Thread Rating:
  • 3 Vote(s) - 3.67 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
தற்போதைய செய்திகள்
விடை தெரியாத 5 கேள்விகள்;பதில் அளிக்காத கோலி: உலகக் கோப்பை, ஆஸி. தொடர் ஒரு பார்வை

[Image: virat-kohli-reutersjpg]கேப்டன் விராட் கோலி : படம் ராய்டர்ஸ்

ஏப்ரல் 20-ம் தேதிதான் கடைசி நாள். ஆம், மே 30ம் தேதி தொடங்கும் உலகக் கோப்பையில் விளையாடும்,  இறுதி 15 பேர் கொண்ட அணியை இந்திய அணி நிர்வாகம் ஐசிசிக்கு அதற்குள் தெரிவிக்க வேண்டும்.
ஆனால், ஆஸ்திரேலியுக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் அடைந்த படுமோசமான தோல்விக்குப் பின், இந்திய அணியில்  யாரைத் தேர்வு செய்யப் போகிறார்கள், யாரை நீக்கப் போகிறார்கள் உள்ளிட்ட  5 முக்கிய கேள்விகள் எழுகிறது.

ஆனால், இந்த கேள்விகள் எதற்கும் பதில் அளிக்காமல் கேப்டன் கோலி, 'பிளான் ஏ' தயாராக இருக்கிறது என்று அதீத நம்பிக்கையுடன் தெரிவித்துள்ளார்.
ஏறக்குறைய ஒன்றரை ஆண்டுகளாக கேப்டன் கோலியும், பயிற்சியாளர் ரவிசாஸ்திரியும் பல்வேறு சோதனைகளை முயற்சிகளை அணியில் செய்தும் இன்னும் எந்த இடத்தில்,  எந்த வீரர் களமிறங்குவார் என்ற தெளிவான திட்டம் இல்லாமல் இருக்கிறார்கள்.
ஆஸ்திரேலியத் தொடரில் ஒரு கட்டத்தில் 2-0 என்று முன்னிலையில் இருந்த இந்திய அணி, அதன்பின் தனது மோசமான ஆட்டத்தால், 2-3 என்று ஆஸ்திரேலியாவிடம் தொடரை இழந்திருக்கிறது.
இந்த தொடரின் முடிவில் 5 முக்கிய கேள்விகள் எழுகின்றன.
 1. அணியில் 4-வது இடத்தில் களமிறங்கும் வீரரைக் கண்டுபிடித்துவிட்டார்களா?
2. ஷிகர் தவண் தொடர்ந்து சொதப்பினால், 3-வது தொடக்க வீரர் யாரைத் தேர்வு செய்து வைத்திருக்கிறார்கள்
3. 3 வேகப்பந்துவீச்சாளர்கள் இருக்கும் நிலையில் 4-வது ஸ்பெலிஸ்ட் வேகப்பந்துவீச்சாளராக யாரைத் தேர்வு செய்யப் போகிறார்கள்.
4. 2-வது விக்கெட் கீப்பராக யாரைத் தேர்வு செய்துள்ளார்.
5. ஆல்ரவுண்டர் ரவிந்திர ஜடேஜா மனநிறைவு தரும் அளவுக்கு விளையாடினாரா
இந்த கேள்விகளை விராட் கோலி தலைமையிலான அணி விடை கானாமல், கடந்து சென்று உலகக் கோப்பைப் போட்டியை எதிர்கொள்ள முடியாது. அவ்வாறு எதிர் கொண்டால், நிச்சயம் லீக் ஆட்டங்களோடு இந்திய அணி நடையைக் கட்டி விட வேண்டும்.
[Image: Ambati-Rayudujpg]அம்பதி ராயுடு : படம் உதவி ட்விட்டர்
 
