"ப்ளீஸ்... சொன்னா கேளுங்க,... இதையெல்லாம் படிக்காதீங்க"
#48
அர்ச்சனாவும், அவள் புருஷனும் ஒரு அறையில் தங்கள் உடைமைகளை வைத்து தங்கிக் கொள்ள, நாம இன்னொரு அறையில் தங்கினோம்.

இரண்டு அறைகளின் கதவுகள் எதிர் எதிர் திசைகளில் அமைந்திருக்க, இரண்டு அறைகளுக்கும் பொதுவாக ,....கட்டிடத்தின் மையத்தில், நான்கு சோஃபாக்கள் போடப்பட்டு நடுவே பெரிதான டீ பாய் வைக்கப்பட்டிருந்த ஹால் இருந்தது. அந்த கட்டிடத்திற்கு முகப்பில் இரண்டு சூட்களுக்கும் பொதுவான மெயின் டோர் இருந்தது. இந்த மெயின் டோரைப் பூட்டி விட்டால் நம்ம இரண்டு அறைக்கு யாரும் வெளியிலிருந்து வர முடியாது.

நாம நாலு பேரும் சோஃபாவில் உட்கார்ந்து, பயணச் சுற்றுலாவை திட்டமிட்டோம். பின்னர் டிபன் வரவழைத்து சாப்பிட்டு விட்டு, பயணக் களைப்பு தீர அவரவர் சூட்களில் படுத்து தூங்கினோம்.


மாலை 3 மணி அளவில் எழுந்து, முகம் கை கால் கழுவி மிதமான மேக்கப் செய்து, நைனா தேவி ஆலயத்தை முதன் முதலாக பார்க்க முடிவு செய்து, காரில் புறப்பட்டோம்.

நைனா தேவி ஆலயம்:- நைனா மலையின் உச்சியில் அமைந்thuதுள்ள, புனிதத் தளங்களில் ஒன்றான, சக்தி பீடங்களில் ஒன்றாகக் கருதப்படும் நைனா தேவி ஆலயம், நைனிடாலில் உள்ள ஆலயங்களுள் முக்கியமானதாகும். இங்குள்ள பழங்குடியினர் இங்கு வாக்கு கேட்ட பின்பே காரியங்கலைச் செய்ய தொடங்குகிறார்கள்.

புராணக் கதைகளில்,.... சிதைக்கப் பட்டதாக கூறுப்படும், சக்தியின் உடல் பாகங்களில், சக்தியின் கண் விழுந்தாக கருதப்படும் இந்த இடத்தில் இந்தக் கோயில் எழுப்பப்பட்டுள்ளதாக கூறுகிறார்கள். ஆலயத்தின் இடது முன் புறம் பெரிய பீபல் மரமும், வலது முன் புறத்தில் அனுமன், மற்றும் கணபதி சிலைகள் அமைந்துள்ளது. கோயிலின் உட் புறம் காளிதேவி அம்மனும், நைனா தேவி அம்மனும் விநாயகப் பெருமானும் முக் கடவுள்களாக வீற்றிருந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார்கள்.

கோயில் பகுதியை நெருங்குவதற்கு முன்பே, காரை நிறுத்தி விட்டு, நடைப் பயணமாக,..... ஜில் என்ற காற்று மேனியை வருட, இயற்கை எழில் சூழ்ந்த கரடு முரடான மலைப் பாதையில், பல் வேறு மொழி, இன மனிதர்களோடு நடைப் பயணமாக நடந்து சென்று கோயிலை அடைந்தோம்.

கோயில் கோபுரத்தைக் கண்களில் கண்டதும் பல் வேறு ஆசைகளையும், நினைவுகளையும் மனதில் அசை போட்டபடி வந்தவர்கள், அவற்றை மறந்து, துறந்து அங்கே இருந்த தெய்வங்களைப் பற்றியும் தங்களது வேண்டுதல்களையும் நினைத்து கடவுள்களை வேண்டியபடி வந்தனர்.

