Thread Rating:
  • 3 Vote(s) - 3.67 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
தற்போதைய செய்திகள்
உலகளவில் சாதித்து ரூ.7 கோடி பரிசு வென்ற சென்னை சிறுவன்

[Image: NTLRG_190314172625000000.jpg]

அமெரிக்காவில் நடந்த பிரபல ரியாலிட்டி ஷோ நிகழ்ச்சியில், தமிழகத்தை சேர்ந்த, 13 வயது சிறுவன் லிடியன் நாதஸ்வரம் பங்கேற்றார். புகழ்பெற்ற பல இசை மேதைகள் நடுவர்களாக பங்கேற்ற இந்த நிகழ்ச்சியில், வேகமாக பியானோ வாசித்து அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தினார். ஏற்கனவே இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. 

பலகட்ட போட்டிக்கு பின்னர் இறுதிப்போட்டிக்கு லிடியனும் தேர்வானார். இறுதிப்போட்டியில், லிடியன் இரண்டு கைகளால் பியானோ வாசித்து அசத்தி, வெற்றி பெற்றார். அவருக்கு, தி வேர்ல்ட்ஸ் பெஸ்ட் பட்டமும், 1 மில்லியன் டாலர் (இந்திய மதிப்பில் ரூ7. கோடி) பரிசு தொகையையும் வழங்கப்பட்டது.

இதுப்பற்றி லிடியன் கூறுகையில், மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. தமிழ்நாடு மீது உலகப்பார்வை விழ தொடங்கி இருக்கிறது, சாதனைகள் தொடரும் என்றார்.

கவுரவித்த ரஹ்மான்

இதனிடையே லிடியனை, இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் சென்னை வரவழைத்து கவுரவித்தார். லிடியன், ரஹ்மானின் கேஎம்., இசைப்பள்ளியில் பயின்றவர். அதோடு இந்தப்பள்ளியின் தூதராகவும் லியடினை நியமித்திருக்கிறார் ரஹ்மான்.

லிடியனின் வெற்றி, இந்தியாவின் வெற்றி என ரஹ்மான் புகழாரம் சூட்டியிருக்கிறார்
Like Reply


Messages In This Thread
RE: கரண்ட் affairs தமிழில் - by johnypowas - 15-03-2019, 09:26 AM



Users browsing this thread: 77 Guest(s)