ஏனென்றால், கடந்த உலகக் கோப்பைப் போட்டி போன்று இந்த முறை குரூப் முறையில் அமைக்கப்படாமல் 'ரவுண்ட் ராபின்' முறையில் அமைக்கப்பட்டுள்ளது. அதாவது 9 அணிகளுடன் இந்திய அணி மோத வேண்டும். அதில் குறைந்தபட்சம் 6 ஆட்டங்களில் வென்றால்தான் அடுத்த சுற்றுக்கு இந்திய அணி செல்ல முடியும்.
ஆனால், இந்த 5 கேள்விகளுக்கு விடை கண்டுபிடிக்காமல் இந்திய அணி உலகக் கோப்பைப் போட்டியை எதிர்கொள்வது எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தும்.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இந்த தொடரில் கேப்டன் விராட் கோலி 2 சதங்கள் உள்பட 310 ரன்கள் குவித்தார், துணைக் கேப்டன் ரோஹித் சர்மா 2 அரைசதங்கள் உள்பட 202 ரன்கள் சேர்த்தார். ஆனால், இருவரின் ஆட்டமும் நிலைத்தன்மையுடையதாக் அமையவில்லை.
ஷிகர் தவண், கேதார் ஜாதவ் அல்லது விஜய் சங்கர் ஆகியோருக்கு சீரான வாய்ப்புகள் கிடைத்தபோதிலும், அவர்கள் நிலைத்தன்மையற்ற பேட்டிங்கைத்தான்  வெளிப்படுத்தினார்கள்.
தோனியைப் பொறுத்தவரை, தன்னுடைய விக்கெட் கீப்பிங் பணியில் எந்தவிதமான குறைபாடும் இன்றி 3 போட்டிகளிலும் அருமையாகச் செய்தார், பேட்டிங்கில் அவரின் இயல்பான ஆட்டம் உலகக் கோப்பைப் போட்டிக்குள் திரும்பினால் சிறப்பாக இருக்கும். மற்ற வகையில், தோனி அணியில் இடம் பெறுவது கேப்டன் கோலிக்கு தார்மீக பலத்தை அதிகரிக்கும், இக்கட்டான நேரத்தில் தோனியின் ஆலோசனைகள் அணியைச் சரிவிலிருந்து மீட்கும்.
தோனியின் அந்த அனுபவ அறிவு இன்மை காரணமாகவே, கடைசி இரு போட்டிகளில் இந்திய அணி தோல்வி அடைந்தமைக்கான காரணங்களில் ஒன்றாகப் பார்க்கப்படுகிறது.
தோனி இல்லாத நிலையில், அவருக்கு பதிலாக வாய்ப்பு அளிக்கப்பட்ட ரிஷப் பந்த் மனநிறைவு அளிக்கும் வகையில், பேட்டிங்கையும், விக்கெட் கீப்பிங்கையும் செய்யவில்லை என்பதே நிதர்சனம். இவரை வைத்துக்கொண்டு மிக முக்கியத்துவம் வாய்ந்த உலகக் கோப்பைப் போட்டியை இந்திய அணி எதிர்கொள்வது ஆபத்தான பரிட்சய முயற்சியாகும்.
பந்துவீச்சில் குல்தீப் யாதவ் இந்த தொடரில் 10 விக்கெட் வீழ்த்தியபோதிலும் ஒவ்வொரு போட்டியிலும் அவர் வாரிக்கொடுத்த ரன்கள் மிக அதிகமாகும். இங்கிலாந்தில் உள்ள ஆடுகளம் சுழற்பந்து வீச்சுக்கு அதிகமாக ஒத்துழைக்காது என்றபோதிலும், மணிக்கட்டில் பந்துவீசும் குல்தீப் ரன்கள்அதிகம் கொடுக்காமல் கட்டுக்கோப்புடன் வீசுவது அவசியமாகும். பும்ரா இந்த தொடரில் 7 விக்கெட்டுகள் வீழ்த்தி, தனக்குரிய பணியை கச்சிதமாக செய்துள்ளார்.
Like Reply
Do not mention / post any under age /rape content. If found Please use REPORT button.


Messages In This Thread
RE: கரண்ட் affairs தமிழில் - by johnypowas - 15-03-2019, 09:36 AM



Users browsing this thread: 63 Guest(s)