூர எரிந்துவிட்டு, பைக்கை எடுத்தேன். அந்த கடைக்காரனின் கண்ணில் படாத தூரம் சென்றதும், வண்டியை நிறுத்தேன்.
மீண்டும் அவள் எண்ணம், மணிகண்டன் என்று என் முழு பெயரை சொல்லி மது அழைத்ததாக எனக்கு நினைவே இல்லை. கடந்த இரண்டு, மூன்று வருடங்களாக மணி என்று கூட அழைத்ததாக நினைவில்லை. "டேய்!!, டா!!, வா!!, போ!!” தான். "பாப்பா!! பாப்பா!!” என்னை கொஞ்சிக் கொண்டிருந்தவள், "மணிகண்டன்!! அவ்வளவுதான்!! முடிஞ்சு போச்சு!!" என்று மிகவும் சாதாரணமாக சொல்லிவிட்டாள். அதை விடவும், அந்த ரஞ்சூவும், அவளும் பேசிக்கொண்டதை நினைத்தால் என் மனதெல்லாம் தீயாய் சுட்டது.
ஏனோ எனக்கு சிகரட் புகைத்தே ஆகவேண்டும் போல் இருந்தது. மீண்டும் ஒரு சிகரட் எடுத்து பற்ற வைத்தேன். பற்ற வைத்தவுடன், சிகிரெட் புகை கண்களை தீண்ட, இரண்டு கண்களும் எரிந்தது, கண்ணீர் வந்தது, இருந்தும் விடவில்லை. சிகிரெட் புகை தந்த எரிச்சலில் கண்கள் சூடாக இருக்க, மீண்டும் சிகிரெட்டை வாயில் வைத்து புகை உள்ளிழுத்தேன். முன்னைக்காட்டிலும் இருமல் அதிகமாக வர, தலையெல்லாம் "வின்!! வின்!!" என்று தெறித்தது. என் சுவாச குழாயை மொத்தமாக உருவி எடுப்பது போல் வலிக்க, என் கண்களில் நட்சத்திரம் மின்னியது. ஒழுகிய மூக்கை சீந்தி தூர எறிந்துவிடு, விரல்களை பாண்ட்டில் துடைத்துக்கொண்டு, கண்களில் வழிந்த கண்ணீரை சட்டையில் துடைத்துக் கொண்டேன்.
என்னை ஆசுவாசப் படுத்தினேன், அடுத்த புகையை இழுக்க. இன்று இரண்டில் ஒன்று பார்க்காமல் விடுவதில்லை என்று உறுதியாய் இருந்தேன். ஆழமாக ஐந்தாறு முறை மூச்சு விட்டேன், ஆழமாக மூச்சு விட்டதற்கே இருமல் வர, மூக்கின் வழியாக இல்லாமல் வாய்வழியாக காற்றை உள்ளிழுத்து, என்னை ஆசுவாசப் படுத்திக் கொண்டேன். வாயெல்லாம் ஏதோ துருப்பிடித்த இரும்பை தின்றது போன்ற சுவை. புகையை உள்ளே இழுப்பதற்கு என் உடல் தயார் என்று தோன்றவே, கண்களை மூடிக்கொண்டு, மூச்சு விடுவதை நிறுத்தி, சிகரெட்டை, மீண்டும் என் உதடுகளை பொருத்தினேன். ஏற்கனவே புகையை உள்ளிழுத்து பட்ட வலியின் காரணமாக, மெதுவாக, நிதானமாக, கொஞ்சமே கொஞ்சம், புகையை உள்ளிழுத்தேன். சிகரெட்டை உதடுகளில் இருந்து எடுத்த அடுத்த நொடி, அந்த புகை வெளியேறியது. அதற்கே என் முதல் puff வெற்றிகரமாக இழுத்தது போல் ஒரு சந்தோஷம். மீண்டும் ஒரு முறை மூச்சை இழுத்து விட்டு மீண்டும் சிகரெட்டை உதடுகளின் இடுக்கில் வைத்தேன், புகையை உள்ளிலுத்தேன்.
