15-03-2019, 10:42 AM
நிதர்சனமாக நிறைவேறாது என்று தெரிந்தும், மனிதர்களின் மனங்களில்தான் எத்தனை அந்தரங்க ஆசைகள் புதைந்து கிடக்கிறது? சுய கட்டுப்பாடோ, சமூகக் கட்டுப் பாடோ, அமைபுக் கட்டுப் பாடோ,.... ஏதோ ஒன்று, மனிதனை கட்டிப் போட்டு வைத்திருக்கிறது. ஒவ்வொரு மனிதனின் மனதையும் திறந்து படிக்க,.... பார்க்க சந்தர்ப்பம் கிடைத்தால், வெளியில் சொல்ல முடியாத எவ்வளவோ ஆசைகள் அவனுள் கொட்டிக் கிடப்பதை அறிந்து கொள்ள முடியும். கேட்டு, அவமானப் பட்ட ஆசைகள், கேட்காமலே மனதிலேயே புதைத்துக் கொண்ட ஆசைகள், நிறைவேறாத அநியாமான ஆசைகள். இப்படி எத்தனையோ!....
இப்படி என்னென்னவோ நினைத்துக் கொண்டு படுத்திருக்க, எப்போது தூங்கினேன் என்று தெரியவில்லை.
அதி காலையில் கண் விழித்த போது, இரயில் ராம்புர் ஸ்டேஷனை வந்தடைந்திருந்தது. பயணிகள் கூட்டம் அவ்வளவாக இல்லை. காபி குடித்து, காலைக் கடன்களை முடித்து, வேறு உடை அணிந்து கொண்டோம்.
நான்கு மணி நேர பயணத்துக்குப் பிறகு, இரயில் உத்ரகான்ட் மாநிலம் லால் கான் ஜங்க்ஷன் வந்து சேர்ந்தது.
மீண்டும், மேடாக இருந்த மலைப் பாதையில் மெதுவாக ஊர்ந்த இரயில், காலை 9.30 மணிக்கு கடல் மட்டத்திலிருந்து 520 மீட்டர் உயரத்தில் இருந்த, கத்கோடம் ஸ்டேஷனை வந்தடைந்தது. கடைசி ஸ்டேஷனும் இதுதான்.
நீண்ட பயணம் மேற்கொண்ட அசதியில் பயணிகள் தங்கள் உடமைகளோடு கம்பார்ட்மென்டிலிருந்து இறங்கி, அவரவர் இலக்கை நோக்கி, அவரவர் சொந்தங்களோடு போய்க் கொண்டிருந்தனர். பயணிகளோடு, நாமும் லக்கேஜ்களை எடுத்துக் கொண்டு இறங்கி ஸ்டேஷனில் இருந்து வெளியே வந்தோம்.
ஜில்லென்ற மலைசாரல் காற்று வீச, மலை முகடுகளில் தாழ்வாக வெண் பஞ்சு பொதிகளாய் மேக கூட்டம் நகர்ந்துகொண்டிருக்க, தூரத்தில் நீல வண்ணத்தில் மலைச் சிகரங்கள் மங்கலாகத் தெரிய,...பக்கத்தில் இருந்த பகுதிகள் பச்சை நிற புல் வெளிகளாலும், தாவரங்களாலும்.....பச்சைப் பசேலென்று பச்சைக் கம்பளத்தை விரித்து விட்டதைப் போல இருந்தது.
ஆங்காங்கே, இதற்கு முன்னர் பார்த்திராத செடிகள், கொடிகள் பல வண்ணங்களில் பூத்த பூக்களைத் தாங்கி, மிதமான காற்றுக்கு அசைந்து, நம்மை அழைத்துக்கொண்டிருந்தது. மலைத் தாவரங்களிலிருந்து வந்த வாசனைக் கலவை, நறு மணமாய் நாசிக்குள் புகுந்து ஒரு சுகந்தத்தைக் கொடுக்க, மென்மையான குளிர் காற்று மேனியைத் தழுவ,.... பரபரப்பில்லாத அந்தப் பகுதி,.....மனதுக்கு மகிழ்வு தரும் வசந்தமான ஏதோ புதுமையான இடமாக இருந்தது.
