நீ இல்லாத வாழ்வு வெறுமையடி by ராசு
#36
அவள் நீட்டியது ஒரு விலை உயர்ந்த பேனா.

அவன் தன் பெற்றோரைப் பார்த்தான். அவர்களும் ஆவலுடன் பார்த்துக்கொண்டிருந்தனர்.
அவள் நீட்டிய பேனாவைப் பெற்றுக்கொண்டான். அதன் பிறகு தனது அறைக்குச் சென்றுவிட்டான்.
“என்னம்மா திடீர்னு எல்லோருக்கும் டிரஸ் எடுத்துட்டு வந்துருக்கே?”

வனிதாமணி கேட்டார்.

“நான் இங்கே வரும்போதே வாங்கிட்டு வரனும்னு நினைத்தேன் அத்தே. அப்ப உங்களோட ரசனை என்னன்னு தெரியலை. அதனால்தான் இப்ப வாங்கிட்டு வந்தேன். பிடிச்சிருக்கா அத்தே?”

ஆவலுடன் கேட்டாள்.

“ரொம்ப பிடிச்சிருக்கும்மா.”

“டேய் உனக்கு?”

யுகேந்திரனைப் பார்த்துக்கேட்டாள்.

“பிடிச்சிருக்கு. உனக்கு எடுத்துக்கலையா?”

“எனக்குதான் நிறைய இருக்கே. அதான் எடுத்துக்கலை.”

அவன் யோசனையில் இருந்தான். எப்போதும் உள்ள கலகலப்பு அவனிடம் இல்லை. இரவு உணவு முடிந்த பிறகு கூட அவளோடு அறைக்குச் செல்லாமல் அவளுக்கு இரவு வணக்கம் சொல்லிவிட்டு தனது அறைக்குள் புகுந்துகொண்டான்.

தனது அறைக்கு வந்த மகேந்திரனுக்கு சற்று ஏமாற்றமாக இருந்தது. மற்றவர்களுக்குப் பார்த்துப் பார்த்து உடை வாங்கி வந்தவள் தன்னை மட்டும் வேற்றாளாக நினைத்து பெரியவர்கள் அவனை மட்டும் விட்டுவிட்டால் தவறாக நினைப்பார்களே என்று ஏதோ பெயருக்கு பேனா வாங்கிக் கொடுத்திருக்கிறாள்.
தனதுத சட்டைப் பையில் அதைப் பத்திரப்படுத்தியவன் இரவு உடைக்கு மாறி படுக்கையில் விழுந்தான்.

றுநாள் மாலை.


மகேந்திரனோடு தொற்றிக்கொண்டு சாருலதாவும் வீட்டிற்கு வந்துவிட்டாள்.

இன்னும் யுகேந்திரன் சரியாகவில்லை. அவள் ஏதாவது கேட்டால் மட்டுமே பதில் சொன்னான். அவன் ஏதோ தன் மேல் கோபமாய் இருக்கிறான் என்று அவளுக்குப் புரிந்தது.

அவன் என்னவென்று சொல்லிவிட்டால் கூட அவள் அதை நிவர்த்தி செய்துவிடுவாள். என்னவென்று தெரியாமல் என்ன செய்வாள்.

அப்போது சாருலதா கிருஷ்ணவேணியின் அருகில் வந்தாள்.

“ஹாய். எப்படியிருக்கே?”

“நல்லாருக்கேன்.”

“நீ இங்கே வந்து ஒரு மாசம் ஆயிருக்கும்ல.”

அதை ஏன் இவள் கேட்கிறாள் என்று யோசனையுடன் அவளைப் பார்த்தாள்.

“நீ இங்கே பேயிங் கெஸ்டாதானே வந்தே. மாசம் எவ்வளவாச்சுன்னு கொஞ்சம் சொல்றியா? நீ எவ்வளவு கொடுத்தே?”

அவள் எதற்கு என்று பார்த்தாள்.

“என்னோட இரண்டு தோழிகள் இது மாதிரி பேயிங் கெஸ்டா தங்குவதற்கு இடம் கிடைத்தா நல்லாருக்கும்னு சொன்னாங்க. இது வேற பணக்கார வீடாச்சா? அவளுகளுக்கு கட்டுப்படியாகுமான்னு நினைத்தேன். நீ எவ்வளவு கொடுத்தேன்னு சொன்னா அது அவளுகளுக்கு ஒத்து வருமான்னு பார்ப்பேன்.”

சாருலதாவுக்கு என்ன பதில் சொல்றதுன்னு தெரியாமல் விழித்தாள்.

“என்ன நீ பணமே கொடுக்கலையா? உன்கிட்ட அவ்வளவு பணம் இருக்காதுன்னு எனக்குத் தெரியும். இதுக்கு நீ என்கிட்ட பணம் இல்லை. நான் தங்குறதுக்கும் படிக்கிறதுக்கும் நீங்க தானம் பண்ணுங்கன்னு சொல்லியிருக்கலாம்.”

அவளை மட்டமாகப் பார்த்துக்கொண்டே பதில் சொன்னாள் சாருலதா.

கிருஷ்ணவேணி அப்படியே குன்றிப்போனாள்.

இது மாதிரி ஒரு வார்த்தை வந்துவிடக்கூடாதுன்னுதான் அவள் யுகேந்திரனிடம் முதலில் இங்கு வருவதற்கு மறுத்ததே.

அவன்தான் நீ எங்க வீட்டில் தங்குவதற்கு என்ன தயக்கம்? அப்படி உனக்கு கஷ்டமா இருந்துச்சுன்னா பேயிங் கெஸ்டா வந்துடேன். அதை நான் என் பாக்கெட் மணியா பயன்படுத்திக்கிறேன். என்றிருந்தான்.

ஆனால் அவர்கள் காட்டிய பாசத்தில் அவளால் வாடகைப் பணம் எவ்வளவு என்று கேட்க முடியவில்லை. ஆனாலும் தான் எந்தவித உரிமையும் இல்லாமல் அந்த வீட்டில் தங்கியிருப்பது மனதை உறுத்தியது. அதனால்தான் விடுமுறை நாளில் தான்தான் சமைப்பேன் என்று அதற்குத்தேவையானவற்றை அவளே சென்று வாங்கிவந்தாள்.

இப்போது மற்றவர்களுக்கு பரிசாக உடையும் வாங்கித் தந்திருக்கிறாள்.



அதை சாருலதாவிடம் சொல்ல மனம் வரவில்லை. எப்போதும் தன்னை அலட்சியமாக பார்த்து ஒதுங்கிச் செல்பவள் இன்று வலியக்க வந்து பேசும்போதே தான் யோசித்திருக்க வேண்டும்.
“அவ சொல்ல மாட்டா சாருக்கா. அவகிட்ட வாங்கிக்கிட்ட நான் சொல்றேன்.”
Like Reply


Messages In This Thread
RE: நீ இல்லாத வாழ்வு வெறுமையடி by ராசு - by johnypowas - 16-03-2019, 10:34 AM



Users browsing this thread: 5 Guest(s)