Fantasy காலம் என் கையில்
கால சூழல் 8
இடம் சென்னை, வேளச்சேரி (ராஜசேகர் இல்லம்)
நாள்: அக்டோபர் 4 2018  வியாழக்கிழமை
நேரம்: இரவு 01 : 20 மணி

காலத்தில் பயணித்த கார்த்திக்கு பயங்கர அதிர்ச்சி இவனை பாக்காம நம்ம நேரம் போய்டலாம் பார்த்தா நம்மள பார்த்துத்தானே, ஆனா குழம்பாம நம்ம கிட்ட சிரிச்ச படி "வெல்லம் டு பியூட்டர்" னு சொல்றனே, இவனுக்கு எப்படி நம்ம கடந்த காலம் ல இருந்து வந்தோம்னு தெரியும்

(இனி கார்த்திக் 1 & கார்த்திக் 2 என்று பெயர் இருக்கும், கார்த்திக் 1 காலத்தை பயணித்த கார்த்திக், கார்த்திக் 2 இங்க உள்ள கார்த்திக்)

கார்த்திக் 2 : என்ன டா திரு திருனு முழிக்கிற, இங்க என்ன நடக்குதுன்னு புரியலையா

கார்த்திக் 1 : (கார்த்திக் 1 அவனை பார்த்து முழித்தபடி) ஆமா நான் எப்படி பாஸ்ட்ல இருந்து வரேன்னு உனக்கு தெரியும்

கார்த்திக் 2 : (கள கள வென சிரித்த படி) டேய் பைத்தியமா நீ, நீ தான் நான், நான் தான் நீ, அந்த வாட்ச் என்கிட்டயும் இருக்கு அத மொதல்ல நியாபகம் வச்சுக்கோ

கார்த்திக் 1 : ஒஹ்ஹஹ் அப்ப உனக்கும் டைம் ட்ராவல் எல்லாம் தெரியுமா, நீயும் ஏதாச்சும் டைம் ட்ராவல் பண்ணி இருக்கியா (அப்பாவியாக கேட்டான்)

கார்த்திக் 2 : (அதற்கும் விழுந்து விழுந்து சிரித்தான் கார்த்திக் 2 ) டேய் லூசா நீ, நான் பிரஸ்ட் பிரஸ்ட் லோங் டைம் ட்ராவல் பண்ணாதே இந்த இன்சிடென்ட் தான், அதாவது நீ இப்ப லூசு மாறி பேசுற பாத்தியா அதே வசனம் நானும் பேசி இருக்கேன், என் எதிர்க்க நானே நின்னு இருக்கேன்

கார்த்திக் 1 : என்ன டா சொல்ற, இதே நேரத்துலயா, எனக்கு புரியல டா, அப்ப இது ஏற்கனவே நீ வந்து பார்த்து இருக்கியா

கார்த்திக் 2 : அப்பா, இப்பயாச்சும் கரெக்டா பேசுறியே, ஆமா டா கார்த்திக், நான் இந்த டைம்ல ஏற்கனவே இருந்து இருக்கேன்

கார்த்திக் 1 : எனக்கு புரியல டா, நானே இப்ப தானே இந்த நேரம் வரேன் அப்ப நீ எப்படி

கார்த்திக் 2 : டேய், நீ தான் நான், நான் தான் நீ, இப்ப நீ சரியா 7 மாசம் டைம் ட்ராவல் பண்ணி வந்து இருக்க, நான் உன்ன விட 7 வயசு மூத்தவன், அப்ப நான் இப்ப நடக்கிறதே மின்னாடி பார்த்து இருக்க முடியாதா, கொஞ்சம் லாஜிக் ஆஹ் யோசிச்சு பாரு டா கார்த்திக் புரியும்

