அப்பனுக்கு பாடம் சொன்ன சுப்பன்
பாகம் - 43


மது உடனான எனது கடைசி உரையாடலும், மதுவும், அவள் அம்மாவும் பேச, நான் கேட்ட உரையாடலும் என் மனதில் திரும்பத் திரும்ப ஓடிக்கொண்டு இருந்தன. தெளிவில்லாத பித்து நிலையில் இருந்த, எனக்கு ஏதோ ஒன்று தெளிவாக புரிவது போல் இருந்தது. மதுவுக்கும் அவள் அம்மாவுக்கு நடந்த உரையாடல் எனக்கு முழுதாக புரியாவிட்டாலும், மது என்னை விட்டு விலகுவதற்கு அந்த உரையாடலுக்குப் பின்னாலுள்ள உண்மைதான் காரணம் என்பது மட்டும் தெளிவாகத் புரிந்தது. அதை உணர்ந்துகொண்ட அடுத்த நொடி இதுவரை என் வாழ்க்கையில் இல்லாத தெளிவு, எனக்கு, உண்டானதை போல உணர்ந்தேன். இதுவாக இருக்குமோ? அல்லது அதுவாக இருக்குமோ? என்று யோசிக்க ஆரம்பித்த மனதிற்கு உடனே கடிவாளம் போட்டு அடக்கினேன். என் அனுமானங்களை விட்டுவிடு மதுவிடம் பேசுவதுதான் சரியாக இருக்கும். மதுவுடன் இதைப்பற்றி பேசினால், அனைத்தையும் சுலபமாக தீர்க்கலாம் என்பது மட்டும் புரிந்தது எனக்கு.

எழுந்து சென்று முகத்தைக் கழுவினேன், ஒரு பெருமூச்சு விட்டுவிட்டு, எந்த சூழ்நிலையும் உணர்ச்சி வசப்படக்கூடாது கோபப்படக்கூடாது என்பதை மந்திரம் போல் எனக்கு நானே சொல்லி கொண்டேன்!!. இதுவரை உணர்ச்சிவசப்பட்டும் கோபப்பட்டும்தான், நான் இன்று இந்த நிலையில் இருக்கிறேன் என்பதையும் எனக்கு நானே சொல்லிக்கொண்டேன். முதலில் மதுவிடம் தெளிவாக பேசிவிட வேண்டும், அவள் எப்படி மழுப்பினாலும், மறுத்தாலும் இந்த இரண்டு உரையாடல்களின் பின்னால் இருக்கும் மொத்த உண்மையை தெரிந்துகொள்ள வேண்டும், பின் அதற்கேற்றவாறு என்ன செய்வதென்று முடிவு செய்து கொள்வோம் என்று எனக்கு நானே தெளிவுபடுத்திக்கொண்டேன்.

மதுவுக்கு அழைத்தேன், ரொம்ப நேரம் காத்திருக்க வைக்கவில்லை, நான்காவது ரீங்கிலேயே எடுத்துவிட்டாள்.

"ஹலோ!!” என்றேன் சாந்தமான குரலில்

"சொல்லு!!” அவளின் குரல், என்னை காட்டிலும், மிகவும் தெளிவாக இருந்தது, அது எனக்கு கொடுத்த நடுக்கத்தை உதறித் தள்ளிவிட்டு

"மது எங்க இருக்க?” செயலில் இறங்கினேன், புதிதாக வந்த நம்பிக்கையோடு

"என்ன வேணும்னு சொல்லு?” பிடிகொடுப்பதாக இல்லை

"உன்கிட்ட கொஞ்சம் பேசணும்!!” நானும் விடுவதாக இல்லை.

"சொல்லு!! கேட்டுகிட்டுதான் இருக்கேன்!!”

"இல்ல!! நேர்ல பேசணும்!!”

