Fantasy காலம் என் கையில்
கால சூழல் - 13 


இடம்: சீதா வீடு - காரைக்குடி 
நாள்: மார்ச் 5 , 2018 , திங்கக்கிழமை
நேரம்: காலை 10 மணி

கார்த்திக், மலர்விழியிடம் அரை வாங்கி அவளை மிரட்சியாக பார்த்துக்கொண்டு இருந்தான். "இது வரை அவன் வீட்டில் அப்பாவிடம் மட்டுமே அரை வாங்கி இருக்கிறன், மற்றவர்கள் யாரும் அவனை தொட்டது கூட இல்லை, ஆனால் இவள் என்னை அரைந்துவிட்டாலே. கொஞ்ச நேரம் மின்னாடி பணிவா பம்மி பம்மி பேசி, நான் கன்னத்தை கிள்ளி கிண்டல் பண்ணும் போது சும்மா இருந்த இந்த பொண்ணா இப்ப என்னோட கன்னம் பழுக்குற அளவுக்கு அடிச்சா, ஒன்னும் புரியலையே, கொஞ்சம் நேரம் மின்னாடி தான் அம்மா அம்மானு அலறிக்கொண்டு பயந்தபடி உள்ளே சென்றவள், எப்படி முன்வாசலில் வரமுடியும், அதுவும் அப்பொழுது பார்த்த அந்த சாந்த முகம், இப்பொழுது கோவத்தில் சிங்க முகமாக இருக்கிறதே, நம்ம அம்மா சொல்லுவாங்க, பொண்ணுங்க கோவம் படுறதும் அவ்ளோ அழகுனு அப்ப நம்ம அத்தை பொண்ணு, அன்பாவும் இருப்பா, கோவமும் படுவா போல, ரெண்டுமே அவ முகத்துக்கு நல்லா தான் இருக்கு, ஹ்ம்ம் ஆனா அந்த அரை தான் என்ன அடி, கன்னம் தான் வலிக்கிது"  என்று மனதுக்குள் நினைத்தவாறு மலர்விழியை பார்த்தபடி நின்றுகொண்டு இருந்தான்

மலர்விழி அவளின் அமைதியை கலைத்தாள்.

மலர்விழி: ஹலோ, யாரு நீங்க, உங்கள நான் பார்த்ததே இல்ல, இப்படி தான் மின்ன பின்ன தெரியாத பொண்ணுங்க மேல கை வைப்பிங்களா, கன்னத்தை கிள்ளுவீங்களா (இடுப்பில் கை வைத்து ஒரு வித கோவ பார்வையுடன்)

கார்த்திக் குழம்பினான், ஐயோ பாவம், நம்ம அத்தை பொண்ணுக்கு நியாபக மறதி போல, அதான் கொஞ்சம் நேரம் மின்னாடி பார்த்த என்ன மறந்து, மறுபடி நான் யாருனு கேக்குறா, அது நாலா தான் அடிச்சுட்டா போல, சரி இவ கிட்ட விளையாட வேண்டாம், நம்ம வீடு தான் பாக்க வந்தோமு சொல்லிடுவோம்

கார்த்திக்: சாரிங்க, தப்பு என்மேல தான், உங்கள பார்த்த என்னோட காலேஜ் பிரின்ட் மாதிரி தெரிச்சுது அதான் அவ கிட்ட பண்ற மாதிரி உங்க கன்னத்தை கிள்ளிட்டேன், என்னோட பேரு கார்த்திக் நான் சென்னைல இருந்து வரேன், நான் உங்க ஹோட்டலை தான் தங்கி இருந்தேன், இங்க நான் ஒரு பிசினஸ் ஆரமிக்க வந்து இருக்கேன், லொகேஷன் பார்க்க, எப்படியும் 6 மாசம் மேல இங்க இருக்க மாதிரி இருக்கும், சீதா மேடம் தான், உங்க வீடு மேல உள்ள போர்டின் காலியா இருக்கு இங்க வந்து தங்கிக்கலாமு சொன்னாங்க, அவங்க தான் காலைல வர சொன்னாங்க, சீதா மேடம் இருக்காங்களா (அனைத்தும் மென்மையாக சொல்லிமுடித்தான்)

மலர்விழி கார்த்திக்கை பாவமாக பார்த்தாள், அவரசப்பட்டு அடிச்சுட்டோமோ என்று மனதுக்குள் நினைத்தபடி,

மலர்விழி: அப்படியா, அம்மா என்கிட்ட இதப்பத்தி ஏதும் சொல்லவே இல்லையே, அம்மா மடில ரூம் தான் கிளீன் பண்றங்க, ஆனா அது உங்களுக்கு தான்னு எனக்கு தெரியாது

(கார்த்திக் மனதுக்குள்: ஹ்ம்ம் உங்க அம்மா உங்கிட்ட சொல்லி இருந்தாலும் மறந்து இருப்ப, பாவம் இந்த பொண்ணு எல்லாத்தயும் மறந்தும் போல, என்று அவளின் மீது ஒரு இனம் புரியாத அன்புடன் பார்த்தான்) 

கார்த்திக்: பரவாயில்ல உங்க பேரு என்ன, என்னோட பேரு சொல்லிட்டேன், உங்க பேரு தெரிஞ்சா பேரு சொல்லி கூப்பிடலாம், (சிரித்தபடி)

இப்படிக்கு 
Loveyourself1990

என்னுடைய (கதைகள்) திரிகள்:

காதலுக்கு வயதில்லை 
https://xossipy.com/showthread.php?tid=31384

காலம் என் கையில் 
https://xossipy.com/showthread.php?tid=31598

அன்பிற்கு உண்டோ அடைக்கும் தாழ்
https://xossipy.com/thread-32596.html
[+] 2 users Like Loveyourself1990's post
Like Reply


Messages In This Thread
RE: காலம் என் கையில் - by Loveyourself1990 - 04-11-2020, 05:46 PM



Users browsing this thread: 32 Guest(s)