Fantasy காலம் என் கையில்
கால சூழல் - 16 


இடம்: சீதா வீடு - காரைக்குடி
நாள்: மார்ச் 5 2018 , திங்கக்கிழமை
நேரம்: 02 : 45 மணி

சீதா சிரித்த முகம் உடன் கையில் ஆராத்தி தட்டுடன் கரை நோக்கி வந்தாள்

சீதா: அங்கேயே நில்லுங்க செல்லம், வீட்டுக்கு உரிமையா வரப்போறிங்க, மங்கள கரமா, ஆராத்தி எடுத்து உள்ள வரணும் (சிரித்தபடி)

பூஜா: சரிங்க அத்தை, டேய் கார்த்திக் வா கார்ல இருந்து இறங்கு டா, என்கூட நில்லு டா, அத்தை ஆராத்தி எடுக்கட்டும்

கார்த்திக்: சரிங்க அக்கா 

சீதா: ஹ்ம்ம் கொஞ்சம் நேரம் ரெண்டு பேரும் பேசாம நிக்கிரங்களா, ஆராத்தி எடுக்கும் போது என்ன பேச்சு (செல்லமாக அதட்டிய படி)

கார்த்திக்: ஆத்தி, அத்தை கோவம் எல்லாம் படுறாங்களே (சிரித்தபடி)

சீதா சிரித்தபடி மெல்ல கற்ப்பூரத்தை எத்ரிக்கொண்டு ஆலாத்தி தட்டை மூன்று முறை ஆசையாக சுத்தினாள், கார்த்திக்கும், பூஜாவும் சிரித்தபடி நின்று அதை பார்த்த படி இருந்தனர், சீதா அதில் உள்ள குங்கமுக தண்ணீரை எடுத்து இருவர் நெத்தியில் வைத்து அன்பாக பார்த்தாள்

சீதா: ரெண்டு பேரும் திரும்பி பாக்காம உள்ள போங்க, நான் இந்த ஆராத்தி தண்ணிய வெளிய ஊத்திட்டு வரேன்

பூஜா: சரிங்க அத்தை, வா டா கார்த்திக் உள்ள போலாமா

கார்த்திக்: சரிங்க அக்கா, (மலர்விழி, கயல்விழியை பார்த்தபடி சிரித்துகொன்டே), ஆமா இதுல யாரு கயல், யாரு மலர், ரெண்டு பேரும் ஒரே மாதிரி இருந்தா நான் எப்படி கண்டு பிடிக்கிறதாம், ஒரு ஒரு முறையும் என்னால அரை வாங்க முடியாது பா (போலியான பயத்துடன்)

கயல்விழி: (லேசாக புன்முறுவல் உடன், அக்காவை பார்த்தாள், மனதுக்குள் அக்கா மாமாவை அடிசுட்டா போல, அதான் மாமா இப்படி சொல்லுதுனு நெனைத்துகொன்டே) நான் கயல் மாமா, இது தான் என்னோட அக்கா மலர், ரெண்டு பேரும் பாக்க ஒரே மாதிரி தான் இருப்போம், ஆனா நீங்க ரெண்டு நாள் பேசி பழகிட்டா கண்டிப்பா உங்களுக்கே அது தெரிச்சும் (அன்பாக, கனிவான குரலில்)

கார்த்திக்: ஹ்ம்ம் கயல், பரவலையே நீ நல்ல பேசுவியா, அப்பமே பேசவந்தேன் பயந்து ஓடுன (சிரித்தபடி அக்காவின் கைகளை பற்றிக்கொண்டு வீட்டுக்குளே வந்தான்)

கயல்விழி: ஆமா, நீங்க மட்டும் சும்மாவா பேசுனீங்க, நான் உங்களுக்கு பார்த்த மாப்பிள்ளைன்னு வம்பு இழுத்திங்க, எண்ணெயை வீட்டுல கல்யாணம் பண்ணி உங்ககூட அனுப்பிடுவாங்கனு பயம் தான் மாமா, என்னால என்னோட அப்பா, அம்மா, அண்ணா, அக்கா விட்டு எல்லாம் இருக்கவே முடியாது, இவங்க எல்லாம் என்னோட உலகம் மாமா அதான் பயந்து அம்மா அம்மானு ஓடிட்டேன்

கார்த்திக்: ஹ்ம்ம் நீங்க ரொம்ப அன்பான குடும்பம் கயல், உங்கள எல்லாரும் பார்த்த எனக்கு பொறாமையா இருக்கு, எங்க வீட்டுலயும் இருக்காங்களே, ஒண்ணா இருக்கோம் தான் பேரு, ஆனா எல்லாரும் தனி தனியா இருக்கோம், சாப்டியான்னு பேச கூட யாரும் இருக்கமாட்டாங்க

பூஜா: டேய் பார்த்தியா, உன்னோட அத்தை பொண்ணு பார்த்ததும் இப்படி பல்டி அடிக்கிற, உன்ன வீட்டுல யாரும் பாசமா பாத்துக்கலயா என்ன, 

கார்த்திக்: ஐயோ அக்கா, எல்லாரும் பேசுறோம் அன்பா இருக்கோம் ஆனா எல்லாரும் ஒன்னாவா இருக்கோம், இவங்கள பாருங்க ஒருத்தங்க ஒருத்தங்களை விட்டு கொடுக்காம அன்பா இருக்காங்க, நானும் நீயுமே இப்ப தானே ஒழுங்கா பேசி அன்பா பழகுறோம்

பூஜா: ஹ்ம்ம் அது என்னமோ உண்மை தான் டா கார்த்திக்

கார்த்திக்: ஆமா அக்கா, இனிமே நம்ம குடும்பம் கொஞ்சம் கொஞ்சமா இப்படி மாத்தணும் அக்கா
இப்படிக்கு 
Loveyourself1990

என்னுடைய (கதைகள்) திரிகள்:

காதலுக்கு வயதில்லை 
https://xossipy.com/showthread.php?tid=31384

காலம் என் கையில் 
https://xossipy.com/showthread.php?tid=31598

அன்பிற்கு உண்டோ அடைக்கும் தாழ்
https://xossipy.com/thread-32596.html
[+] 3 users Like Loveyourself1990's post
Like Reply


Messages In This Thread
RE: காலம் என் கையில் - by Loveyourself1990 - 07-11-2020, 10:39 PM



Users browsing this thread: 3 Guest(s)