"முடியாது!! நான் கொஞ்சம் பிஸியா இருக்கேன்!! எதுவா இருந்தாலும் போன்லயே சொல்லு!!” அவள் பிடிகொடுப்பதில்லை என்பதில் தெளிவாக இருந்தாள். அவளது இந்த பிடிவாதத்தில், இழந்துகொண்டிருந்த பொறுமையை, இழுத்து பிடித்து ஒரு பெருமூச்சு விட்டுவிட்டு மீண்டும் தொடர்ந்தேன்

"பாப்பா!! என்ன பிரச்சனை இருந்தாலும் நாம சேர்ந்து ஃபேஸ் பண்ணுவோம்!! எவ்வளவு பெரிய பிரச்சனை வந்தாலும் பாத்துக்கலாம்!! நான் தாத்தாட்ட பேசுறேன்!!” ஃபோனில் இதைபற்றி பேச மனம் இல்லாவிட்டாலும், வேறு வழி தெரியவில்லை எனக்கு.

"எனக்கு ஒரு பிரச்சனையும் இல்லை!!” அதற்கு மேலும் என்னால் கட்டுப்படுத்த முடியவில்லை

"நீ பார்க்கிங்ல ஆண்ட்டி கிட்ட பேசிட்டு இருந்த நான் கேட்டேன்!!”

அமைதியானாள், ஒரு நிமிடத்துக்கு மேலும் அவளிடமிருந்து எந்த பதிலும் இல்லை

"மது!!” மொபைலின் தொடுதிரையை பார்த்து கால் கட்டாகவில்லை என்று தெரிந்துகொண்டு, மீண்டும் அவள் பேர் சொல்லி அழைத்தேன்.

"சொல்லு!!” அவள் குரலில் திரும்பியிருந்த தெளிவு, இப்பொழுது என் மனதின் அழுத்தத்தை அதிகரிக்க ஆரம்பித்து.

"நீ தான் சொல்லணும்!! என்னால முடியல!!” உறுதியெல்லாம் இழந்திருந்தேன்.

"சரி!! சொல்றேன்!! குறுக்கே பேசக்கூடாது!! எமோஷன் ஆகக்கூடாது!!
எல்லாத்துக்கும் மேல, முட்டாள்தனமா எதுவும் பண்ணிக்க மாட்டேன்னு, எனக்கு ப்ராமிஸ் பண்ணு!!” அவளின் இந்த கூற்று என் உயிர்வரை தொட்டு ஆட்டியது. மனதில் ஏற்பட்ட அழுத்த, எனக்கு மூச்சு தினரலை உண்டு பண்ணுவது போல் இருந்தது. அவளை பேசசொல்லி வற்புறுத்திய எனக்கு, அவல பேச ஆரம்பித்ததும் உதறல் எடுத்து.

"ம்ம்!!" கொட்டினேன், வார்த்தைகள் வாயில் இருந்து வரவே இல்லை

"தெளிவா வாய தொறந்து சொல்லு!!” அவள் விடவில்லை, எனக்கு துணிவில்லை. கொஞ்ச நேரம் பொருத்தவள், அதற்கு மேலும் முடியாமல் அவளே ஆரம்பித்தால்.

"முதல்ல, I have moved on in my life, அதுதான் உண்மை!!. இப்போ என் வாழ்க்கைல இன்னொருத்தன் இருக்கான்!!. இரண்டாவது எங்க அம்மாகிட்ட நான் போட்ட சண்டைக்கும்,
இதுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. புரிஞ்சுக்கோ!! எனக்கு டைம் ஆச்சு நான் கிளம்புறேன்!!. உன்ன கெஞ்சி கேக்குறேன், முட்டாள்தனமா எதுவும் பண்ணி, என்ன வாழ்க்கை ஃபுல்லா வருத்தப்பட வச்சிராத!!”.

"பாய்!!” என் பதிலை எதிர்பார்க்காமல் போனை வைத்து விட்டாள்.

மீண்டும் பித்து பிடித்தது போல் ஆனேன். அவள் வாழ்க்கையில் இன்னொருத்தன, பொத்துக் கொண்டு வந்த கோபத்தை கட்டுப்படுத்த முயன்றேன். ஆறு மாதத்துக்கு முன்னால் இதையே அவள் சொல்லி இருந்தாள், நொடியில் மிருகமாய் மாறியிருப்பேன். அவள் கொடுத்த வலியும், கடந்த ஆறு மாதமாக எங்கள் தொழிலில் நான் காட்டிய ஈடுபாடும், என்னை கொஞ்சம் பக்குவப்படுத்தி இருக்கின்றது என்று நினைக்கிறேன். அழகாமாக மூச்சை இழுத்து விட்டு, என் மனதில் இருந்த அழுத்தத்தை வெளியேற்றினேன்.

