Thread Rating:
  • 5 Vote(s) - 3.4 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
தமிழ் திரைப்பட செய்திகள்
“பேரன்பும் பெரும் துயரமும் சந்திக்கும் புள்ளி”- இஸ்பேட் ராஜாவும் இதயராணியும் விமர்சனம்

[Image: 9ruoi0vg_harish-kalyan-shilpa-manjunath_...rch_19.jpg]
  • பிரிவுவகை:
    காதல் டிராமா
  • நடிகர்கள்:
    ஹரிஸ் கல்யாண், ஷில்பா மஞ்சுநாத், பால சரவணன், மா,க,பா
  • இயக்குனர்:
    ரஞ்சித் ஜெயகொடி
  • பாடல்கள்:
    சாம் சி எஸ்.

‘புரியாத புதிர்’ திரைப்படப்படத்திற்கு பிறகு இயக்குநர் ரஞ்சித் ஜெயகொடி இயக்கி இருக்கும் படம் ‘இஸ்பேட் ராஜாவும், இதய ராணியும்’. நீண்ட இடைவெளிக்கு பிறகு தனது படைப்பை கொண்டுவந்திருக்கும் இவர் உறவுகளில் அன்பும், வெறுப்பும் சந்திக்கின்ற மய்யப்புள்ளியை தேடும் பயணத்தை படமாக்கி இருக்கிறார்.
தன்தந்தையின் ஆதிக்கத்திற்கு கட்டுபட்டு வாழ இயலாத தன் தாய், தனக்கான வாழ்கையை தேர்ந்தெடுக்கச்செல்ல, பேரன்பு கொண்ட அந்த தாயின் மீது கோபம் நிறைந்தவனாக வளர்கிறார் கௌதம்.(ஹரிஸ் கல்யாண்). தந்தையின் அரவணைப்பு இருந்தாலும் தன் தாயின் பிரிவால்  அதீத அன்பு வைத்தால் அதன் எல்லை பிரிவாக இருக்கும் என்கிற புள்ளியிலே நின்று விடுகிறார்.  யாரிடமும் அதீத அன்பை பெறவும் செலுத்தவும் அச்சப்படுகிறவராய் வளர்கிறார். பெறபடும் அன்பு ஏமாற்றத்தின் விளைச்சலை கொடுக்கும் என்கிற பயம் கௌதமை ஆட்கொள்கிறது.
தணித்து விடப்பட்டதாக உணரும் கௌதமிற்கு இயற்கை காதலின் பேரன்மையும் பெரும் துயரத்தையும் கொடுக்கிறது. தான் உயிராய் நேசிக்கும் ஒருவரையே கொல்லும் அளவிற்கு வெறுப்பது ஏன். நேசிப்பவரையே வெறுக்க வைக்கின்ற மய்ய புள்ளி எது? என்று தன்னை சுய பரிசோதனைக்குட்படுத்தும் பெரும் பயணம்தான் இப்படத்தின் மய்யக்கரு.
தாயை பிரிந்து வாழும் கெளதமிற்கு தாராவின்(ஷில்பா மஞ்சுநாத்)அன்பு கிடைக்கிறது. இவர்களின் காதல் உறவில் அவ்வபோது ஏற்படும் சிறு பிரச்னைகள், பிரிவின் விளிம்புக்கு செல்கிறது. இருவரும் வேண்டாம் என்று மறுத்தாலும் காதல் இவர்களை ஒவ்வொரு முறையும் இணைத்து விடுவது எதார்த்தம். காதலியின் நேர்மையான புரிதல் கௌதமிற்கு பிரிந்து விடுவோமோ என்கிற அச்சத்தை வலுக்க வைகிறது. ஒரு கட்டத்தில் காதலித்த பெண்ணையே கொலை செய்யும் அளவிற்கு கொடூர என்னத்திற்கு தள்ளப்படும் இவர் என்ன செய்தார் என்பதுதான் படத்தின்  மீதிக்கதை.
