வீட்டுக்காரர்(completed)
#66
சரியா மூன்று மணிக்கு விக்ரம் நித்தியா கிளம்பலாம் என்று சொல்ல நான் உடையை சரி செய்து தலை முடியை ஒழுங்கு படுத்தி கிளம்பினேன். நாங்க பிளாட்பாரம் சென்று கொஞ்ச நேரத்திலேயே ட்ரெயின் வந்தது. நான் ரெண்டாவது படுக்கை வசதி கம்பார்ட்மென்ட் என்று நினைக்க அவன் முதல் வகுப்பு குளிர் சாதன பெட்டியில் ஏறி ஒரு இருக்கையை காட்ட நான் விக்ரம் எதுக்கு இவ்வளவு காசு செலவு செய்தே என்றதும் அவன் நித்தியா கடைசி நிமிஷத்தில் இந்த டிக்கெட் தான் ப்ளாக் விலையில் கிடைச்சுது. பரிசோதகர் வந்தா உன் பேர் கவிதா என் பெயர் சுனில்னு சொல்லு மறந்துடாதே என்று சொன்னான். அந்த இடத்தில் எங்களை தவிர வேறு யாரும் இல்லை வண்டி புறப்பட ஏசி குளிர் அதிகாமகியது. நான் துப்பட்டாவை இழுத்து போர்த்தி கொண்டேன். 




வழியில் ஒரு நிறுத்தத்தில் இளம் பெண் ஏறி நாங்க இருந்த இடத்தில் மேல் பர்த்தில் படுக்க போனாள் . பரிசோதகர் எந்த கேள்வியும் கேட்கவில்லை இரவு சாப்பாடு ரயிலிலேயே கொண்டு வந்து குடுத்தார்கள் அடுத்த நாள் காலை சென்னையை அடைந்தோம். இறங்கின உடனே விக்ரமிடம் ரொம்ப காஸ்ட்லி ஹோட்டல் வேண்டாம் என்று சொல்ல அவன் இது ஹோட்டல் மாதிரி இருக்காது வீடு போல தான் இருக்கும் எப்படியும் ஒரு வாரம் தங்குவதால் அதை என் நண்பன் சிபாரிசு செய்தான் ஆட்டோ எடுத்து அந்த இடம் சென்று அடைந்தோம். விக்ரம் சொன்னது போல வீடு போலவே இருந்தது ஒரு கதவை திறந்து எங்களை உள்ளே விட ரெண்டு அறைகள் ஒன்று ஹால் போல இருந்தது கண்டிப்பா அடுத்தது படுக்கை அறை என்று புரிந்தது. அந்த பையன் சார் போன் செய்யுங்க உங்களுக்கு எதாவது தேவை இருந்தா என்று சொலி விட்டு கிளம்ப நான் பயண அசதி நீங்க குளித்து முடித்து உடை மாற்றி கொள்ள அது வரை விக்ரம் அந்த ஹாலில் தான் இருந்தான். நான் வெளியே வந்ததும் அவன் குளிக்க செல்ல நான் ஹாலில் உட்கார்ந்தேன். ஒரு வழியாக செட்டில் ஆனதும் விக்ரம் நித்தியா உன் தோழிகள் நமபர் போட்டு பார் என்று சொல்ல ரெண்டு மூன்று நம்பர்கள் உபயோகத்தில் இல்லை என்று வர ஒருத்தி எடுத்து ஹே நித்தியா எப்படி இருக்கே இப்போ பெங்களூர் தானே நான் கூட இப்போ ஒரு வேலையா பெங்களூர் வந்தேன் ஆனா உன் புது நமபர் தெரியாததால் பேசவில்லை சொல்லுடி எங்கே இருக்கே மீட் பண்ணலாமா என்று கேட்க நான் ஐயோ காயத்ரி நான் உன்னை தேடி சென்னை வந்து இருக்கேன் என்றதும் அவ சரியா போச்சு சரி எத்தனை நாள் இருப்பே நான் நாளை மறுநாள் வந்து விடுவேன் என்றாள் நான் சரி வா இது தான் என் நம்பர் வந்ததும் அவசியம் என்னை கூப்பிடு என்று சொல்லி வைத்தேன்.


வெளியே சென்ற விக்ரம் மத்தியானத்திற்கு பிறகு தான் வந்தான் அவன் ஊரிலே இவ்வளவு வெயில் அனுபவிச்சு இருக்க மாட்டான் உள்ளே ஏசி அறைக்குள் வந்ததும் வாடிய ரோஜா தண்ணீர் தெளித்தால் எப்படி கொஞ்சமாக மலருமோ அது போல முகம் மலர எனக்கே அவனை பார்க்க பாவமாக இருக்க அவனிடம் விக்ரம் நீ போய் அந்த அறையில் கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடு ரொம்ப டையர்டா இருக்கே என்றேன். அவனும் சொன்னா போதும் என்ற கணக்கில் எழுந்து சென்று படுக்கையில் சாய்ந்தான். போட்டிருந்த ஷூ கூட கழட்டவில்லை. நான் எழுந்து சென்று அவன் ஷூவை கழட்டி விட்டு சாக்ஸையும் கழட்டி விட விக்ரம் நித்தியா இப் யு டோன்ட் மைண்ட் கொஞ்ச நேரம் பாதங்கள் மட்டும் மசாஜ் செய்ய முடியுமா இந்த வெயிலில் நடந்ததால் நெறைய வாட்டி கிராம்ப்ஸ் வந்தது எப்படியோ சம்மாளிச்சு வந்து சேர்ந்தேன் என்றான். நான் எதுக்கு நடந்து வந்தே விக்ரம் ஆட்டோ இல்ல கால் டாக்ஸி எடுத்து இருக்கலாமே என்று கேட்க இல்ல நித்தியா நாம் இங்கே எத்தனை நாள் தங்க போறோம்னு தெரியலை உன்னிடமும் பணம் இல்லை அது தான் கொஞ்சம் சிக்கனமா செலவு செய்ய நினைத்தேன். அது மட்டும் இல்ல நீயும் நானும் சேர்ந்து போகும் போது உன்னை நடத்தி கூட்டி போக முடியாது அப்போ கண்டிப்பா கால் டாக்ஸி எடுக்கணும் என்று சொல்ல நான் பதில் சொல்ல முடியாமல் அமைதியாய் இருந்தேன்.




