Fantasy காலம் என் கையில்
பவித்ரா: (கார்த்திகை வித்தியாசமாக பார்த்தாள்) என்ன டா குடிச்சு இருக்கியா என்ன


கார்த்திக்: ஏன் அண்ணி இப்படி கேக்குறீங்க

பவித்ரா: பின்ன, 4  மணி நேரம் மின்னாடி தானே நீ வித்தியாவை கூட்டிட்டு வந்தே ஹாஸ்டல் போய்ட்டு, அதுக்குள்ள மறந்து என்ன கேக்குற

கார்த்திக்: (ஐயோ அவன் கூட்டிட்டு வந்துட்டான்னா, சொதப்பிட்டோமோ) சாரி அண்ணி, கல்யாண வேலைல ரொம்ப டென்ஷன் அதன் (அசடு வழிந்தபடி)

பவித்ரா: ஹ்ம்ம் சரி சரி, ரொம்ப ஸ்ட்ரைன் பண்ணாத டா, கொஞ்சம் ரெஸ்ட் எடுத்து வேலை பாரு

கார்த்திக்: சரிங்க அண்ணி, நீங்களும் ரெஸ்ட் எடுங்க இந்த நேரம் எதுக்கு முழிச்சு இருக்கீங்க

பவித்ரா: ஹ்ம்ம் உன்னோட அண்ணா கூட போன்ல பேசிட்டு இருந்தேன் டா அதான் டா

கார்த்திக்: சரிங்க அண்ணி, அண்ணா எப்ப வராங்க, ஏதாச்சும் சொன்னாங்களா

பவித்ரா: நாளைக்கி சென்னை இருப்பாங்க டா, பிலைட் ஏறிட்டாங்க டா

கார்த்திக்: சூப்பர் அண்ணி, அப்ப நீங்க ரெஸ்ட் எடுங்க நான் அண்ணா வந்தா உங்கள வந்து பாக்க சொல்றேன் சரியா

பவித்ரா: சரி டா, குட் நைட் டா

கார்த்திக்: குட் நைட் அண்ணி (மெல்ல அண்ணியின் கன்னத்தில் முத்தமிட்டு சிரித்தபடி)

பவித்ரா அண்ணி போவதை ஆசையாக பார்த்த படி கார்த்திக் நிக்க, அப்பொழுது வாசலில் கார்த்திக்கின் குரல் கேக்க "ஐயோ இவன் வந்துட்டான்னா, யார் கிட்ட பேசுறான் தெரியலே ஒளிச்சு இருந்து பார்த்தது நம்ம நேரத்துக்கு போய்டலாமா, அக்கா கல்யாணம் பாக்க அசையா வேற இருக்கே, இன்னும் அத்தை குடும்பத்தை வேற நம்ம பாக்கலையே என்ன பண்ணலாம், சரி எப்படியும் 6 மாசம் கழிச்சு நம்ம கல்யாணத்த கண் குளிர பாக்க தானே போறோம் சரி, இவன் யார்கிட்ட பேசுறேன்னு பார்த்தது போய்டலாம், ரொம்ப நேரம் இங்க நிக்க கூடாது அது நமக்கு நல்லது இல்ல" என்று மனதில் நினைத்த படி வெளியே எட்டி பார்த்தான் கார்த்திக். 

அங்கே கார்த்திக் பட்டு வெஸ்த்தி, பட்டு சட்டை அணிந்து  அழகாக ஜொலித்தன, அவன் அருகல் நேரிய கூட்டமே இருந்தது, அனைவரும் கதிருக்கு வேண்டியவர்கள் ராஜேஷ், அசோக், பத்மா, கல்யாணி, கீதா அனைவரும் கதிரின் திருமணத்துக்கு வந்துள்ளனர்

