Thread Rating:
  • 3 Vote(s) - 3.67 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
தற்போதைய செய்திகள்
`பதில் முழுமையா இருக்கணும்; இல்லையென்றால்... - தேர்தல் ஆணையத்தை எச்சரித்த நீதிபதிகள்

'மதுரையில், தேர்தல் தேதியை மாற்றியமைப்பது தொடர்பாகத் தேர்தல் ஆணையம் முழுமையாகப் பதில் அளிக்கத் தவறும்பட்சத்தில், தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி நேரில் ஆஜராக உத்தரவிடப்படும்' என உயர் நீதிமன்ற மதுரைக் கிளை எச்சரித்துள்ளது.
[Image: mdu_high_arun_17139_16557.jpg]

மதுரையில், உலகப் புகழ்பெற்ற சித்திரைத் திருவிழாவில் ஆண்டுதோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்துகொள்வார்கள். இதில், தென் மாவட்ட பக்தர்கள் அதிக அளவில் கலந்துகொள்வார்கள். இதனால், சித்திரைத் திருவிழாவில் மக்கள் கூட்டம் வெள்ளம்போல திரண்டிருக்கும். இந்நிலையில், இந்த ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் ஏப்ரல் 18-ம் தேதி வருவதால், மக்கள் தேர்தலுக்கு வாக்களிக்கச் செல்வதா, திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சிகளுக்குச் செல்வதா என்று தெரியாமல், கடும் எதிர்ப்புகளைத் தெரிவித்துவருகின்றனர். தேர்தல் தேதியை மாற்றியமைக்க வேண்டும் என சமூக ஆர்வலர்களும், அரசியல் கட்சியினரும் பொதுமக்களும் கோரிக்கை விடுத்துவருகின்றனர். ``திருவிழா சமயத்தில் தேர்தல் நடைபெற உள்ளதால், வாக்கு எண்ணிக்கை சதவிகிதம் கண்டிப்பாகக் குறையும். மேலும், முறைகேடுகள் நடைபெறவும் வாய்ப்பு உள்ளது'' என்று அவர்கள் கூறினர்.

இந்நிலையில், திருவிழா தேதியை மாற்றியமைக்கவில்லை என்றால், வாக்குப்பதிவு நடக்கும் பூத்துகளுக்கு இடையூறாக அமைய வாய்ப்பு உள்ளதாகவும், பாதுகாப்பு வசதிகளில் சிக்கல் ஏற்பட வாய்ப்புகள் உள்ளதாகவும், தேர்தல் தேதியை மாற்றியமைக்க வேண்டும் எனவும் மதுரையைச் சேர்ந்த பார்த்தசாரதி என்பவர் உயர் நீதிமன்றக் கிளையில் மனு அளித்தார். இந்த மனு, நீதிபதிகள் கிருபாகரன், எஸ்.எஸ்.சுந்தர் அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது தேர்தல் ஆணைய வழக்கறிஞர், ``தேர்தல் ஆணையம் குறிப்பிட்ட தேதியில் தேர்தல் நடத்தலாம். மதுரை மீனாட்சியம்மன் கோயிலைச் சுற்றி கூடுதல் பாதுகாப்பு வசதிகள் அளிக்கப்படும். தமிழகத்தில் தேர்தலை நிறுத்தினால், பிறமாநிலங்களிலும் சில மாற்றங்கள் ஏற்படும்'' என்று தெரிவித்தார்.

இதையடுத்து நீதிபதிகள், தேர்தலை நடத்தினாலும் வாக்குப்பதிவு அதிகபட்சமாக இருக்குமா என்று கருத்தில்கொள்ள வேண்டும். இது குறித்து முழுமையாகப் பதில் அளிக்க வேண்டும். தவறும்பட்சத்தில், தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி நேரில் ஆஜராக உத்தரவிடப்படும் எனக்கூறி, வழக்கை நாளைக்கு ஒத்திவைத்தன
Like Reply


Messages In This Thread
RE: கரண்ட் affairs தமிழில் - by johnypowas - 15-03-2019, 09:27 AM



Users browsing this thread: 22 Guest(s)