கார்த்திக் 1 சிந்திக்க தொடங்கினான், ஹ்ம்ம் இவன் சொல்றது எல்லாம் யோசிச்ச புரியவும் செய்து, ஆனா குழப்பமாவும் இருக்கே, அப்ப நான் பார்த்தா எல்லாத்தயும் இவனும் பார்த்து இருப்பானா, எப்படி ஒரே நேரத்துல இரண்டு டைம் ல உள்ள ஒரே ஆள் பேச முடியும், இது எல்லாம் நான் கற்பனை கதைல தானே படிச்சு இருக்கேன் இது எல்லாம் நெஜத்துல நடக்கும் நெனச்சு கூட பாக்கலையே, ஆனா இதும் நல்லா தான் இருக்கு எவளோ பேருக்கு இந்த பாக்கியம் கிடைக்கும் நம்மளே நம்மளே பார்த்து எதிர்க்க நின்னு பேசுறது எல்லாம் எவ்ளோ பெரிய விஷயம், "டபுள் அச்டின்" மாதிரி இருக்கு என்ன படத்துல ரெண்டு பேருக்குமே வேற வேற பேரு இருக்கும், இங்க எங்க ரெண்டு பேருக்குமே ஒரே பேரு

கார்த்திக் 2 : என்ன டா ரொம்ப யோசிக்கிற, ஏதாச்சும் கேட்கணுமா (மெல்ல கைகளை பிடித்தான்)

கார்த்திக் 1 : ஆமா டா, ரொம்ப குழப்பமா இருக்கு டா

கார்த்திக் 2 : என்ன டா குழப்பம் கேளு டா, நான் சொல்றேன்

கார்த்திக் 1 : நீ இதுக்கு மின்னாடி இங்க வந்து இருக்கேனு சொல்ற, அந்த நேரத்துலயும் இது மாறி மாட்டிகிட்டு, இதே மாறி பேசி இருக்கியா

கார்த்திக் 2 : ஆமா டா, இதே மாறி எனக்கும் நடந்துச்சு

கார்த்திக் 1 : எப்படி டா அப்படி நடக்கும், அது தான் எனக்கு புரியல டா

கார்த்திக் 2 : ஹ்ம்ம்ம் உனக்கு புரியுற மாறி சொல்றன் டா, infinite Loop தெரியுமா

கார்த்திக் 1 : கேள்வி பட்டு இருக்கேன் டா

கார்த்திக் 2 : குட், அப்ப சுலபமா உனக்கு விளக்கிடலாம், நம்ம இப்ப அப்படி தான் இருக்கோம், ஒரே விஷயம் மறுபடி மறுபடி நடக்குறதா தான் நம்ம அப்படி சொல்லுவோம், நான் உன்ன மாறி வந்த போது என்ன விட 7 மாசம் மூத்த கார்த்திக் இங்க பூஜா அக்கா கல்யாணத்துல இருந்தாரு அவர் கிட்ட நான் பேசுனா அதே விஷயத்தை தான் இப்ப நம்ம பேசுறோம், என்ன அப்ப நான் கேக்குற இடத்துல அதாவது உன்னோட இடத்துல இருந்தேன், இப்ப நான் சொல்லுற இடத்துல உன்ன விட பெரிய ஆளா இருக்கேன், இதே விஷயம் மறுபடி உனக்கு நடக்கும் அப்ப நீ என்னோட இடத்துல இருப்ப, உன்னோட இடத்துல உனக்கு ஜூனியர் வருவான், ஆனா இந்த மீட்டிங் கண்டிப்பா நடக்கும், இதுக்கு பேரு தான் infinite loop டா, இப்ப புரியுதா
இப்படிக்கு 
Loveyourself1990

என்னுடைய (கதைகள்) திரிகள்:

காதலுக்கு வயதில்லை 
https://xossipy.com/showthread.php?tid=31384

காலம் என் கையில் 
https://xossipy.com/showthread.php?tid=31598

அன்பிற்கு உண்டோ அடைக்கும் தாழ்
https://xossipy.com/thread-32596.html
[+] 2 users Like Loveyourself1990's post
Like Reply


Messages In This Thread
RE: காலம் என் கையில் - by Loveyourself1990 - 29-10-2020, 03:00 PM



Users browsing this thread: 25 Guest(s)