பிறகு சரி காலை நீட்டி படு விக்ரம் பாதங்களை அமுக்கி விடுகிறேன் என்று சொல்ல விக்ரம் கால் நீட்டி படுக்க அவன் அணிந்து இருந்த ஜீன்ஸ் பாண்ட்டை மேலே உயர்த்தி விட்டு பாதங்கள் துவங்கி கணுக்கால் வரை மிதமான அழுத்தம் குடுத்து அமுக்கி விட்டேன். விக்ரம் எப்போ தூங்கினான் என்று பார்க்கவில்லை. ஒரு ஆச்சரியம் நவீன் கால்கள் ஆகட்டும் அந்த பொறுக்கி ரோஷன் கால்கள் ஆகட்டும் முரட்டு தனமா இருக்கும் ஆனால் விக்ரம் கால்கள் வெள்ளைவெளேரென்று வாழைத்தண்டு போல இருந்தன அதை அமுக்கும் போது கைகளுக்கு வலி தெரியவில்லை அழுத்தி விட்டு கையை எடுக்கும் போது அழுத்தின இடத்தில் புது ரத்தம் பாய்ந்து பச்சை கலந்த இளம்சிகப்பு நிறத்தில் கால்களின் நிறம் மாறியது பார்க்க நன்றாக இருந்தது. நன்றாக தூங்கி விட்டான் என்று தெரிந்து கொண்டு எழுந்து அடுத்த அறைக்கு சென்றேன். விக்ரம் இருந்த அறையில் என் மொபைலை விட்டு விட்டு வந்து இருந்தேன். கொஞ்ச நேரத்தில் அதன் மணி ஒலிக்க அது விக்ரம் தூக்கத்தை கெடுத்து விட கூடாதுன்னு ஓடி போய் எடுத்து சைலென்ட் மோடில் மாற்றி யார் என்று பார்த்தேன். வேறு யார் ரோஷன் பொறுக்கி தான் நான் அடுத்த அறைக்கு சென்று ரோஷன் என்னை அழைக்கதேனு சொல்லி இருக்கேன் பிறகு ஏன் டிஸ்டர்ப் செய்யறே என்று கேட்க அவன் நித்து நீ எங்கே இருக்கே நவீன் சிகிச்சைக்கு பணம் கேட்கறாங்க என்னால் முடிந்த பணம் முழுசும் கட்டியாச்சு என்று சொல்ல நான் ஏன் உன் கூட நவீனை பார்க்க வந்தாலே ஒரு சிறுக்கி நவீனுக்கு மடி மேலே படுக்க வச்சு உணவு ஊட்டினாலே அவளை குடுக்க சொல்லு நான் என் அம்மா வீட்டிற்கு போய் விட்டேன் நீ ஆச்சு நவீன் ஆச்சு என்னை தொந்தரவு செய்யாதே என்று கோபமாக சொல்ல ரோஷன் நித்து ஏன் இப்படி அப்பட்டமா பொய் சொல்லறே இப்போ நான் பேசறதே உங்க வீட்டில் இருந்து தான் அங்கிள் ரொம்ப கவலையா இருக்கார் சரி நீ எங்கே இருக்கேன்னு சொல்ல வேண்டாம் அட்லீஸ்ட் உனக்கு துணைக்கு யார் இருக்காங்க அது தெரிஞ்சா அங்கிள் கொஞ்சம் நிம்மதி அடைவார் என்று சொல்ல இந்த சிறிய காலத்தில் அவன் எப்படியெல்லாம் பேசி விஷயத்தை கறப்பான் இப்போ கண்டிப்பா அவன் சந்தேகம் எல்லாம் விக்ரம் மேலே தான் இருக்கும்னு நல்லா புரிஞ்சுது விக்ரமை காட்டி குடுக்க விரும்பவில்லை அதனால் ரோஷனிடம் எனக்கு யாரும் துணை இல்லை தனியா தான் இருக்கிறேன் என்னை பற்றி என்னை பாதுகாத்துக்கொள்ள எனக்கு தெரியும் என்று போனை கட் செய்தேன்.
Like Reply


Messages In This Thread
RE: வீட்டுக்காரர் - by johnypowas - 15-03-2019, 10:30 AM



Users browsing this thread: 1 Guest(s)