நீ இல்லாத வாழ்வு வெறுமையடி by ராசு
#39
அவளைப் பார்த்து மீண்டும் அழுத்தமாய் கேட்டான்.

“அது வந்து அத்தான்… இன்னைக்கு ஆஃபிசில் … “ என்று இழுத்தவாறு பேச ஆரம்பித்தவளை
கையை நீட்டி தடுத்தான்.
“அலுவலக வேலையைப் பற்றி பேச இது தருணம் அல்ல. நீ போய் ஓய்வெடு. நாளைக்குப் பார்த்துக்கலாம்.”
அவள் என்ன செய்வதென்று தெரியாமல் விழித்தாள்.
அப்போது எதிர் அறையில் இருந்து இருவரின் சிரிப்பு சத்தமும் உரக்கக் கேட்டது.
“இவளை இங்கே வர்றதுக்கு அனுமதி தர்றதுக்கு முன்னாடி அத்தை கொஞ்சம் யோசித்திருக்கலாம். இப்ப பாருங்க சிரிப்பை. இதெல்லாம் நம்ம குடும்பத்திற்கு ஒத்து வருமா?”
அவன் முகத்தில் கடினம் ஏறியது.
“இதப்பாரு. எதைச் செய்யனும்? எதைச் செய்யக்கூடாதுன்னு அம்மாவுக்கு நல்லா தெரியும். இதை மாதிரி இனி பேசிக்கொண்டிருக்காதே. சரியா?”
அவள் மௌனமாக தலையாட்டியவாறு தன்னையே நொந்துகொண்டு தனக்கு ஒதுக்கப்பட்டிருந்த அறைக்குத் திரும்பினாள்.
அந்த கிருஷ்ணவேணி இங்கிருப்பதால் என்னவோ நடக்கப்போகிறது என்று அவளது உள்மனம் அவளை எச்சரித்தது.
றுநாள் மாலை.
அவர்கள் சீக்கிரமே வந்துவிட்டனர்.
“வந்துட்டீங்களா? இந்தாங்க. இதைச் சாப்பிட்டுவிட்டு போய் குளிச்சு தயாராகுங்க.”
அவர்களிடம் குடிப்பதற்கும், கொறிப்பதற்கும் நீட்டினார் வனிதாமணி.
கிருஷ்ணவேணியை தனது அறைக்கு அழைத்தார்.
“என்ன அத்தை?”
“நீ இன்னிக்கு இதைக் கட்டிக்கிட்டு வர்றியாம்மா?”
அவர் ஆவலுடன் காட்டிய அந்த பட்டுப்புடவை அழகாக இருந்தது.
“அத்தை. நான் எப்படி?”
“ஆசைப்பட்டுதான் வாங்கினேன். ஆனால் சரிகை கொஞ்சம் அதிகமா இருக்கு. அதான் கட்டறதில்லை.”
அவள் மீண்டும் தயங்கினாள்.
“என்னம்மா? என்னோட புடவையைக் கட்டிக்க தயக்கமா இருக்கா?”
“அதில்லை அத்தே. எனக்கு இதுக்கு மேட்சா ஜாக்கெட் இல்லை.”
“அவ்வளவுதானே? நானே உனக்குப் பொருத்தமா ஜாக்கெட் தைச்சிட்டேன். உன் அனுமதி இல்லாம உன்னோட ஜாக்கெட்டை அளவுக்கு எடுத்துட்டேன்மா. காலையில் உன்னை எடுத்து வச்சிட்டு போகச் சொல்லலாம்னு நினைச்சிருந்தேன். மறந்துட்டேன்.”
“அத்தே. நீங்களே தைச்சீங்களா?”
அவள் ஆச்சர்யத்துடன் கேட்டாள்.
“ஆமாம்மா. உனக்கும் வேணும்னா நான் கத்துத்தர்றேன்.”
“சரித்தே.”
“சரி. சரி. சீக்கிரம் கிளம்பு. புடவை கட்டத் தெரியும்தானே?”
“தெரியும் அத்தே.”

அவர் சென்றுவிட்டார். அவளும் தனது அறைக்குக் கிளம்பினாள்.
பின்னேயே யுகேந்திரன் வந்தான்.
Like Reply


Messages In This Thread
RE: நீ இல்லாத வாழ்வு வெறுமையடி by ராசு - by johnypowas - 16-03-2019, 10:41 AM



Users browsing this thread: 3 Guest(s)