அப்பனுக்கு பாடம் சொன்ன சுப்பன்
பாகம் - 42


விழித்துப் பார்க்க, மதுவின் மடியில் இருந்தேன். அழுது கொண்டிருந்தாள், என் கன்னத்தை தடவிய படி. நான் கண் விழித்த பின்னும், நேத்ரா என் முகத்தில் தண்ணீர் தெளித்தால், பிரதீப் யாரையோ சமாதானம் செய்து கொண்டிருந்தான். பட்டென எழுந்து உக்காரந்த நான், வலித்த என் கன்னததை தடவிக் கொண்டேன். அடி வாங்கியதை விடவும், மதுவின் முன்னால் அடிவாங்கியதை எண்ணி மிகவும் அவமானகரமாக உணர்ந்தேன். எழுந்து வெளியே சென்ற நான், பார்க்கிங்கில் இருந்து பைக் எடுக்க, வாங்கிய அடியின் காரணமா? அல்லது குடித்த சரக்கின் போதையா? என்று தெரியவில்லை, சாவியை போடும் முன்பே, சிறிது தள்ளாட, அநிதியின் எடையை சமாளிக்க முடியாமல் விழுந்தேன். நல்ல வேலையாக பைக்கின் கீழ் என் கால் சிக்கவில்லை.

வா, நான் டிராப் பண்ணுறேன்!” என்ற பிரதீப்பின் சத்தம் கேட்க, கண்டிப்பாக மதுவும் உடன் இருப்பாள் என்று உணர்ந்து, கீழே விழுந்த பைக்கை தூக்க முனைந்தேன். அவசர கதியில் ஸைட்-லாக் எடுக்காத்தால் மீண்டும் அதன் எடையை சீரில்லாமல் சரியா, ஆசை ஆசையாய் மதுவால் வாங்கிய பைக்கின் கண்ணாடியை எட்டு உதைக்க, அது உடைந்து பறந்து சென்றது. மீண்டும் அழைத்தான் பிரதீப், திரும்பாமல் இருந்தேன். காரில் இருந்து இறங்கிய பிரதீப், என்னை வலுக்கட்டாயமாக காருக்குள் தினித்தான். அடிபட்ட அவமானத்தால், திமிரக்கூட முடியாமல், ஒடுங்கி உட்கார்ந்திருந்தேன். பிரதீப் ஏறுவதற்கு முன் டிரைவர் சீட்டில் அமர்ந்தாள் மது, பின்னாடி திரும்பி நேத்ரவை பார்க்க, அவளும் ஏதோ புரிந்து கொண்டதைப் போல், இறங்கிக் கொண்டாள். நானும், மதுவும் மட்டுமே இருக்க, கார் கிளம்பியது. பதினைந்து நிமிடம் கழித்து கார், என் வீட்டின் முன் நிற்க, இறங்கப் போன என் கையை பிடித்தவள்

சாரிடா" என்றாள், எனக்கு இருந்த மனநிலையில், அவளைப் பார்த்து விரகத்தியாய் ஒரு சிரிப்பைத் உதிர்த்தேனே தவிர, வேறு எதுவும் பேசவில்லை. திடீரென்று ஸ்டேயாரிங்கை பற்றிக் கொண்டு அழுதாள், என் என்று கேட்க, ஆறுதல் சொல்ல, தோன்றவில்லை, எனக்கு. என்ன நினைத்தாளோ, என்னை இழுத்து, என் தோளில் சாய்ந்து கொண்டு அழத்தொடங்கினாள். அவ்வளவுதான் என் வைராக்கியம், அவள் கட்டிக் கொண்டும் அழ, நானும் அவளை தழுவிக் கொண்டு அழ ஆரம்பித்தேன்.

அவ்வளவுதான், அவளின் ஒரு சாரி டாவும்!! அவள் அழுகையும்!! என்னை ஆட்டிப்படைத்த மிருகத்தை ஒரே நொடியில் கொன்று புதைத்தது. நேற்றுவரை நான் அவளுக்கு இழைத்த துன்பத்தின் காரியத்தின் வீரியம் புரிய, அதுவரை எனக்கு நானே சொல்லிக்கொண்ட தர்க்க நியாயம், பெரும் முட்டாள்தனமாகபட்டது. எனக்கு அந்த நொடியில் தோன்றியதெல்லாம் "ஐயோ!! மது துன்பப்பட்டு இருப்பாள்?" என்பதுதான். அவ்வளவுதான், என் மது, என் வாழ்க்கை, திரும்பவும் எனக்கு கிடைத்துவிட்டாள் என்ற சந்தோஷத்தில், அன்னைக்கு அவள் கெஞ்சினபோது, நான் அவளை உதாசீனப்படுத்திவிட்டு வந்தது, நினைவுக்கு வர, “ச்சே, எவ்வளவு கஷ்டபட்டிருப்பா!” என்ற எண்ணமும் சேர்ந்து கொள்ள, அடக்க முடியாமல் அழுது தீர்த்தேன், இது தான் என் வாழ்வின் கடைசி அழுகையாக இருக்க போகிறதென்று. அப்பொழுது தெரியாது, இனிமேல் என் வாழ்வில் துன்பத்தையும், அழுகையையும் தவிர, வேறொன்றும் இருக்க போவதில்லை என்று.

