நீ இல்லாத வாழ்வு வெறுமையடி by ராசு
#38
“என் மேல் கோபப்படாதே யுகா. எந்தவித உரிமையும் இல்லாமல் நான் இங்கே தங்கியிருக்கிறதால்தானே அந்த சாருலதா அப்படி கிண்டல் பண்றாங்க?”

“எங்களை விட அவ உனக்கு முக்கியமா போயிட்டாளா?”
“சாரி.”
தலைகுனிந்தாள்.
“உங்களுக்கு வாங்கித்தர்ற உரிமை எனக்கு இல்லையா? எனக்குன்னு யாரிருக்கா? இதுவரைக்கும் நான் யாருக்கும் சமைத்து கொடுத்ததில்லை. இப்படி டிரஸ் எடுத்துக்கொடுத்ததும் இல்லை.”
வருத்தமுடன் சொன்னாள்.
“உனக்கு உரிமை இல்லைன்னு யார் சொன்னா. நீ இப்படி குற்ற உணர்ச்சியோட வாங்கித்தர்றதுதான் எனக்குப் பிரியம் இல்லை. தயவுசெய்து வருத்தப்படாதே.”
அவளைத் தேற்றினான்.
“சரி வா சாப்பிட போகலாம். அம்மா தேடுவாங்க.”
“நீ அத்தைக்கிட்ட சொல்லமாட்டேல்ல.”
“மாட்டேன். வா போகலாம். ஆனால் இனி இந்த மாதிரி பைத்தியக்காரத்தனம் செய்யக்கூடாது.”
அவள் தலையாட்டினாள்.
அவள் முன்னே போக அவன் பின்னே சென்றான்.
‘உரிமை இல்லையாம்ல. உரிமை. அவளுக்கு என்ன மாதிரியான உரிமை கொடுக்க காத்துக்கொண்டிருக்கிறோம். என்னவோ அந்நிய வீட்டில் தங்குற மாதிரி கணக்குப் பார்க்கிறா. எல்லாம் எத்தனை நாளுக்கு. நீ படிப்பு முடியற வரைக்கும்தானே? அதன் பிறகு இந்த வீட்டில் உனது உரிமை என்னவென்று உனக்கே தெரியும். அப்ப நீ எப்படி விழிக்கிறேன்னு நான் பார்க்கத்தானே போறேன்.’
தனக்குள் சிரித்துக்கொண்டான். தான் கேட்கும்போது அவள் மறுப்பாள் என்று ஒரு சதவீதம் கூட அவனுக்குச் சந்தேகம் வரவில்லை.
அனைவரும் சாப்பாட்டு மேசைக்கு வந்துவிட்டனர். சாருலதா மகேந்திரனின் அருகில் அமர்ந்திருந்தாள். அதைப் பார்த்து பல்லைக் கடித்தான் யுகேந்திரன்.
“நாளைக்கு கீர்த்திவாசன் சாரோட பொண்ணுக்கு ரிசப்சன் தெரியும்ல.”
பொதுவாக கேட்டார்.
“தெரியும்மா.” ரவிச்சந்திரன் பதில் சொன்னார்.

“இப்ப தெரியும்னு சொல்லிட்டு நாளைக்கு எனக்கு வேலை இருக்கு. நீ போயிட்டு வந்துடுன்னு சொல்லக்கூடாது. அவர் ரொம்ப முக்கியமானவர்.”
“எனக்கும் தெரியும்மா. கண்டிப்பா வந்துடுவோம்.”
“என்ன நீங்களும் கேட்டுக்கிட்டீங்கதானே?”


சிறியவர்களைப் பார்த்துக்கேட்டார்.

“சரிம்மா.” யுகேந்திரன் பதில் சொன்னான்.

அவளோடு கூட வந்தவனிடம் கீர்த்திவாசன் யார் என்று விசாரித்தாள் கிருஷ்ணவேணி.


அவர்கள் இருவரும் பேசிக்கொண்டே அவளது அறைக்குள் புகுந்தனர்.



அதைப் பார்த்து வயிறெரிந்தாள் சாருலதா. அவள் யாரோ எவளோ? எந்த சொந்த பந்தமும் கிடையாது. அவளுக்கென்று அந்த வீட்டில் அறை இருக்கிறது. அவள் இந்த வீட்டு உறவினள். கூடிய விரைவில் உரிமைக்காரியாகவும் ஆகப்போகிறவள். அவள் மட்டும் விருந்தினர் அறையில் தங்கவேண்டுமா?



அவளும் மாடிக்கு ஏறினாள்.



கிருஷ்ணவேணியின் அறையில் அவர்கள் சிரித்துப்பேசுவது கேட்டது.



அவள் மகேந்திரனின் அறைக்கதவைத்தட்டினாள்.



கதவு திறந்தது. அவள் வெளியில் நிற்கக் கண்டவன் புருவத்தைச் சுருக்கினான்.



“என்ன சாருலதா?”



அதன் பிறகுதான் தான் அவசரப்பட்டு அங்கே வந்தது அவளுக்குப் புரிந்தது.



அவனைப் பற்றி தெரிந்தும் அவர்களைப் போல் தானும் மகேந்திரனோடு பேசிக்கொண்டிருக்க வந்துவிட்ட முட்டாள்தனத்தை எண்ணி தன்னையே நொந்துகொண்டாள்.



அவன் அதற்கு இடம் கொடுத்துவிட்டுதானே மறுவேலை பார்ப்பான்.
“சாருலதா. என்னன்னு கேட்டேன்?”
Like Reply


Messages In This Thread
RE: நீ இல்லாத வாழ்வு வெறுமையடி by ராசு - by johnypowas - 16-03-2019, 10:39 AM



Users browsing this thread: 5 Guest(s)