Thread Rating:
  • 5 Vote(s) - 3.4 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
தமிழ் திரைப்பட செய்திகள்
#4
நீ இல்லாத இடமேது சுடர்மிகு வடிவேலா- இணையத்தை கலக்கும் ‘மரணமாஸ் வடிவேலு வெர்ஷன்’!

‘பார்க்கத் தானே போற இந்த காளியோட ஆட்டத்தை’ என்ற ரஜினியின் குரலோடு தொடங்குகிறது பாடல்
[Image: hascstkg_vadivelu,-marana-mass_625x300_0...ormat=webp]
ஃபேஸ்புக், ட்விட்டர், இன்ஸ்டா என்று சமூக வலைதளங்களின் ஆதிக்கத்தில் அன்றாடம் ஏதேனும் ஒரு விஷயம் வைரலாகி கொண்டே இருக்கின்றன. அரசியல்வாதிகள் என்ன பேசினாலும் அடுத்த சில மணி நேரத்தில் மீம்மாக போட்டு கலாய்த்து தள்ளி விடுகிறார்கள் நெட்டிசன்ஸ்.

இன்று சமூக வலைதளவாசிகளுக்கு விருந்தாக அமைந்தது ‘பேட்ட' படத்தின் மரண மாஸ் பாடலின் வடிவேலு வெர்ஷன். வடிவேலு இல்லாத மீம்களே இல்லை என்று இருக்கும் நிலையில் எந்தவொரு புதுப் படத்தின் பாடல் வெளியானாலும் சில மணி நேரங்களில் அந்தப் பாடலுக்கு வடிவேலு வெர்ஷன் உருவாகி விடுகிறது. தமிழ் மண்ணின் கலைஞனான வடிவேலுவின் உடல் மொழி அனைத்து சூழலுக்கும் குறிப்பாக அரசியல் பகடிக்கும், கேலி, கிண்டலுக்கும் இன்றும் அட்சர சுத்தமாய் பத்து பொருத்தத்துடன் பொருந்தி விடுகிறது.
‘பார்க்கத் தானே போற இந்த காளியோட ஆட்டத்தை' என்ற ரஜினியின் குரலோடு தொடங்குகிறது பாடல். இசை தொடங்கியதும் தவசி பட வேலைக்காரன் வடிவேலுவின் அட்டகாச ஆட்டமும் தொடங்குகிறது.
Like Reply


Messages In This Thread
RE: தமிழ் திரைப்பட செய்திகள் ட்ரெ�... - by johnypowas - 05-12-2018, 05:56 PM



Users browsing this thread: 2 Guest(s)