இந்த முறை, கவனமாக சிகரெட்டை எடுத்தவுடன் வாயை மூடிக்கொண்டேன். மூச்சை உள்ளிழுத்து, புகை சுவாசக்குழாயில் தள்ள ஏனோ தோன்றவில்லை. இழுத்த புகையை அப்படியே ஐந்து நொடி, வாயிலிருந்து வைத்திருந்தேன், பின் உதடுகளை பிரித்து நான் ஊதும் முன்பே, பாதி புகை வெளியேறி இருக்க, மீதியை நான் ஊதி தள்ளினேன். என் வாழ்வும், சாவும், அந்த ஒரு puff-ல் இருந்ததை போலவும், அதை வெற்றிகரமாக செய்து முடித்து, என் உயிரே நான் காப்பாற்றிக் கொண்டது போல, நான் இருந்தா சூழ்நிலைக்கு பொருந்தாத ஒரு வெற்றிக் களிப்பு என்னிடம். யாராவது என்னை கவனிக்க கவனிக்கிறார்களா என்று சுற்றி பார்த்தேன், அந்த தெருவில் உயிர் என்று சொல்ல, என்னை தவிர வேறு யாருமில்லை என்று அறிந்ததும் ஒரு சிறிய ஏமாற்றம்.
முகம் முழுக்க ஆனந்தத்தின் ரேகையுடன் ஒரு சிரிப்பு எனக்கு, உடனே என்னை பார்த்து நக்கலாக சிரித்த அந்த கடைக்காரரின் முன்பு, இதே போன்று புகையை இழுத்து, அவர் முகத்திலே ஊத வேண்டும் என்று ஒரு அடங்காத வெறி. மொத்த சிகரெட்டையும் தின்றுவிட்டு, பஞ்சு வரை பற்றி இருந்த நெருப்பு, என் விரலை தீண்டவே, கைகளை உதறியதில் சிகரெட்டை கீழே விழுந்தது, அந்த நெருப்புத் தந்த எரிச்சலில், என்னை நிகழ் உலகிற்கு கொண்டுவந்தது.
அதுவரை மரத்துப் போயிருந்த என் நெஞ்சம் உணர்வு கொள்ள, எனக்கு யாதுமாகி நின்றவள் என் வாழ்வில், இனி இல்லை என்று உணர, என் காதல் மனம் கதறி துடித்தது, வாங்கிய அடியெல்லாம் மறந்து.
"நீ பொண்டாட்டினு சொன்ன ஒரு வார்த்தைக்காக, பாய்ந்து அனைத்தவள்!! நீ கோபப்பட்ட ஒரே காரணத்துக்காக, தூக்கமில்லாமல் சாப்பிடாமல் உன்னை தேடி வந்தவள்!! நீ விளையாட்டாக அவளுக்கு மாலையிட்டு எடுத்துக்கொண்ட போட்டோவை காட்டி, அவள் சிலிர்த்து பேசியது!! ஓராயிரம் முறை காதோரத்தில் "லவ் யூ!! லவ் யூ!!“ என்று இசைத்தவள்!! நீ அழுத போதெல்லாம் மடியில் தாங்கியவள்!! ஆசைப்பட்டதெல்லாம் அவளையே கொடுத்தவள்!! உன்னை என்னதான் அவள் எண்ணப்படி ஆட்டி வைத்தாலும், "லவ் யூ!!” என்ற சொற்களுக்காக உன்னிடம் கெஞ்சி மன்றாடியவள்!!” என் நினைவலைகளில் இருந்து பொக்கிஷங்களாக பொறுக்கி பொறுக்கி எடுத்து, என் முன் நின்று வேண்டியது, அவள் மேல் காதல் கொண்ட மனது.
"அவளுக்கு, கண்டிப்பா வேற ஏதோ பிரச்சனை இருக்கு, கண்டிப்பா உனக்காக தான், நீ இதைவிட கஷ்டப்படுவேன்னு தான், இப்படி பண்ற!!. பொசசிவ்னஸ் என்று சொல்வதெல்லாம் பொய்!!, நேத்ராவும், நீயும், மாறி மாறி டார்லிங்!!டார்லிங்!!னு சொல்லும் போது வராத பொசசிவ்னஸ பொய்யா காரணம் காட்டுறா!!. அவ நம்ம மது, அவள விட்டுவிடாதே!!" மன்றாடியது, அவள் மேல் காதல் கொண்ட மனது.