"கோபப்படாத!! கோபப்படாத!! இவ ஏதோ கேம் ஆடுறா!! அவ உன்னோட மது!! உன்ன விட்டு அவளே நினைச்சாலும் போக முடியாது!!”. போனில் பேசுவது வேலைக்காகாது என்று முடிவு செய்துவிட்டு, அவளை நேரில் பார்ப்பது என்று கிளம்பினேன் அவள் வீட்டுக்கு.

************

பத்து நிமிடம் கழித்து, அவளது வீட்டின் அருகே இருந்த பார்க்கிங் வாயிலில் நின்றிருந்தேன். அவள் அம்மாவின் முன்னால் அவளிடம் பேச விருப்பமில்லை, சிவகாமி ஆன்ட்டியின் முன்னால் உணர்ச்சிவசப்பட்டு, உண்மை என்னிடம் மறைக்கத்தான் முயல்வாள் என்று நம்பினேன். அவளைப் பார்க்க வரச் சொல்லி, அழைக்கலாம் என்று போனை எடுத்தேன். முதல் ரீங்கிலேயே எடுத்தாள், எதிர்பார்த்துக் கொண்டிருந்திருப்பாள் போல.

"சீக்கிரம் சொல்லு!! டைம் இல்ல எனக்கு!!” என்றாள் எரிச்சலுடன்.

"வெளிய வா!! உங்க வீட்டு முன்னாடி தான் இருக்கேன்!! என்றவாறு அவள் வீட்டை நோக்கி நடந்தேன். என் முகத்தப் பார்த்து அவளால் அவள் வாழ்க்கையில் இன்னொருத்தன் இருக்கிறான் என்று பொய் சொல்ல முடியாது என்று தோன்றியது.

"அங்க எதுக்கு போன? அங்க உன்ன போக கூடாதுணு சொல்லி இருக்கேன்ல!!” அவளது குரலில் சிறிய பதற்றம்.

"சரி!! பக்கத்துல இருக்குற பார்க்குல இருக்கேன் வா!!” அவளது பதட்டம் என் நம்பிக்கையை ஏகபோகமா கூட்டியது. ஏனோ உதட்டில் ஒரு சிறுநகை.

"நான் வீட்ல இல்ல!! வெளிய இருக்கேன்!!” போய் சொன்னாள்.

"முதல் இப்படி பொய் சொல்லாதே!! உன் கார் வீட்லதான் இருக்கு!! பாத்துட்டு தான் வர்றேன்!!” முன்பு அவல குரலில் இருந்தா உறுதியும், தெளிவும் இப்பொழுது என் குரலில்.

"இப்ப என்ன உன் பிரச்சனை!!” மீண்டும் எரிச்சலானாள்.

ஒண்ணும் இல்ல, என் முகத்தப் பார்த்து சொல்லு, நீ என்ன லவ் பண்ணல, உன் வாழ்க்கையில இன்னொருத்தன இருக்கானு!! திரும்பி பார்க்காம போய்கிட்டே இருக்கேன்!!” அவளது உதறல் பேச்சு கொடுத்த தைரியம் என்று நினைக்கிறேன், திமிராகவே சொன்னேன்.

எப்பொழுது என்னிடமே அவ வாழ்க்கையில் இன்னொருத்தன் இருக்கிறான்னு சொன்னாளோ, அப்பவே முடிவு பண்ணிட்டேன், இந்த குழப்பத்துக்கு இன்னைக்கே முடிவு கட்டுறதுனு. அவ என்ன சொல்லி சமாளிக்க பாத்தாலும் விடக்கூடாது. கட்டாயப்படுத்தியாச்சும் இப்போவே அவளை இரவோடு இரவாக தாத்தாவிடம் அழைத்துச்சென்று, மொத்தத்தையும் சொல்லி, முடிந்தால் சீக்கிரமே கல்யாணம் பன்னிக்கணும் என்று உறுதியாய் இருந்தேன். அதுக்கு முதல்ல அவளை பார்க்கணும்.

