அப்பனுக்கு பாடம் சொன்ன சுப்பன்
ஆட்டம் முடிந்த அடுத்த நொடி, பெரும் பரபரப்புகிக்கிடையே, பார்வையாளர்களை தவிர அனைவரும் அவசர அவசரமாக கோர்ட்டில் இருந்து, அங்கிருந்த கிளப் ஹவுஸிற்கு அழைத்து செல்லப்பட்டோம். பரஸ்பர கை குலுக்கலுக்கு கூட அனுமதிக்கவில்லை. அன்றைக்கு முக்கிய விருந்தினராக வரவேண்டிய அமைச்சர் திடீரென்று மாரடைப்பால் இறந்துவிட்டதால், ஆளும் அரசின் சார்பாக அனைத்து அரசு விழாக்களும் ஒத்தி வைக்கப்பட்டுவிட, இந்திய டென்னிஸ் அசோசியேசன் பொறுப்பாளர்களே பரிசுகளை வழங்கினார்

முதலில் இருந்த பரபரப்புக்கு காரணம் அறிந்தவுடன் வெற்றி பெற்றுவிட்டேன் என்றது நினைவுவர உள்ளம் குதூகலித்தது. "எவன் செத்தால் எனக்கென்ன?” என்ற எண்ண ஓட்டத்தில் நான் இருக்க, என் எண்ணம் எல்லாம் வெற்றி பெற்று விட்டதை மதுவுக்கு தெரிவிக்க வேண்டும் என்று மட்டும், என் சிந்தையில் இருக்க, என் பையில் இருந்த மொபைலை எடுத்து மதுவுக்கு அழைத்தேன். முழுதாக "ரீங்" சென்ற போதிலும் அவள் எடுக்கவில்லை. நானும் விடாமல் திரும்பத் திரும்ப அழைக்க, அதற்குள் பரிசு பெறுவதற்காக நான் அழைக்க படவே, சென்று மேடையில் வெற்றி கோப்பையும், மேடலையும் வாங்கிவிட்டு, மறுநாள் பத்திரிகை செய்திக்கான புகைப்படத்தை எடுத்துக் கொண்டு மீண்டும் வந்து மொபைலை எடுத்தேன்.

தாத்தா, அம்மா, நேத்ரா, அகடமிக் ஆட்கள் எனத் தெரிந்த அனைவரிடம் இருந்தும் அழைப்போ அல்லது வாழ்த்து செய்தி வந்திருக்க, மதுவிடமிருந்து மட்டும் அழைப்பும் இல்லை, மெசேஜும் இல்லை. சிறிது ஏற்றம் இருந்தாலும், அதை ஒதுக்கிவிட்டு, வெற்றி பெற்றதை என் வாயால் அவளிடம் தான் முதலில் சொல்ல வேண்டும், அவளிடம் இருந்துதான், முதல் வாழ்த்தைப் பெற வேண்டும், என்ற ஆசையில், கிளப் ஹோவுஸில் இருந்து வெளியே வந்தபடியே மீண்டும் அவளுக்கு அழைத்தேன். மீண்டும் மது அழைப்பை எடுக்கவில்லை. கண்கள் கலங்க ஆரம்பித்தது ஏமாற்றத்தில்

"கிளம்பலாமா பா?” என்று அழைத்த கோச் மற்றும் மீதம் இருந்த டீம் ஆட்களை, நான் பின்னால் வருவதாக சொல்ல, அவர்கள் ஹோட்டலை நோக்கி நடந்தனர். நாங்கள் தங்கியிருந்த ஹோட்டேல் ஸ்டேடியத்திற்கு நடக்கும் தொலைவுதான். மீண்டும், மீண்டும் மதுவுக்கு அழைக்க, அவள் எடுக்கவில்லை. என் கலங்கிய கண்களில் இருந்து கண்ணீர் வெளியேறியது, நான் வென்றுவிட்ட செய்தியை என் வாயால், அவளை தவிர்த்து வேறு யாருக்கும் முதலில் சொல்ல எனக்கு கொஞ்சமும் விருப்பமில்லை.

வழிந்த கண்ணீரை துடைத்துவிட்டு, மீண்டும் அவளுக்கு கால் செய்ய, அப்பொழுது அங்கு வந்த மகராஷ்டிரா அணியினர் மீண்டும் நான் வேண்டுமென்றே நாடகம் போட்டு இறுதிப்போட்டியில் வென்றதாக குற்றம் சாட்ட, அவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட விருப்பம் இல்லாமல், வாயிலை நோக்கி நடையை கட்டினேன்.