ஸ்டேஷனுக்கு வெளியே, மனு மகாராணி ஹோட்டலில் இருந்து, நம்மை அழைத்துச் செல்ல கார் வந்து நின்றிருந்தது.
காரில், நாம நம்ம லக்கேஜ்களோடு ஏறிக் கொள்ள, கார் நைனிடால் டவுனை நோக்கிப் புறப்பட்டது.
சாலையின் இரு பக்கமும், பச்சைப் பேசெலென்ற தாவரங்களின் பின்னணியில் ஓக், சில்வர் ஓக், யூகாலிப்டஸ்,.... இன்னும் என்னென்னவோ இனம் தெரியாத மலைக் காட்டு மரங்கள் அடர்த்தியாய் அணிவகுத்து வானுயர்ந்து நிற்க,... அரை மணி நேர வளைந்து, நெளிந்து சென்ற மலைப் பாதை பயணத்தில், நைனிடால் டவுனை அடைந்தோம். பெரிய நகரம் என்று சொல்ல முடியாவிட்டாலும், ஓரளவு சிறிய நகரம்தான். சுற்றுலா பகுதியானதால் நாளுக்கு நாள் வளர்ச்சியடைந்துகொண்டே இருக்கிறது.
நைனிடால் டவுனின் முக்கிய சாலையும், கடைகள் நிறைந்ததுமான மால் ரோட்டைத் தொட்டு, டவுனிலிருந்து, மேடு பள்ளங்களாய் சாலைகள் வளைந்து நெளிந்து பல்வேறு திசைகளை நீண்டிருக்க, ...மேற்கே சென்ற மலைப் பாதையில் கொஞ்ச தூரம் பயணம் செய்து, டவுனை விட்டு தள்ளி இருந்த மனு மகாராணி ஹோட்டலை அடைந்தோம்.
இயற்கை எழில் சூழ, கீழே சிறிதும், பெரிதுமான கட்டிடங்கள், மேடுகளிலும், பள்ளங்களிலும் அமைந்திருந்த நைனிடால் டவுனும், மிதமான சூரிய ஒளியில் பச்சைப் பசேலென்ற நிறத்தில் பள பளக்கும் நைனிடால் ஏரியும், தெள்ளத் தெளிவாகத் தெரியும் உயரத்தில், பக்கம் அமைதியான சூழலில் பணக்காரத் தன்மையோடு மனு மகாராணி ஓட்டல் அமைந்திருந்தது.
காரை விட்டு நாங்கள் இறங்க, ஓட்டல் பணியாளர்கள் வந்து பணிவாய் லக்கேஜ்களை எடுத்துக் கொண்டு முன்னே செல்ல, நான்கு பேரும் அவர்கள் பின்னால் சென்றோம்.
தனியாக இருந்த இரண்டு சூட் மட்டும் கொண்ட ஒரு தங்குமிடத்திற்கு எங்களை பணியாளர்கள் அழைத்துச் சென்றனர். அறைகளைத் திறந்துவிட்டு, லக்கேஜ்களை வைத்து விட்டு, ‘ஏதாவது தேவையாக இருந்தால் இன்டர்காமில் அழையுங்கள்’ என்று ஆங்கிலத்தில் சொல்லி, பணிவாக விடை பெற்றனர்.
பத்து பேர் படுத்து உருளும் அளவுக்கு இருபதுக்கு இருபது அடி பரப்பளவில், வெது வெதுப்பை தரக்கூடிய சிம்னியுடன் அறை விசாலமாக இருக்க,.... படுக்கையோ நான்கு பேர் வசதியாக படுத்துப் புரண்டு தூங்கும் வகையில் பெரிதாகவும் மென்மையாகவும் கம்பளிகளோடும், தலையணைகளோடும் இருந்தது. .
24 மணி நேரமும் வென்னீரை தர ஹீட்டர் பொருத்தப் பட்ட, டைல்ஸ் பதிக்கப் பட்ட, சுத்தப் படுத்தப் பட்டு தூய்மையாக இருந்த வெஸ்டர்ன் டாய்லட்டோடு இருந்த தாராளமான குளியலறை, சூட்டோடு இணைக்கப்பட்டிருந்தது.