"ஆமா!! ஆமா!! அவ என் மது!!, போன்ல பேசினதுதான் தப்பு!!, நேர்லயே போய் பேசிக்கொள்ளலாம்!! என்று புது ரத்தம் பாய்ந்தது போல் புறப்பட்ட என்னை,
"ஒருவேளை அவள் சொன்னது போல, அவள் வாழ்க்கையில் இன்னொருவன் இருந்தால்? அதை நேரில் பார்க்கும் நெஞ்சுறுதி உனக்கு இருக்கா?” என்னை ஆட்டி வைத்த மிருகம் கேட்ட, ஒரே கேள்வியின் உதறலில், என் உடலையும், உயிரையும் தாண்டி, ஆன்மாவரை ஒரு ஆட்டு ஆட்டியது. என்னை திரும்பத் திரும்ப காயப்படுத்தும் காதல் மனதின் செஞ்சலை நிராகரிக்க முடியாமல், என்னை அவள் கொடுத்த வலியில் இருந்து மீட்டெடுத்து காக்கும், மிருகத்தின் கேள்வியில் இருக்கும் நிதர்சனத்தை உணர முடியாமல் தவித்து இருந்தேன்.
சாகப்போகும் மனிதனின் கடைசி விண்ணப்பம் போன்ற, என் காதல் மனத்தின் கதறல் தாங்கமாட்டாமல், அந்த மிருகத்திடம் கெஞ்ச, அரை மனதுடன் ஒத்துக்கொண்டது வலியை ஏற்கப் போகும் அந்த மிருகம். குற்றுயிராய் கிடந்த என் காதலை காப்பாற்றுவதற்கு, என்னை நானே இழக்கத் தயாரானேன். உடனே மொபைலில் எடுத்து மதுவுக்கு அழைக்க, "நீங்கள் தொடர்பு கொள்ளும் நபர் தொடர்பு எல்லைக்கு அப்பால் இருக்கிறார்" என்ற கணிப்பொறியுடன், "உயிர் போகும் அவசரம், எப்படியாவது தொடர்பு எல்லைக்குள் கொண்டு வா!!” என்று கரைந்த மனதை கட்டுப்படுத்திவிட்டு, அடுத்து என்ன செய்யலாம் என்று எண்ணினேன்.
கூகுளை மன்றாடியதில், அவள் தரையிறங்கி 5 நிமிடங்கள் ஆயிற்று என்று சொல்லியது. குறைந்தது மூன்றிலிருந்து, நான்கு மணி நேரம் இலக்கில்லாமல், வெறுமையுடன், அங்கே, இங்கே என்று நின்று இருக்கிறேன் என்பதை கூட என் மனது உணரவில்லை. என் மனதின் மொத்த எண்ண ஓட்டமும், அவள் எப்பொழுது அழைப்பை எடுப்பாள் என்பதிலேயே இருந்தது. ஏறக்குறைய 40 நிமிடங்கள் திரும்ப, திரும்ப, அழைத்தும் கணிப்பொறியே பதில் சொல்லிக்கொண்டிருக்க, அதற்கு மேலும் பொறுக்கமுடியாமல் விரக்தியில், கைபேசியை விட்டெறிந்தேன். அப்படியே சோர்ந்து, அங்கேயே அமர்ந்துவிட்டேன்.
தரையில் அமர்ந்த அடுத்த நொடி, என் கைபேசி, சத்தமிட ஓடிச் சென்று கையில் எடுத்தேன், மது தான் அழைத்து இருந்தாள். விட்டெறிந்ததில், தொடுதிரை பல கீறல் விட்டிருக்க, நான் எவ்வளவோ போராடியும் அழைப்பை எடுக்க முடியவில்லை. கால் கட்டானது, என்னை நானே நொந்து கண்டேன். ஐந்து நொடி தான், மீண்டும் அவளிடமிருந்து அழைப்பு வந்தது, அழைப்பை ஏற்க மீண்டும் தொடுதிரையுடன் போராடிக் கொண்டிருந்தேன். அதுவே என் தவிப்பின் மீது இரக்கப்பட நொடியில் அழைப்பு ஏற்கப்பட்டது. உள்ளமெல்லாம், உயிர் தின்னும் பயம் அப்பிய இருக்க, மொபைலை காதில் பொருத்தினேன்.