"சரி!! நான் சொல்ற நம்பருக்கு கால் பண்ணி கான்பிரன்ஸ்ல போடு!!” அவல நம்பர் சொன்னாள். குழப்பத்துடன் அவள் கொடுத்த நம்பருக்கு கால் செய்தேன்,

"ஹலோ!!” ஒரு ஆணின் குரல். நொடியில் சர்வமும் அடங்கியது, விவரிக்க முடியாத பயம் என்னை தொற்றிகொண்டது.

"ப்ளீஸ்!! hold on!! mathu wants to talk to you!!” குரலில் நடுங்க சொல்லிவிட்டு, மதுவையும் அழைப்பில் இணைத்தேன்.

"ஹலோ!! ஹலோ!!” மீண்டும் அந்த ஆணின் குரல்.

"ரஞ்சூ!! it's me!!” பெயரை கூட சொல்லாமல் நான்தான் என்றாள். இதயத்தின் துடிப்பு எனக்கே கேட்பது போலிருந்தது.

"ஹே மதி!!, மூன்!!, இன்னும் நீ பிளைட் ஏறல?” இதயம் துடிக்கவா, அடங்கவா என்றது.

"இல்ல!! இனிமேதான்!! போர்டிங் முடிஞ்சிடுச்சு!!”. நானும் அந்த அழைப்பில் இருக்கிறேன் என்பதையே மறந்து இருவரும் பேசிக்கொண்டார்கள்.

"கம் சூன்!!, மிஸ் யூ ஆல்ரெடி!!”

"தரீ ஹவர்ஸ்!! டெல்லியில் இருப்பேன்!!”

"ஆமா!! நீ பேசுறதுக்கு முன்னாடி வேற யாரோ என்கிட்ட பேசினது யாரு? யாரோ....” 

"ரஞ்சூ!!, நாம எவ்வளவு நாளா லவ் பண்றோம்!!” பேசிக்கொண்டிருந்தவனை இடைமறித்து கேட்டாள்.

"ஹேய்!! என்ன ஆச்சு?” அவனின் குரலில் இருந்த ஏதோ ஒன்று, என் காதுகளில் ஆசிட் ஊற்றியது.

"ப்ளீஸ்!! பதில் மட்டும் சொல்லு!!”

"நீ ஓகே சொல்லி 123 டேஸ், நான் உன்னை பார்த்த ஃபர்ஸ்ட் செகண்ட்ல இருந்து!!” என்று சொன்னவன், ஏதோ பெரிதாக ஜோக் சொன்னதைப்போல சிரித்தான், எனக்கு என் வாழ்க்கையே என்னை பார்த்து சிரிப்பது போல் இருந்தது.

"ரஞ்சூ, நீ கால் கட் பண்ணிக்க!!”

"ஏன்? என்னாச்சு?”

"ப்ளீஸ் ரஞ்சூ, கால் கட் பண்ணு!! பத்து நிமிஷத்துல உனக்கு கூப்பிடுறேன்!!”

“who is the other guy in the line?”

“..........” மது பதில் சொல்லாமல் இருக்க,

“the tennis guy?” அவன் குரலில் ஒரு பதட்டம்.

ம்ம்" கொட்டினாள் மது.

“are you okay?” பதட்டமல் குறையாமல் கேட்டான்.

ரஞ்சூ, கால் கட் பண்ணு!!” அவன் கால் கட் செய்தான்.

"லைன்ல இருக்கியா?” இரக்கமே இல்லாமல் கேட்டாள் மது, உயிர் மட்டும் தான் இருந்தது என்னிடம்.

"இன்னும் கால் டிஸ்கனெக்ட் ஆகல!!, அதனால நீ கேட்டுக்கிட்டு கேட்டிருப்பேன் நம்புறேன்!!” அவல உரலில் கொஞ்சம் கூட கருணைஇல்லை, ஏனோ நான் இன்னும் செத்துவிடவில்லை என்று அவளுக்கு உணர்த்த வேண்டும் என்று, எனக்குத் தோன்றவே தொண்டையை செருமிக் கொண்டு

"சொல்லு!! லைன்ல தான் இருக்கேன்!!” என் உடலிலும், மனதிலும் இருந்த நடுக்கத்தையும் மறைத்துக் கொண்டு. எங்கிருந்து அந்த உறுதி வந்ததோ? எனக்கு தெரியாது?, ஆனால் மொத்த உண்மையையும் தெரிந்து கொள்ள வேண்டும் என்றுதான் அவளிடம் பேச விரும்பினேன், அதைத் தெரிந்து கொள்ளாமல் விடுவது இல்லை என்பதில் உறுதியாய் இருந்தேன். அவள் "ரஞ்சூ!! ரஞ்சூ!!” என்று ஆடவன் ஒருவனை கொஞ்சும்போதே, என் மொத்த உணர்வுகளும் செத்திருந்தது.