இந்த படம் ரொமாண்டிக் திரைப்படம் கிடையாது ஆனால் தேவையான அளவு அதை கொடுத்திருக்கிறார் இயக்குநர். தன்னை விட்டு வேறொரு ஆணோடு தனது வாழ்க்கையை தேர்ந்தெடுக்க செல்லும் மணைவியின் நியாயமாண காரணத்தை உணர்ந்து, அதற்கு காரணம் தான்தான் என்பதை புரிதலோடு தன் வாழ்கையை நகர்த்தும் கௌதமின் தந்தையாக நடித்த பொன்வண்ணனின் நடிப்பு சிறப்பு.
சமகால இளைஞர்களின் காதல் உறவுகளில் ஏற்படும் சிக்கல்கள், இருவருக்கும் ஒருவரைப்பற்றி ஒருவரின் புரிதல் என்ன என்பதையெல்லாம் எதார்த்தமாக பதிவு செய்திருக்கிறார் இயக்குநர். கலாச்சார ஒடுக்குமுறைகளை எல்லாம் கடந்து சமூகத்தை தெளிவாக உணர்ந்திருக்கும் தெளிவான இளம் பெண்ணாக நடித்திருக்கிறார் ஷில்பா மஞ்சுநாத். ஒவ்வெரு முறையும் இருவருக்கும் ஏற்படும் பிரச்சனையின் போதும் நேர்மையான உரையாடலில் பிரச்னையை கடந்து போக நினைக்கு அவரது இயல்பான நடிப்பில் கைதட்டல்களை பெறுகிறார். சாம். சி. எஸ்சின் பிண்ணனி இசையில் பாடல்கள் படத்திற்கு வலுசேர்கிறது.   
காதல் தோல்வியில் தற்கொலை செய்து கொள்வதும், காதலித்த பெண்ணையே கொலை செய்வதும், தாக்குவதும், திரவ வீச்சு நடத்துவதும் இச்சமூகத்தில் நடந்து வரும் குரூரங்கள். ஆண் பெண் உறவுகள் பற்றிய அடிப்படை புரிதல் இல்லாமல் நடக்கும் இது போன்ற சம்பவங்களுக்கு தீர்வு ஒரு ஆண் தன்னை சுயபரிசோதனை செய்துக்கொள்ள தவறுவதுதான் என்பதை இப்படம் தெளிவு படுத்துகிறது.
படத்தில் சில காட்சிகளில் இயக்குநர் ரஞ்சித் ஜெயகொடி நடித்திருக்கிறார். அந்த காட்சிகளை தவிற்திருக்கலாம் என்று தோன்றியது. சமகால இளைஞர்களை நேர்மையான புரிதலின் அடிப்படையில் கொண்டு செல்ல வேண்டிய தேவை ஒவ்வொரு படைப்பாளிக்கும் இருக்கிறது என்பதன் அடிப்படையில் சில காட்சிகளை அவர் தவிற்திருக்கலாம் என்று தோன்றியது.
கௌதமிற்கு நண்பர்களாக வரும் பால சரவணன், மாகபா இருவரும் தங்களுக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தை கனகச்சிதமாக செய்து முடித்திருக்கிறார்கள்.  ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் உள்ள பிரச்னை, அந்த பிரச்னைக்காக நேர்மையான காரணங்கள் இவை அனைத்தையும் உணர்ந்து இயக்கி இருக்கிறார் இயக்குநர் ரஞ்சித் ஜெயகொடி என்பதை இப்படத்தில் இடம் பெரும் கதாபாத்திரத்தின் முக்கியதுவத்தை பார்க்கும் போது புரியும். அந்த வகையில் இந்த படம் அதீத அன்பு வைப்பவர்களை வெறுக்கும் வாழ்வின் அந்த புள்ளியை தொட்டிருக்கிறது என்றே சொல்லாம்
Like Reply


Messages In This Thread
RE: தமிழ் திரைப்பட செய்திகள் - by johnypowas - 15-03-2019, 06:41 PM



Users browsing this thread: 5 Guest(s)