"ஹலோ!!”
“...................” என் நா எழவில்லை
"ஹலோ!!”
“...................” மீண்டும் என் நாக்கு ஒட்டிக்கொண்டது.
"ஹலோ!!.... டேய்!! ஹலோ!!” பொறுமையில்லாமல் பதறினாள், அவளது குரலில் அப்படிஒரு தவிப்பு
“...................”
"ஹலோ!! ஏன்டா என்னை இப்படி சித்திரவதை படுத்துற!!” என்றவள், அழு ஆரம்பித்தாள். ஏனோ அவளது அழுகை, எனக்கு ஆறுதலாய் இருந்தது, புதிதாக நம்பிக்கையை விதைத்தது.
"ஹலோ!!” அவளது அழுகை, என் நாவிலிருந்து சொற்களை என்னை அறியாமல் எடுத்துக்கொண்டது.
"ஹலோ!!” சுத்தமாக அழுகை இல்லை அவளிடம்,
"தங்கியிருக்கிற அட்ரஸ் சொல்லு!!” நெஞ்சை கவிய பயத்துடன்
"இப்போ எங்க இருக்க?” பதட்டமாக கேட்டாள்
"இன்னும் ஊர்ல தான் இருக்கிறேன்!!, அட்ரஸ் சொல்லு, காலைல வர்றேன்!! உன்னை நேர்ல பாக்கணும்!!”
"ப்ளீஸ்!! its over!! புரிஞ்சுக்கோ!!” நிதானமாக, வருத்தம் தேய்ந்த குரலில் சொன்னாள்.
"மது!! என்னால முடியல மது!!” வெட்கம்விட்டு கெஞ்சினேன்.
“...................”
"நீ இல்லாம.... எப்படி பாப்பா!!” உடைந்து அழுதேன்.
“...................”
அவளிடமிருந்து ஆறுதலுக்கு கூட, ஒரு வார்த்தை இல்லை. எனக்கு தெளிவாயிற்று, அவளிடம் இருந்தா பதற்றம், தவிப்பு எல்லாம் எங்கே நான் என்னை மாய்த்துக் கொள்வேனோ என்றுதான், அதிலும் அவளுக்கு குற்றஉணர்வு ஏற்படும் என்ற சுயநலம் தான்.
"நெ....நெஜமாவே, முடிஞ்சு போச்சா!!” ஆற்ற மாட்டாமல் கேட்டேன்.
"ம்ம்!!” கொட்டினாள், இரக்கமில்லாமல்
"எப்படி மது,.… எனக்கு புரியல!!” அவளை காயப்படுத்தவிடுவது என்று உறுதிபூண்டேன்.
“...................” அவளிடமிருந்து பதிலில்லை
"எனக்கு ஒரு முடிவு தெரிஞ்சாகணும்!!” விடுவதாய் இல்லை
"என்ன தெரியணும்?” அவளது கோபம் என்னை மிருக்கமாக்கியது.
"இதுக்கு ஒரு முடிவு!!, I want a proper closure!! நீ இப்ப தெளிவா இருக்கிற மாதிரியே, என்னையும் தெளிவாக்கு, போதும்!!” முடித்துவிடுவது என்று முடிவு செய்துவிட்டேன்.
மீண்டும் ஒரு நீண்ட அமைதி இருவரிடமும், ஒரு பக்கம் மரணம், மறுபக்கம் பேரின்ப வாழ்வு என்னும் இடத்தில் மதில் மேல் புனையாக, மரணத்தின் பக்கம் வழுக்கிக் கொண்டிருக்கும் உயிரின் வலியுடன் நான்.