"நான் சொன்னது உண்மைனு இப்ப நம்புவன் நினைக்கிறேன்!! உன்ன கஷ்டபடுத்த கூடாதுன்னுதான், நான் இவ்வளவு நாள் ட்ரை பண்ணுனேன், நீ புரிஞ்சுக்கல!! உன்ன கஷ்டபடுத்த வச்சுட்ட, நீ எவ்வளவோ வருத்தபடுறியோ!! அதைவிட அதிகமாகவே நான் வருத்தப்படுறேன்!!. இதுல உன் மேல தப்பே இல்ல, ஃபர்ஸ்ட் நீ அதை புரிஞ்சுக்கோ!!. தப்பு எல்லாம் என் மேலதான்!!”

"எப்படி மது எனக்கு புரியல?” அவள் என்னவள் இல்லை என்ற என்னைத்தைக் காட்டிலும், அவள் என்னிடம் காட்டும், இந்த கனிவு என்னை இரணப்படுத்தியது.

நீண்ட அமைதி அவளிடம். அவள் பெருமூச்சு விடும் சத்தம் எனக்குக் கேட்டது.

"உனக்கு தெரியல நீ எவ்வளவு பெரிய பணக்காரன்னு!! அதுவும் இல்லாம என்னோட நாலு வயசு சின்னப் பையன்!! இந்த இரண்டும் ஒரு பொண்ண எவ்வளவு இன்செக்குர்டா பீல் பண்ண வைக்கும்னு உனக்கு தெரியாது!! மறுபடியும் சொல்றேன், தப்பு உன்னோடு கிடையாது!! என்னோடது தா......!!”

"நீ! சொன்ன ரெண்டு காரணமும், நம்புற மாதிரியே இல்லை!!. நீயே கொஞ்சம் யோசிச்சுப் பாரு, அது உனக்கே புரியும்!!” இடைவெட்டி பேசினேன், உணர்வுகள் மரத்துப் போன நிலையிலும், உண்மையை தெரிந்துகொள்ள வேண்டும் என்பதில் மட்டும் தெளிவாக இருந்தேன்.

"உன்ன கஷ்டபடுத்த கூடாதுன்னு நினைக்கிறேன்!!” அவள் குரலில் இருந்த கனிவுக்கு, என்னை அறியாமல், ஒரு வரட்டுச் சிரிப்பு என்னிடம்.

"நான் அந்த ஸ்டேஜ் எல்லாம் தாண்டி ரொம்ப நாளாச்சு மது!!. உனக்கு தெரியுமானு தெரியல, கிட்டத்தட்ட ஆறு மாசமா எங்க கம்பெனில பார்ட் டைமா ஒர்க் பண்ணிட்டு இருக்கேன்!! இன்னும் நீ நெனைக்கிற "பாப்பா!!” கிடையாது நான்!!” ஏனோ அவள் சொற்களில் தெரிந்த தரிசனம் என்னை உசுப்பேற்றியது.

“You want to take it in a hard way!!”

"பரவால்ல!! என்ன வேணும்நாலும் சொல்லு, ஆனால் உண்மையைச் சொல்லு!! கண்டிப்பா முட்டாள்தனமாக எதுவும் பண்ண மாட்டேன்!! கவலைப்படாத, நீ உன் வாழ்க்கை எந்த குற்ற உணர்ச்சியும் இல்லாமல் சந்தோஷமாக வாழலாம்!! நீயே சொன்னியே நான் பெரிய பணக்காரன்னு, அந்த சொத்தை எல்லாம் அனுபவிக்காம சாக எனக்கு என்ன கிறுக்கா?” ஏனோ சிறிது நேரத்திற்கு முன் இருந்த நடுக்கம் என் உடலிலும் இல்லை என் மனதிலும் இல்லை. அவளே, இல்லை என்றான பின், அவளின் கனிவு என் துச்சமேன தூக்கி எறிந்தேன்.