**********

கனவிலும் நினைத்துப் பார்த்ததில்லை, மது இப்படியெல்லாம், பேசுவாள் என்று. இதற்கு பதில், அவள் என்னை சாக சொல்லியிருந்தால், சொன்ன மறு நொடியே யோசிக்காமல், என் கழுத்தை அறுத்துக் கொண்டு செத்திருப்பேன். அவளின் சொற்களை என்னால் ஜீரணிக்க முடியவில்லை. “தம்பி, என்னாச்சு பா?, ஏன் ஒரு மாதிரியா இருக்க?” அம்மா என்னை, உலுக்கி கேட்டதும் தான், நான் வீட்டுக்குள் வந்துவிட்டதை உணர்ந்தேன், அவளின் சொற்கள், என் மூளையை செயலிழக்க செய்திருந்தன!. அம்மாவை பார்த்ததும் எனக்கு கதறி, அழவேண்டும் போல் இருக்க, வாயை அசைக்கிறேன் சத்தவரவில்லை, என் கண்கள் இருட்ட, கால்களுக்கு கிழ் இருக்கும் தரை நழுவுவது போல் இருக்க, மயங்கிச் சரிந்தேன்.

விழிக்கும் போது, ஹாஸ்பிடலில் இருந்தேன், ஏதேதோ டெஸ்ட் எடுத்தார்கள், எத்தனை நாட்கள் என்று தெரியாது, ஏதோ ஒரு நாள், மீண்டும் வீட்டுக்கு வந்தேன். எந்த வித உணர்வும் இல்லாமல், குளித்தேனா?, சாப்பிட்டேனா?, தூங்கினேன்னா? என்று எதுவும் உணர முடியாத, ஒரு நிலையில் இருந்தேன்.

நேரம், காலம், கிழமை எதுவும் தெரியாத ஒரு நாள், ஏதோ ஒரு ஹோட்டல், பார்ட்டி ஹாலில் அமர்ந்திருந்தேன், ஒரு பிணத்தைப் போல. அப்பாவுக்கு எதுக்கோ பாராட்டு விழா, ஏதோ ஒரு அமைப்பு குடுக்க, அம்மாதான் தனியாகவே இருப்பதாக கூறி, என்னை வற்புறுத்தி இங்கு அழைத்து வந்திருந்தாள். நான் என் அப்பாவையே உணர்ச்சி இல்லாமல் பார்த்துக் கொண்டிருந்தேன்.

மது!, அவளை கண்டதும் எனக்குள் ஓர் நடுக்கம், எப்பொழுது வந்தாள் என்று கவனிக்கவில்லை, நேராக என் அப்பாவிடம் சென்றவள், கை கொடுத்து, கட்டிப்பிடித்தாள், அவருடன் ஒரு செல்ஃப்பி எடுத்தாள், என் அப்பாவினுடைய கை, அவளது தோள்களில் இருந்தது, சகிக்கவில்லை எனக்கு. மறுபடியும் கை குடுத்தவள், கிளம்பினாள். வெளியே செல்ல நடந்தவள், இடையில் நின்று யாரையோ முறைத்தாள். உடனே ஏதோ ஒன்று உந்த, அங்கிருந்து வெளியேறினேன், பார்கிங் சென்று அவள் காரை தேடிப் பிடித்து அருகில் நின்று கொண்டேன். என்ன பேசுவதென்று தெரியாவிட்டாலும், பேச வேண்டும் என்பதில் மட்டும் தெளிவாக இருந்தேன். காரின் கதவு திறக்கும் ஓசை கேட்க, நிமிர்ந்து பார்த்தால், அவள் தான், மொபைல் நொண்டிக் கொண்டே காரை நோக்கி வந்து கொண்டிருந்தாள். சிவகாமி ஆண்ட்டி அவளை நோக்கி ஓடி வந்து கொண்டிருக்க, அருகில் இருந்த தூணின் பின்புறம் மறைந்தேன்.

பானு!! ஒரு நிமிஷம் நில்லு!! நான் சொல்லுறத மட்டும் கேளு!!” சிவகாமி ஆண்ட்டியின் குரலில் அப்படி ஒரு பரிதவிப்பு. எனக்குக்குள் ஏதோ மணியடித்து, சிவகாமி ஆண்ட்டியின் பரிதவிப்புக்கும், மது என்னை விட்டு விலக்குவதற்கும் ஏதோ ஒரு தொடர்பு கண்டிப்பாக இருக்கிறதென்று. எட்டிப்பார்த்தேன், மதுவின் கோபப் பார்வையில் மருகி நின்றாள் அவளின் அன்னை.