"ஏன், நீ என்கிட்ட "ஐ லவ் யூ!!” சொன்னதே இல்லன்னு யோசிச்சு பாத்துருக்கியா?” அவள் கேட்டதுமே, என் உயிர் அறுந்து விட்டது. என்னை அப்பியிருந்த பயம் உண்மையாக போவதை உணர்ந்து
"நேர்ல பேசலாம்!! நீ...... நீ தங்கியிருக்க அட்ரஸ் அட்ரஸ் சொல்லு!!” அவளை கண்டுபிடிப்பது அவ்வளவு கடினம் இல்லை என்று தெரிந்தும், உலறினேன், அழைப்பை துண்டித்து விட மாட்டாளா என்று ஏங்கியது என் மனம்.
"நேர்ல வந்தாலும் எதுவும் மாறப் போறது இல்ல!!” இரக்கமே காட்டவில்லை அவள்.
"பரவால்ல,கடைசியா, உன்ன ஒரு தடவ பார்க்கணும்!! என் முகத்த பார்த்து இதேயே சொல்லு, அது போதும் எனக்கு!!” மானமில்லாமல் மன்றாடினேன்.
"உன்ன கஷ்டபடுத்த கூடாதுன்னு பாக்குறேன்!!, உனக்கு அது புரிய மாட்டேங்குது. சரி நல்ல கேட்டுக்கோ, நான், உன்ன லவ் பண்ணுனேனா? இல்லையாங்குறது இருக்கட்டும்!!, நீ என்னை உண்மையாவே லவ் பண்ணுனியா?”
“...................” அவல கேள்வியில் துடித்துக் கொண்டிருந்த, ஒரு நொடி சேத்து மீண்டது. நான் பதில் சொல்லும் முன், அவளே ஆரம்பித்தாள்.
"நான் எத்தனையோ தடவ கெஞ்சியும், உன் வாயிலிருந்து ஒரு தடவையாவது "ஐ லவ் யூ!!”ன்னு வந்துருக்கா?, நான் லவ்வ சொன்னதுக்கு அதுக்கப்புறமும்!!, நமக்குள்ள எல்லாம் முடிஞ்சதுக்கு அப்புறம் கூட!!, என் பக்கத்துல இருக்குறதுக்கே கில்டியா பீல் பண்ணவன் தான நீ?” உதடு துடிக்க, அடக்க மாட்டாமல், சத்தமில்லாமல் அழுதேன்.
யாரவது என்ன சைட் அடிச்சா கூட, எனக்கு பத்திகிட்டு எரியும், அப்படி பாக்குறவங்கள பார்வையாலேயே எரிச்சுறுவேன்!!. ஆனா நீ, எவ கை கொடுத்தாலும், அவ கைய புடிச்சி குலுக்கிகிட்டு, எவ பார்த்தாலும், திருப்பி பல்ல காட்டிகிட்டு தான் தெரிஞ்ச? யாராச்சும் லவ் பண்ற பொண்ண பப்ளிக் பார்க்கிங்கில வச்சு, நீ கை வச்ச இடத்தில கை வைப்பானா? இதுக்கு மேலயும் உனக்கு எப்படி சொல்லி புரிய வைக்கிறதுன்னு எனக்கு தெரியல!!” ஒரு வேகத்தில் நான் முட்டாள்தானமாக நடந்து கொண்டதை அவள் சொன்ன அடுத்த நொடி எனக்கு புரிந்தது, எல்லாம் முடிந்து விட்டதென்று. "சாவு!!,சாவு!!சாவு!!சாவு!!சாவு!!” அது மட்டுமே என் மனதில்.
"போ..........போதும்!!” வைராக்கியம் எல்லாம் விட்டொழித்து, காதேலே வேண்டாம் என்ற என்னிடம், அவள் கருணை காட்டுவதாய் இல்லை.