"கங்கிராஜுலேசன்!! சாம்பியன்!!” என்ற மதுவின் சத்தம், என் பின்னால் இருந்து வர, நம்பமுடியாமல் திரும்பி பார்த்தால், மது என்னை பார்த்து வாயெல்லாம் பல்லாக சிரித்துக்கொண்டு இருந்தாள். ஓடி சென்று அவளை சந்தோசத்தில் கட்டிப்பிடிக்க, என்னை கட்டிக் கொண்டாள், சிறிது நேரம் கழித்து

"என்ன ரொம்ப மிஸ் பன்னியா.... பாப்பா?” என்னை இருக்கிக்கொண்டு

கால் கட் பண்ணு டா, இன்னும் எனக்கு ரீங் அடிக்குது!!” சிரித்தாள்.

அப்போதுதான், முந்தின நாள் அவளுடன் சண்டை போட்டதும், மகாராஷ்டிரா அணியினர் கிளப்பிவிட்ட எரிச்சலும், சற்று முன்வரை நான் திரும்பத் திரும்ப அழைத்தும் வேண்டும் என்றே கால் எடுக்காமல், அதற்காக நான் அழுததும் நினைவுக்கு வர, கோபத்தில், அவளை விலக்கி விட்டு விறுவிறுவென்று ஹோட்டலை நோக்கி நடந்தேன். முதலில் அதிர்ச்சியுடன் "என்னாச்சுடா?!! என்னாச்சுடா?” என்று கேட்டவள், பின் நான் கோபத்தில் இருக்கிறேன் என்பதை உணர்ந்துகொண்டு "சாரி டா!! சாரி டா!!” என்று கெஞ்சியவளை கொஞ்சமும் கண்டு கொள்ளாமல் என் நடையின் வேகத்தை கூட்டினேன்.

*************

ஹோட்டல் அறை திறந்து, அவளை உள்ளே செல்லச் சொல்லி நான் கண்களை காட்ட, கெஞ்சும் விழிகளுடன் ஏக்கமாக அவள் என்னை பார்த்தாள். கண்களை மூடி ஒரு பெருமூச்சு விட்டேன், என்ன நினைத்தாலோ அமைதியாக சென்று அங்கிருந்த மெத்தையில அமர்ந்தாள். அவளைத் தொடர்ந்து நானும் உள்ளே சென்று, என் கிட் பேக்கை வைத்துவிட்டு முகம் கழுவசென்றேன். திரும்பி வருகையில் என் மொபைல் அடித்தது.

தாத்தாதான் அழைத்திருந்தார், வாழ்த்துச் சொல்ல, அதை தொடர்ந்து அம்மா, அகாடமி ஆட்கள் என தொடர்ந்து வாழ்த்து சொல்ல, அனைவருடனும் பேசிவிட்டு போனை வைக்கும்போது, கோச் கால் செய்தார். அவரது அறைக்கு வரச் சொல்லி அழைத்தார், ஐந்து நிமிடத்தில் வருகிறேன் என்று சொல்லிவிட்டு உடை மாற்றினேன், மதுவை ஏறெடுத்தும் பார்க்கவில்லை.

"டென் மினிட்ஸ்ல வர்றேன்!!” என்று எங்கோ பார்த்தவாறு சொல்ல, என் கையைப் பற்றினாள். என் கையை பற்றியிருந்த அவள் கைகளை முறைத்தேன்.

"பிளீஸ்!! நான் சொல்றத கேளு!!” கெஞ்சினாள். உதறி என் கைகளை விடுவித்துக் கொண்டேன்.

"சாரி!!..பாப்பா!!” அழுகுரலில் கெஞ்சினாள்.

"ப்ச்!!........ i am not a kid!! don’t call me, பாப்பா!!” என்று நான் அவள் முகம் பார்த்து கத்த, மிரண்டுவிட்டாள், கண்களில் இருந்து கண்ணீர் வழிந்தது.

கண்களை மூடி மூச்சை இழுத்துவிட்டு, வந்த கோபத்தை கட்டுப்படுத்திக் கொண்டு, அருகில் இருந்த சேரில் அமர்ந்து அவளைப் பார்த்தேன். கண்ணீரைத் துடைத்தவள் என் அருகில் இருந்த மற்றொரு சேரில் அமர்ந்து, ரொம்பவும் தயங்கி தயங்கியே என் ஒரு கையைப் எடுத்து, அவளது இரு கைகளால் பிடித்துக் கொண்டாள், கையில் சிறு அழுத்தம் கொடுத்து

"அதான் நீ சொன்ன மாதிரி வந்துட்டேன்ல!!.. இன்னும் எதுக்கு டா கோவப்படுற?” கம்மிய குரலில் அவள் கெஞ்ச, நிமிர்ந்து அவளைப் பார்த்து முறைத்தேன்.