"கடைசியா நான் உன்ன எப்ப கிஸ் பண்ணேன்?” ஆரம்பத்தில் இருந்தா தெளிவு

"தெரியல, நீயே சொல்லு!!” அவளை விடவும் தெளிவாக இருந்தேன்.

"இங்க டெல்லியில் காலேஜ் ஜாயின் பண்றதுக்கு முன்னாடி!!”.

"......…" பதில் பேசவில்லை, அவளை தொடர்ந்து பேசட்டும் என்று இருந்தேன்.

"நீ நேஷனல் விளையாடுறதற்கு, மூணு மாசத்துக்கு முன்னாடி இருந்தே, இந்த இன்செக்யூரிட்டி எனக்கு வந்துடுச்சு. நீயே யோசிச்சு பாரு, அக்கா மாதிரி உன் கூட பழக ஆரம்பிச்சு, இப்போ உன்னை உன்னை லவ் பண்றேன், எனக்கு உன்ன கல்யாணம் பண்ணி வைங்க, அப்படின்னு நான் கேட்டா, உன் காசுக்காகதான் உன்னை மயங்கிட்டேன் ஊர் சொல்லும்!!. ஆனா, உன்னை கஷ்டப்படுத்த என்னால முடியல, அதான் உண்மை!! இதெல்லாம் சரியாயிரும்னு, உனக்குச் சொன்ன மாதிரியே, எனக்கு நானும் சொல்லிக்கிடேன்!!. அது எல்லாமே இங்கே டெல்லி வர்ற வரைக்கும்தான், ரஞ்சூவ பார்க்கிறது வரைக்கும் தான்!!. அவன் கூட பழகுனதுக்கு அதுக்கப்புறம், தான் நமக்குள்ள இருந்தது லவ் இல்லன்னு எனக்கு புரிஞ்சது!!”

"உனக்கே தெரியும் என் அண்ணன் நான் பிறந்த மூணு மாசத்துலயே இறந்துட்டான்னு!! சிங்கிள் சைல்ட வளர்ந்த எனக்கு, நீ கிடைச்சதும் உன் மேல பாசம் வச்சேன்!!. திடீர்னு ஜினாலிய லவ் பண்றனு நீ சொன்னதும், எனக்குள் ஒரு பயம், எங்கே நீ யாரையாவது லவ் பண்ணுனா, என்ன விட்டு விலகி போயிருவியோனு!!. என்ன செய்றதுன்னு தெரியாம, உன் மேல இருந்த பொசசிவ்னஸ் லவ்வுன்னு நானே முடிவு பண்ணிகிட்டேன்!!. அதே மாதிரிதான் உனக்கும், நான் சொல்ற வரைக்கும் நீ என்ன அப்படி பார்த்தது கிடையாதுனு எனக்கு தெரியும்!! தேவையில்லாம நான் தான் உன்னை குழப்பிவிட்டுட்டேன்!!. உண்மையைச் சொல்லணும்னா பிளான் பண்ணி உன்னை என்ன லவ் பண்ண வச்சேன்!! நீ ரெஃப்யூஸ் பண்ணக்கூடாதுனு தான் அன்னைக்கே உன்கூட ...... .” அவள் விட்ட இடைவெளி என்னை தின்று தீர்த்து.

"அதனால வந்த வினை தான் இது. உனக்கு தோணும், பின்ன எதுக்கு எங்க அம்மாகூட நான் சண்டைபோட்டேன்னு? ஃபர்ஸ்ட் நான் டெல்லியில் ஜாயின் பண்ணினது அவங்களுக்கு பிடிக்கல, எங்கே நான் அவங்களை விட்டு விலகிபோயிருவேனோனு பயந்து, எனக்கு உடனே கல்யாணம் பண்ணி வைக்கணும் முடிவு பண்ணிட்டாங்க!!. ரஞ்சூ ஃபேமிலி நிலைமை சரி இல்லை, இப்போதைக்கு கல்யாணம் பண்ண முடியாது!!. அதனால என்ன செய்றதுன்னு தெரியாம அப்படி அம்மாகிட்ட கோபப்பட வேண்டியதாப்போச்சு!!. எனக்கு தெரியுது, நான் ரொம்ப சுயநலம் பிடிச்சவ. ஆனால் உண்மையிலேயே சொல்றேன், உன்ன கஷ்டபடுத்த கூடாதுன்னு தான் நினைச்சேன்!!”