"இல்ல, நான் இன்னும் பேசிமுடிக்கல, இன்னும் ரெண்டு நாள் கழிச்சு உனக்கு நான் சொன்னதுல நம்பிக்கை இல்லணு தோணும், இன்னைக்கே இத முடிச்சுக்கலாம். I too want proper closure too this!! மூணு மாசமா நாங்க லிவ் இன் ரிலேஷன்ஷிப் இருக்கோம். இன்னும் பத்து நிமிஷத்துல, நான் வீட்டுக்கு போயிடுவேன்!! வீடியோ கால் பண்றேன்!! உன் கண்ணால பாத்து தெரிஞ்சுக்கோ!!, அது ரெக்கார்ட் பண்ணி என்ன வேணாலும் பண்ணிக்கோ!! உனக்கு நான் பண்ண தப்புக்கு தண்டனையா நெனச்சுக்கிறேன்!!” இரக்கமே இல்லாமல் பேசியவள், துண்டித்து விட்டால் மொத்தமாக.
உன்னைப் போன்ற ஒரு இழி பிறவியின் உடலில் இருக்க, எனக்கு விருப்பம் இல்லை என்பது போல், என் இதயம் தாறுமாறாகத் துடித்தது. சத்தமிட்டு கதறி அழத்தொடங்கிய, சில நொடிக்குள், தெருவில் இருக்கிறேன் என்ற நினைவுவர, கண்ணீரை துடைத்துக்கொண்டு, பைக்கை எடுத்தேன். எனக்கு என் அறையில் சென்று என்னை அடைத்துக்கொள்ள வேண்டும் போல் இருந்தது. இறநூறு மீட்டர் கூட ஓட்டியிருக்க மாட்டேன், அழுகையை அடக்க முடியாமல், பைக்கை நிறுத்தியவன், ஸ்டண்ட் கூட போட தெம்பில்லாமல் அப்படியே போட்டுவிட்டு, பிளாட்ஃபார்மில் உட்கார்ந்து அழ ஆரம்பித்தேன், நடுத்தெருவில் நிற்கிறேன் என்ற நாணம் இல்லாமல்.
மொபைல் சத்தம் எழுப்ப, தீடிர் என்று வந்த சத்ததில் உடல் தூக்கிப்போட்டது எனக்கு, சரிந்து விழுந்தேன் ரோட்டில். எழுந்து நின்றேன், பத்து நிமிடம் என்றவள், ஐந்தே நிமிடத்தில் கால் செய்தாள், தொடுதிரையில் அவள் பெயர் பாரத்துமே, அதுவரை கட்டுக்குள் இருந்த மிருகம் என்னை முழுதாய் ஆட்கொள்ள, மொபைலை விட்டெறிந்தேன், அது அங்கிருந்த மின் கம்பத்தில் பட்டு மூன்று நான்கு துண்டுகளாக சிதறியது. என்னைப் பீடித்திருந்த மிருகத்தை நான் கட்டியாக பிடித்துக்கொள்ள, என் காதல் மனது தன்னைத் தனே மாய்த்துக் கொண்டது.
தன்னிச்சையாக, ஏதோ பல நாள் பழக்கம் கொண்டவன் போல், ஒரு சிகரெட்டை எடுத்து பற்ற வைத்தேன். வேண்டாம் என்று மறுத்த உடலின் கோரிக்கைக்கு செவிமடுக்க மறுத்து கட்டாயமாக புகையை உள்ளிழுத்தேன். நாலு முறை தொண்டைக்குள் இறங்கி, என் சுவாசக் குழாயை தழுவிய புகையை, குறைந்தது நூறுமடங்கு இருமலுடன், வெளியேற்றியது என் உடல். என் நெஞ்சுக்குடு ரணமாய் வலித்தது, லேசாக தலை சுற்றுவது போல் இருந்தது, தூரத்தில் எரிந்துகொண்டிருந்த மின்விளக்கு என்னை எரிக்க அருகே வருவதுபோல் தோன்றியது. வாயிலிருந்த துருப்பிடித்த இரும்பின் சுவை ஏனோ ஓங்கரிப்பை தரவில்லை, நெஞ்சம் அதைவிடவும் கசங்கது கிடந்தது.
