நீ இல்லாத வாழ்வு வெறுமையடி by ராசு
#37
அவன் தான் பேசியதை எல்லாம் கேட்டிருப்பானா? என்ற சந்தேகத்தில் அவனைப் பார்த்தாள் சாருலதா.

அடுத்து அவன் சொன்ன பதில் அதை உறுதி செய்தது.
அவள் என்ன செய்தாள் என்று அப்படியே சாருலதாவிடம் கூறினான். கிருஷ்ணவேணி அமைதியாக நின்றிருந்தாள்.
சாருலதா அவன் கூறியதை நம்ப முடியாமல் பார்த்தாள்.

“சாருக்கா. எங்க வீட்டுக்கு கிருஷ்ணவேணியை பணத்திற்காக அழைத்து வரவில்லை. அவளோட பாசத்திற்காகதான் அழைத்து வந்தேன். எங்க வீட்டில் எல்லோரும் அதைதான் எதிர்பார்க்கிறார்கள். அதனால் உங்க தோழிகளை வேற வீடு கிடைக்குதான்னு பார்த்துக்க சொல்லுங்க.”

அவளிடம் சற்று கடுமையாக சொல்லிவிட்டு சென்றான். அன்று இரவு தனது வீட்டிற்குச் செல்லாமல் அவள் அங்கேயே தங்கிவிட்டாள்.

கிருஷ்ணவேணி அங்கே தங்க வந்த பிறகு அவளால் நிம்மதியாக இருக்க முடியவில்லை. எத்தனை வருடங்கள் இந்த வீட்டில் வாழப்போகும் தினத்தை எதிர்பார்த்து திட்டம் போட்டு நடந்துகொண்டிருக்கிறாள். அதை இந்த கிருஷ்ணவேணியின் வருகை கலைத்துவிடுமோன்னு என்ற ஆட்டம் அவளுக்கு.

மொட்டை மாடியில் நின்றிருந்த கிருஷ்ணவேணி காலடிச்சத்தம் கேட்டு திரும்பினாள்.

யுகேந்திரன் நின்று கொண்டிருந்தான்.

அவளால் அவனை ஏறிட்டு பார்க்க முடியவில்லை.

“ஏன் இப்படி பண்ணே?”

“சாரி. யுகா.”

“தப்புன்னு தெரியுதுல்ல. எங்களோட பாசத்திற்கு நீ விலை வைக்க முடியுமா?”

“எனக்குத் தெரியும். நான் சொன்ன மாதிரி இங்கே வரும்போதே வாங்கிட்டு வரனும்னு நினைத்தேன். அப்ப முடியலை. அதான் இப்ப வாங்கிட்டு வந்தேன். ஏன் நான் வாங்கித்தரக்கூடாதா?”
“தாராளமா நீ வாங்கித்தரலாம். ஆனால் ஒரு மாசம் வரைக்கும் பொறுத்திருக்க வேண்டியதில்லையே.”

“என் மேல் கோபப்படாதே யுகா. எந்தவித உரிமையும் இல்லாமல் நான் இங்கே தங்கியிருக்கிறதால்தானே அந்த சாருலதா அப்படி கிண்டல் பண்றாங்க?”


“எங்களை விட அவ உனக்கு முக்கியமா போயிட்டாளா?”

“சாரி.”

தலைகுனிந்தாள்.

“உங்களுக்கு வாங்கித்தர்ற உரிமை எனக்கு இல்லையா? எனக்குன்னு யாரிருக்கா? இதுவரைக்கும் நான் யாருக்கும் சமைத்து கொடுத்ததில்லை. இப்படி டிரஸ் எடுத்துக்கொடுத்ததும் இல்லை.”

வருத்தமுடன் சொன்னாள்.

“உனக்கு உரிமை இல்லைன்னு யார் சொன்னா. நீ இப்படி குற்ற உணர்ச்சியோட வாங்கித்தர்றதுதான் எனக்குப் பிரியம் இல்லை. தயவுசெய்து வருத்தப்படாதே.”

அவளைத் தேற்றினான்.

“சரி வா சாப்பிட போகலாம். அம்மா தேடுவாங்க.”

“நீ அத்தைக்கிட்ட சொல்லமாட்டேல்ல.”

“மாட்டேன். வா போகலாம். ஆனால் இனி இந்த மாதிரி பைத்தியக்காரத்தனம் செய்யக்கூடாது.”

அவள் தலையாட்டினாள்.

அவள் முன்னே போக அவன் பின்னே சென்றான்.

‘உரிமை இல்லையாம்ல. உரிமை. அவளுக்கு என்ன மாதிரியான உரிமை கொடுக்க காத்துக்கொண்டிருக்கிறோம். என்னவோ அந்நிய வீட்டில் தங்குற மாதிரி கணக்குப் பார்க்கிறா. எல்லாம் எத்தனை நாளுக்கு. நீ படிப்பு முடியற வரைக்கும்தானே? அதன் பிறகு இந்த வீட்டில் உனது உரிமை என்னவென்று உனக்கே தெரியும். அப்ப நீ எப்படி விழிக்கிறேன்னு நான் பார்க்கத்தானே போறேன்.’

தனக்குள் சிரித்துக்கொண்டான். தான் கேட்கும்போது அவள் மறுப்பாள் என்று ஒரு சதவீதம் கூட அவனுக்குச் சந்தேகம் வரவில்லை.

அனைவரும் சாப்பாட்டு மேசைக்கு வந்துவிட்டனர். சாருலதா மகேந்திரனின் அருகில் அமர்ந்திருந்தாள். அதைப் பார்த்து பல்லைக் கடித்தான் யுகேந்திரன்.

“நாளைக்கு கீர்த்திவாசன் சாரோட பொண்ணுக்கு ரிசப்சன் தெரியும்ல.”

பொதுவாக கேட்டார்.

“தெரியும்மா.” ரவிச்சந்திரன் பதில் சொன்னார்.



“இப்ப தெரியும்னு சொல்லிட்டு நாளைக்கு எனக்கு வேலை இருக்கு. நீ போயிட்டு வந்துடுன்னு சொல்லக்கூடாது. அவர் ரொம்ப முக்கியமானவர்.”
“எனக்கும் தெரியும்மா. கண்டிப்பா வந்துடுவோம்.”
Like Reply


Messages In This Thread
RE: நீ இல்லாத வாழ்வு வெறுமையடி by ராசு - by johnypowas - 16-03-2019, 10:38 AM



Users browsing this thread: 8 Guest(s)