"காலையில் மேட்ச் ஸ்டார்ட் பண்றதுக்கு முன்னாடி ஒரு போன் பண்ணி விஷ் பண்ணனும்னு கூட உனக்கு தொணல? இல்ல?” என் கையை உருவிக் கொண்டேன்

"மொபைல்ல சார்ஜ் இல்ல டா!!, கோயம்புத்தூர் ஏர்போர்ட்லயே சுவிட்ச் ஆஃப் ஆயிடுச்சு!!” நம்பவில்லை என்பது போல் அவளைப் பார்க்க

"நெஜமா டா!! சென்னை டூ ஹைதராபாத் ஃப்ளைட்ல தான் ஒருத்தர்கிட்ட ரெக்குவஸ்ட் பண்ணிக் வாங்கி சார்ஜ் போட்டேன், அவசரத்துல சார்ஜர் எடுத்துட்டு வரல!!”

அவள் என்னை தொட தயங்கியபோதே, அவள்மீது பரிதாபம் வந்துவிட்டது, இப்பொழுத்து எந்தவித முன் ஏற்பாடும் இல்லாமல் ஹைதராபாத் வரை அவள் வந்திருக்கிறாள் என்று உணர்ந்தாலும், பிடித்த விம்பை விட ஏதோ ஒன்று தடுத்து.

"சரி இங்க எப்ப வந்த?” குற்றவாளி போல் அவள் இருக்க, நான் கேள்வி கேட்டேன்.

"உன் மேட்ச் ஸ்டார்ட் ஆன அஞ்சு நிமிஷத்துல எல்லாம் வந்துட்டேன்” ஏதாவது நிவாரணம் கிடைக்குமா என்பதுபோல் சட்டென்று பதில் அளித்தாள்.

"பிளைட்ட விட்டு இறங்கின உடனே கால் பண்ணி இருக்கலாமே?” என் அப்படி கேட்டேன் என்றெல்லாம் தெரியவில்லை

"நேர்ல வந்து உனக்கு சர்ப்ரைஸ் கொடுக்கலாம்னு நெனச்சேன்!! டிராஃபிக்கில் மாட்டி ஸ்டேடியம் வர ரொம்ப லேட் ஆயிடுச்சு!! சாரி டா!!” அவள் சர்ப்ரைஸ் என்று சொன்னதும் மீண்டும் கடுப்பானேன்.

சரி!!, இப்போ நான் கால் பண்ணும் போது ஏன் எடுக்கல?” அவ்வளவு எளிதில் அவளை விடுவதாக இல்லை,

அது.....” என்று தயங்கியவளை, நான் முறைக்க

நான் எடுக்கலாம்னு நினைக்கும் போதுதான் நீ வெளிய வந்த!!” மீண்டும் என்னைப் பார்த்து தயங்கியவளை, சொல்லிமூடி என்பது போல் பார்த்தேன்.

இல்ல!!....நான் கால் எடுக்கலனு நீ ரெம்ப ஃபீல் பண்ணி அழுதியா!!.... அத பார்த்ததும் நீ என்ன எவ்வளவு மிஸ் பண்ணுறனு பாக்குறதுக்காக....” என்று அவல சொல்லிக் கொண்டிருக்கும் போதே, இடைவெட்டி

நான் அழுகுறத பார்த்து சந்தோஷப் பாட்டுருக்க?” என்று எகிற, முதலில் ஆமோதிப்பதாக தலையாட்டியவள், பின் இல்லை என்று வேகமாக தலையசைத்தவள்,

என்ன பாப்பா!! இப்படி எல்லாம் பேசுற!!” கண் கலங்கினாள்.

"மொபைல் எங்க?” பேச்சை மாற்றினேன். எழுந்து சென்று மொபைலை எடுத்துவந்து என் கையில் கொடுத்தாள், வாங்கிய மொபைலை சார்ஜரில் போட்டுவிட்டு

"பத்து நிமிஷம்!! வர்றேன்!!” என்று சொல்லியவாறே, அறையிலிருந்து வெளியேறி கோச்சின் அரை நோக்கி சென்றேன்.
[+] 3 users Like Doyencamphor's post
Like Reply
Do not mention / post any under age /rape content. If found Please use REPORT button.


Messages In This Thread
RE: அப்பனுக்கு பாடம் சொன்ன சுப்பன் - by Doyencamphor - 31-10-2020, 11:29 PM



Users browsing this thread: 3 Guest(s)