என் நெஞ்சமெல்லாம் இறுகி, மண்டை சூடானது. என்னை ஆட்கொண்ட மிருகமோ, வெறி ஏறி நின்றது, இது எனக்கு போதவில்லை இன்னும் கொடு என்று அவளது ஒவ்வொரு சொற்களையும் நினைத்துப் பார்த்து இன்னும் வலியை வேண்டியது. அவள் கொடுத்த வலியின் அழ, அகலங்களை அளந்து பார்க்காமல் விடமாட்டேன் என்றது. ஆறு மாதகாலமாக சிறிது சிறிதாக திட்டமிட்டே அவள் என்னை விலக்கியிருக்கிறாள். அவள் என்னை காதலிக்கவில்லை என்று சொன்னதையே, ஏற்றுக்கொள்ள முடியாத என்னிடம், என் காதல் பொய் என்று சொன்ன அவளை, முதன் முதலாக முற்றிலும் வெறுத்தேன். அதற்கு அவள் சொன்ன காரணங்கள் என் மனதை கூறு போட்டன.
அதற்குள் இன்னொரு துணையை தேடிக்கொண்டு துரோகி என்று சபித்தேன். என் காதலை அவள் சந்தேகப்படுவதற்கு அவளுக்கு எந்த உரிமையுமில்லை, அப்படி சந்தேகப்படும் அவள் இனி எனக்கு தேவையும் இல்லை என்று சீரில்லாமல் என்னை சீர் செய்ய முயன்றது என் எண்ணம், எல்லவற்றையும் ஆமோதித்தேன். அவள் துரோகத்தை எண்ணிய அடுத்த நொடி என் மனதில் வந்தது சிவகாமி ஆண்ட்டிதான். என்னைப்போலவே அவளால் துன்பப்படும் இன்னொரு ஜீவன். என்னையும் அவர்கள் பிள்ளை போல் நினைத்து, அவரது வாழ்விலும், வீட்டிலும் இடமளித்த அவர்களின் மகளையே காதலித்து, அவர்களுக்குச் செய்த துரோகத்தை எண்ணி துடித்துப் போனேன். எனக்கு கிடைத்த தண்டனை சரிதான் என்று தோன்றியது எனக்கு. மது எனக்கிழைத்த துரோகத்தை காட்டிலும், நான் சிவகாமி ஆண்டிக்கு இழைத்த துரோகம், என்னை கண்டதுண்டமாக கூறு போட்டது. ஏனோ உடனே அவர்களைப் பார்க்க வேண்டுமென்றும், அவர்களிடம் மன்னிப்புக் கோரவேண்டும், அவளால் துன்பப்படும் அவர்களுக்கு ஆறுதல் சொல்ல வேண்டும் என்று தோன்ற, நேராக அவர்களது வீட்டுக்கு சென்றேன்.
ஐந்து நிமிடத்தில் அவர்கள் வீட்டின் கேட்டீன் முன் சென்று வண்டியை நிறுத்தியதும், சிறு தயக்கம் என்னில். நான் இருந்த நிலை அப்படி, அழுது வீங்கிய கண்களுடன், அர்த்த ராத்திரியில், அவர்கள் வீட்டு கதவை தட்டினால், என்ன வென்று நினைப்பார்கள். ஆறுமாத காலமாக அவளின் பேச்சை கேட்டு அவர்களை நிராகரித்தரக்கு காரணம் கேட்டாள், என்னவென்று சொல்லுவேன்?, எதை சொல்லுவேன்?. பின் அவள் என்னை போகவேண்டாம் என்று சொன்னது நினைவுக்கு வர, கண்டிப்பாக சென்றே தீருவது என்று முடிவுக்கு வந்தேன்.
உடனே அருகில் இருந்த பார்க்கிற்கு சென்றேன், கேட்டை தாண்டி குதித்தேன். அங்கிருந்த குழைாய் தண்ணீரில் முகம் கழுவி, துடைத்துக்கொண்டேன், கைகளால் தலைமுடியை முடிந்த மட்டிலும் சீர் செய்தேன்.
P.S
அவன் அழிவுக்கு, அவனே அவனை அலங்காரப் படுத்திக்கொண்டிருக்கிறான் என்று அறியாமல்.