நீ என்ன என்னை கூட்டிக் கொடுக்குறது!! நானே போய் படுக்குறேன்!! உனக்கு வேலை மிச்சம்!! அதுக்குத்தான ஆசைப்பட்ட?" கத்தியவள், மின்னலாக காரில் ஏறி, அதைவிடவும் வேகமாக சென்றுவிட்டாள். இருவரும் என்னை கவனித்தார்களா என்று கூட தெரியவில்லை.

***************

முடிந்தது, எல்லாம் முடிந்தது. அம்மா அழைத்து வந்தார்கள் என்பதை தவிர, அந்த பார்க்கிங்ல் இருந்து எப்போது கிளம்பினேன், எப்படி வீட்டுக்கு வந்தேன் என்பதெல்லாம் நினைவில் இல்லை. அறையில் என்னை வைத்துப் பூட்டிக்கொண்டேன்.

மதுவுடனான எனது கடைசி உரையாடல், எனது மனதில் ஓட

இது தான் என் வாழ்வின் கடைசி அழுகையாக இருக்க போகிறதென்று நினைத்த என்னிடம் .
நான் என்ன சொன்னாலும் செய்வியா?” அவள் கேட்க, அவள் முகத்தை பார்த்து பேச முயன்ற என்னை, இழுத்து அணைத்துக் கொண்டாள். நான் தலையாட்ட,

என்ன சொன்னாலும் செய்வியா?” திரும்ப கேட்க, மீண்டும் தலையாட்டினேன்

நான் வேணா செத்துறட்டுமா?” அழுதேன்

அத விட மோசமான ஒண்ணு, எனக்காக செய்வியா?” அவளும் அழுகையின் ஊடே கேட்டாள்,

நீ என்ன சொன்னாலும் செய்யுறேன்!!, நீ என் கூட மட்டும் இரு!!”

எங்......!!" என்று பேச ஆரம்பித்தவள், முடியால் உடைந்து அழுதாள்,

என்ன மறந்துரு!! நான் உனக்கு சரியானவ இல்ல!!” அவள் சொல்லிக் கொண்டிருக்கும் போதே உடைந்து அழ ஆரம்பித்தேன். அவளும் அழுதாள். அவளை இழுத்து அனைத்து

சாரி பாப்பா!! நான் பண்ணுணது எல்லாம் தப்புதான்!! ஏதோ கோவத்துல பண்ணிட்டேன்!! இனி நீ என்ன சொன்னாலும் கேக்குறேன்!! பிளீஸ்!! இந்த மாதிரி எல்லாம் பேசாதே!!” அழுகையின் ஏக்கங்களுக்கு இடையில், அவளிடம் கெஞ்ச, எதுவும் சொல்லாமல் என்னை அணைத்தபடி, அவளும் அழுது கொண்டிருந்தாள். சிறிது நேரத்திற்கு பிறகு, என்னை விலக்க முயன்றவளை, வலுக்கட்டாயமாக என்னோடு அனைத்துக் கொண்டிருக்க,

ஒரு நிமிசம் விடு!! பிளீஸ்!!” என்ற அவளின் கெஞ்சலில் விடுவித்தேன். என் இருகைகளையும் விடுவித்தவள்

என்ன சொன்னாலும் செய்வியா?”னு திரும்ப கேட்டாள், அழுதுவடியும் கண்களில் பெரும் பயம் அப்பியிருக்க முடியாதென்று தலையாட்ட

"ஐ ஹாட் அன் அப்பைர்!!!, வித் சம்ஒன்!!”னு முகத்தை மூடிக்கொண்டு அழுதவாறே சொல்ல,

பிளீஸ் மது!! நீ என்ன சொன்னாலும் செய்றேன்!! நான் பண்ணதெல்லாம் தப்புதான்!!” நான் முன்னிலும் வேகமாக தலையாட்டினேன், அவள் சொன்னதை நம்பமாட்டேன் என்பதை சொல்லாமல் சொன்னேன். என் அழுகையின் தீவிரம் கூடியிருந்தது, மூச்சு விட சிரமப்பட்டேன்.

“sorry!! I slept with someone!!” அவல மீண்டும் சொல்ல

என் கண்களில் கண்களில் கண்ணீர் சட்டென்று நின்றது, மீண்டும் அந்த மிருகம் ஆனேன். காரில் இருந்து இறங்கி நடந்தேன், வீட்டின் வாயிலை நோக்கி, திரும்பிக் கூட பார்க்கவில்லை. வாயிலை அடையும் போது, கண்களை துடைத்துக் கொண்டேன். வீட்டினுள் நுழைந்தேன், சிறிது நேரத்தில் மயங்கி சரிந்தேன்.
[+] 3 users Like Doyencamphor's post
Like Reply


Messages In This Thread
RE: அப்பனுக்கு பாடம் சொன்ன சுப்பன் - by Doyencamphor - 07-11-2020, 05:29 PM



Users browsing this thread: 36 Guest(s)