நீ இல்லாத வாழ்வு வெறுமையடி by ராசு
#35
தொடர்கதை - நீ இல்லாத வாழ்வு வெறுமையடி - 08 - ராசு

[Image: nivv.jpg]

மாடியில் கைகளைக் கட்டிக்கொண்டு சிற்பம் போல் நின்று கொண்டிருந்த மகேந்திரன் ஆள் அரவம் கேட்டு திரும்பிப் பார்த்தான்.

கிருஷ்ணவேணியும் யுகேந்திரனும் வருவதைக் கண்டவன் புன்னகைத்தான். அவன் தன்னைப் பார்த்துதான் சிரிக்கிறானா? அவள் சந்தேகம் கொண்டாள்.


சந்தேகமேயில்லாமல் அவளைப் பார்த்துதான் சிரிக்கிறான். அவன் முகம் அவளை நோக்கியே இருக்கிறது.


அவள் தன்னை நம்பாமல் கையைக் கிள்ளி பார்க்கிறாள்.



வலித்தது. அழுத்திக் கிள்ளிவிட்டாள். வலியில் ‘ஆ’ வென கத்தியவளுக்கு விழிப்பு வந்துவிட்டது.



எழுந்து கட்டிலில் அமர்ந்தாள்.



இன்னும் அவளுக்கு நடந்தது கனவு போல் தெரியவில்லை. அவனது சிரிப்பு மனதை விட்டு அகலவில்லை.



கண்ட கனவைப் பற்றி யோசித்துக்கொண்டிருந்தால் இன்று கல்லூரிக்கு சென்ற மாதிரிதான் என்று தன்னைத்தானே கடிந்துகொண்டு குளியல் அறைக்குள் புகுந்தாள்.



கல்லூரிக்குத் தயாராகி கீழே வந்தாள்.



“என்னம்மா? கல்லூரிக்குக் கிளம்பியாச்சா?”



வனிதாமணி வாஞ்சையுடன் அவளைப் பார்த்தவாறே கேட்டார்.



“கிளம்பியாச்சு அத்தே?”



“இன்னும் இந்த சின்னவனைக் காணோமே.”

“அந்த தூங்குமூஞ்சி என்ன பண்றான்னு பார்க்கிறேன்.”

என்று சொன்னவள் யுகேந்திரனின் அறைக்குச் சென்றாள்.


“டேய் என்னடா பண்றே?”



அறையில் அவனைக் காணவில்லை. குளியல் அறைக்குள் அவனது குரல் கேட்டது. அவன் ஏதோ ஒரு பாடலை முணுமுணுத்துக்கொண்டிருந்தான்.



எப்போதும் போல் அவனது குரலால் ஈர்க்கப்பட்டு அவள் அங்கிருந்த நாற்காலியில் அமர்ந்துவிட்டாள்.



யுகேந்திரனுக்கு நல்ல குரல்வளம். அவனுக்கு கலைத்துறையில்தான் ஆர்வம். ஆனால் வீட்டினரின் கட்டாயத்திற்காகதான் கல்லூரியில் சேர்ந்து படிப்பதே.



குளியல் அறைக் கதவைத் திறக்கும் சத்தம் கேட்டது. அவள் திரும்பி நின்று கொண்டாள்.



“டேய். நீ கிளம்பிட்டியான்னு பார்க்க வந்தேன். சீக்கிரம் கிளம்பி வந்து சேரு.”



திரும்பி நின்றவாறு சொன்னவள் கடகடவென்று வெளியில் சென்றுவிட்டாள்.

அவளது செயலைக் கண்டு அவன் சிரித்துக்கொண்டான்.



ன்று மாலை.



கல்லூரி விட்டு வீட்டுக்குப் போகும் ஆர்வத்தில் எல்லோரும் வெளியில் வந்தனர்.



“யுகா. நான் இன்னிக்கு கொஞ்சம் கடைக்குப் போக வேண்டியிருக்கு. அதனால் நீ வீட்டுக்குப் போ. நான் அப்புறமா வர்றேன்.”



“நானும் கூட வர்றேனே?”



“இல்லை. வேண்டாம். நீ வீட்டுக்குப் போ. நானே பார்த்துக்கறேன்.”



அதற்கு மேல் அவன் மறுக்கவில்லை.



“சீக்கிரம் வந்துடு.”



அக்கறையாய் சொல்லிவிட்டு சென்றான். அவள் நெகிழ்ந்துபோயிருந்தாள். இப்படி யாரும் அவளிடம் சொன்னதில்லை.



அவளது பெற்றோரின் மறைவுக்குப் பிறகு அவள் மீது அக்கறை கொண்டவன்.



கடைக்குச் சென்றாள். பார்த்துப் பார்த்து வாங்கினாள்.



அவள் உள்ளே நுழைந்தபோது வனிதாமணி ஆவலுடன் நின்று கொண்டிருந்தாள்.



“வாடாம்மா. நீ மட்டும் கடைக்குப் போகனுமா என்ன? என்கிட்ட சொல்லியிருந்தா உனக்கு விடுமுறை நாளில் நானும் கூட வந்திருப்பேனே.”



“பரவாயில்லை அத்தை.”



“என்னம்மா. துணிக்கடைக்குப் போயிருந்தியா?”



“ஆமா அத்தே.”



வாங்கி வந்தவற்றை தனது அறையில் வைத்துவிட்டு திரும்பினாள்.



ரவிச்சந்திரனும் மகேந்திரனும் வந்த பிறகு தனது அறைக்குச் சென்றவள் தான் வாங்கி வந்தவற்றை எடுத்து வந்தாள்.



“அத்தை. மாமா. சேர்ந்து நில்லுங்க.”



என்றவள் தான் வாங்கி வந்தவற்றை அவர்களிடம் கொடுத்துவிட்டு காலில் விழுந்தாள்.



“நல்லா இரும்மா.” வனிதாமணி அவளைத் தூக்கிவிட்டார்.



பார்த்துக்கொண்டிருந்த யுகேந்திரனிடமும் ஒரு பையை நீட்டினாள்.







மகேந்திரனிடம் வந்தாள். அவளிடம் துணிப்பை எதுவும் இல்லை.
“உங்களோட அளவு தெரியலை. அத்தோட நான் வாங்கித் தந்தா உங்களுக்குப் பிடிக்குமான்னு தெரியலை. அதான் இதை வாங்கிட்டு வந்தேன்.”
Like Reply


Messages In This Thread
RE: நீ இல்லாத வாழ்வு வெறுமையடி by ராசு - by johnypowas - 16-03-2019, 10:23 AM



Users browsing this thread: 8 Guest(s)