அகலமான விசாலமான படிக் கட்டுகளில் பக்தியுடன் ஏறி, ஆலயத்தின் முன்னே வீற்றிருந்து பக்தர்களுக்கு அருள் பாலித்த கணேசனை முதலாவதாக வணங்கி, கோயிலின் நீண்ட உட்பிரகார மண்டபத்துக்குள் நுழைய.... வேண்டுதலை முடித்து திரும்பிச் செல்வோரின் பேச்சுகளைக் கேட்க முடிந்தது.


இங்கே வந்து வேண்டிகிட்டா, செய்ய நினைக்கிற காரியம், எந்தத் தடங்களும் இல்லாம நினைச்ச காலத்துக்குள்ள நல்ல படியா முடியுமாம். நினைக்கிற காரியம் பூர்வ ஜென்ம பாவங்களாலே நிரைவேறாதுன்னாலும் அதுக்கும் அறிகுறிகளை கடவுள் காமிச்சிடுமாம்.

அப்படியா?

அதுவுமில்லாம, கோயிலுக்கு வெளியே சிவப்பும், வெள்ளையுமா மலர்கள் பூத்து குலுங்குற மரம் ஒன்னு பாத்தோமே. அதுக்கு அடியில வேண்டுதல் செஞ்சவங்க போய் கை ஏந்தி நின்னு வேண்டிகிட்டா, அப்பவே நாம நினச்சு வேண்டிகிட்டது நிறைவேறுமா... நிறைவேறாதான்னு பூ மூலமா கடவுள் காட்டிக் கொடுத்துடுமாம்.’

எப்படி காட்டிக் கொடுக்கும்?

வேண்டிகிட்டு ஏந்திய கையிலே வெள்ளைப் பூ விழுந்தா, காரியத்தை முழு மனசா, எந்த வித சஞ்சலமும் இல்லாமே தொடங்கலாமாம். சிவப்பு பூ விழுந்தா எவ்வளவு வாய்ப்பு நமக்கு சாதகமா இருந்தாலும், யார் சொன்னாலும் தொடங்கவே கூடாதாம்.

ரெண்டு கலர் பூவும் ஒன்னா விழுந்துட்டா?

அப்படி இது வரைக்கும் விழுந்ததே இல்லையாம்.


எங்களைக் கடந்து சென்றவர்களின் பேச்சைக் கேட்ட நான் ஒரு முடிவுக்கு வந்து,.....மூல விக்கிரகங்களின் முன் நின்று,.....கை கூப்பி, பக்தியுடன் முக் கடவுள்களை மனதுக்குள் நினைத்து,...

‘தாயே,....தவறோ சரியோ, கண் கண்ட கடவுளாம் கணவனின் ஆசைப் படி நடந்து கொள்ள வேண்டும் என்பதற்காக எனக்கு விருப்பம் இல்லாவிட்டாலும், இன்னும் தீராத மன சஞ்சலத்துடன் இன்னொரு புதிய உறவுக்காக, இது வரை வந்துவிட்டேன். நான் செய்யப் போவது தவறாக இருந்தால் நீயே அதைத் தடுத்து, என் கணவனுக்கு நல்ல புத்தியை கொடுத்து, என்னை இந்த இக்கட்டிலிருந்து மீள வழி காட்டி விடு.

சரி என்றால் அதற்கும் உன் முடிவை இப்போதே சொல்லிவிடு.’ என்று வேண்டி, கண் திறக்க குருக்கள் அர்ச்சனைத் தட்டை என் முன் நீட்டியபடி நின்றிருந்தார். நீட்டிய தட்டிலிருந்து, குங்குமத்தை எடுத்து, நெற்றி நடுவேயும், வகிடின் ஆரம்பத்திலும் வைத்து, ......தாலியை எடுத்து அதற்கு வைக்கப் போகும் சமயம்,.... கோயிலின் உள்ளே ஆராதனை மணி ஒலித்தது.
Like Reply


Messages In This Thread
RE: "ப்ளீஸ்... சொன்னா கேளுங்க,... இதையெல்லாம் படிக்காதீங்க" - by johnypowas - 15-03-2019, 10:45 AM



Users browsing this thread: 3 Guest(s)