"என்ன தப்பானவளா காட்டி, என்ன நீ வெறுக்கனும்னு நினைச்சேன்!!. என்ன நீ போர்ஸ் பண்ணு அன்னைக்குகூட, உங்கிட்ட எப்படியாவது உட்கார்ந்து தெளிவா பேசணும்னு நினைச்சு தான் வந்தேன்!!. ஆனா என்னனாமோ நடந்திருச்சு!!. இப்பவும் நான் உன்ன லவ் பண்றேன்!! ஒரு பிரண்டா!! என் வாழ்க்கையில் எப்பவுமே உனக்கு ஒரு ஸ்பெஷலான இடம் இருக்கும்!!. ஏற்கனவே அம்மாவை ரொம்ப கஷ்டப் படுத்திட்டேன்!! நீயும் போய் அவங்ககிட்ட ஏதாவது கேட்டு அவர்களை இன்னும் கஷ்டப்படுத்தாதே!!. ப்ளீஸ் அங்கிருந்து போயிடு!!. வீட்டுக்கு போ!!. சாரி டா!!” என்று குரல் தழுதழுக்க முடித்தாள்.

"பாப்பா!!” அழுகையை அடக்கிக்கொண்டு அழைத்தேன் அவளை, அவள் பேச ஆரம்பித்த பொழுது இருந்த உறுதியெல்லாம் இல்லை எனக்கு,

"இங்க போடிங் பண்ண கூப்பிடுறாங்க!! கிளம்புறேன்!! டைம் ஆச்சு!!” கம்மிய குரலில் அவசர அவசரமாக காலை தூண்டிக்க முயன்றாள். .

"அவ்வளவுதானா?” அடக்க மாட்டாமல், நடுத்தெருவென்றும் பாராமல் கதறினேன்.

அவளிடமிருந்து பெருமூச்சுத் தவிர வேறு பதில் வரவில்லை. எவ்வளவு நேரம் என்று தெரியாது

"இறுதி அழைப்பு, IX 013, AIR INDIA EXPRESS, டெல்லி செல்லும் பயணிகளுக்கான இறுதி அழைப்பு ....” என்ற அவள் பறக்க போகும் அழைப்பு கேட்ட, மூச்சைப் பிடித்து அழுகையை அடக்கினேன், “இல்ல டா, நான் சொன்னதெல்லாம் பொய், எனக்காக காத்திருனு!!” அவள் சொல்லிவிட மாட்டாளா என்ற ஏக்கம்.

"இட்ஸ் ஓவர் மணிகண்டன்!!. புரிஞ்சுக்கோ!!” வைத்துவிட்டாள்.

சர்வமும் அடங்கிவிட்டது எனக்கு. மீண்டும் அவள் குரலில் அவ்வளவு தெளிவு. மது ஒருவனை "ரஞ்சூ!!” இன்று கொஞ்சும் பொழுதே மொத்தமாக உடைந்து போயிருந்த நான், மணிகண்டன் என்று அவள் என்னை அழைத்த அழைப்பு, உயிரையே பிடுங்கி வெளியே எறிந்திருந்தது. ஏனோ ஆத்திரமும் வரவில்லை, அழுகையும் வரவில்லை. உணர்வு என்ற ஒன்று இருப்பவனுக்கு தான் ஆத்திரம் வரும்!! அழுகை வரும்!!

ஒரு பிணத்தைப் போல அங்கே நின்று கொண்டிருந்தேன்!!.
[+] 4 users Like Doyencamphor's post
Like Reply


Messages In This Thread
RE: அப்பனுக்கு பாடம் சொன்ன சுப்பன் - by Doyencamphor - 08-11-2020, 04:48 PM



Users browsing this thread: 7 Guest(s)