காலத்தில் பயணித்த கார்த்திக்கு இவர்கள் யாரும் பரிச்சியம் இல்லாத நபர்கள், "யாரு இவங்க நம்ம பார்த்ததே இல்லையே, ஆனா நான் அங்க அவங்க கூட சிரிச்சு சிரிச்சு பேசிட்டு இருக்கேனே, அவங்க யாரா இருக்கும்"

(ராஜேஷ் - அசோக் யாருனு தெரியணும்னா "காதலுக்கு வயதில்லை" கதையை படிக்கவும்)

கதிர் ராஜேஷ் - அசோக் படித்த காலேஜில் ஜூனியர், இருவருக்கும் நெருங்கிய நண்பன், கதிர் சென்னையில் தான் தன் படிப்பை முடித்தான், ராஜேஷின் வீட்டில் தங்கி ராஜேஷுடன் தான் எப்பொழுதும் கல்லூரிக்கு செல்வான், சொல்லப்போனால் கல்யாணி கதிரை தன் இன்னொரு மகனாக பாவித்து வந்தாள், கீதாவும் கதிரை தன் சொந்த அண்ணனாகவே கருதினாள், அதுனால் அவனின் திருமணத்திற்க்கு ராஜேஷ் தன் குடும்பத்தோடு, அசோக்கை அழைத்துக்கொண்டு வந்து இருக்கிறன்

கார்த்திக்: எல்லாருக்கும் ரொம்ப நன்றி நீங்க என்னோட அக்கா கல்யாணத்துக்கு 2 நாள் மின்னாடி வந்தது ரொம்ப சந்தோசமா இருக்கு

கல்யாணி: இதுல என்ன பா இருக்கு, கதிர் எங்க வீட்டு பையன் அவன் கல்யாணத்துக்கு நாங்க வராம எப்படி பா, நாங்க இதுவே ரொம்ப லைட் ஆஹ் வந்துட்டோம்னு இருக்கோம், என்ன செய்யுறது என்னோட புள்ளைங்க (அசோக் - ராஜேஷ்) வேலை விஷயமா மும்பை போய்ட்டாங்க அதான் இன்னைக்கி வர மாதிரி ஆச்சு, இல்லனா 1 வாரம் மின்னாடி வந்து இருப்போம் பா

கார்த்திக்: ஹ்ம்ம்ம் சரிங்க மா, நீங்க வந்த களைப்புல இருப்பிங்க, மாடில 3 ரூம் உங்களுக்கு ரெடி பண்ணி வச்சு இருக்கேன் ரெஸ்ட் எடுங்க மா, நம்ம மத்தத நாளைக்கி பேசிக்கலாம்

கல்யாணி: சரி பா, 

கல்யாணி தன் பிள்ளைகள் அனைவரயும் அழைத்து செல்ல, கார்த்திக் அவர்களை பார்த்தவண்ணம் திரும்ப தூரமாக கார்த்திக் (டைம் ட்ராவல் செய்தவன்) இருந்து பார்ப்பதை பார்த்துகொன்டே மெல்ல அவனை நோக்கி நடந்தான், அதை கண்டு கார்த்திக் (டைம்) வேகமாக மாடியை நோக்கி சென்று அந்த வாட்சில் நேரத்தை மாற்ற முறச்சி செய்தான், அப்பொழுது அவனின் தோளில் ஒரு கை தழுவி "கார்த்திக்" என்று அழைத்து.. "இப்ப யாரு என்ன கூப்டுறா, அவன் பாக்குற குள்ள போகணுமே, இல்லனா வம்பு ஆகிடுமே" என்று நினைத்து கொன்டே திரும்பி பார்க்க, அவன் எதிரே கார்த்திக் தன் இடுப்பில் ஒரு கை வைத்து சிரித்த படி நின்றான்

கார்த்திக்: வெல்கம் டு பியூட்டர் கார்த்திக் (சிரித்தபடி)

டைம் ட்ராவல் செய்த கார்த்திக், அவனை அவனே கண்டு மிரண்டு போய் நின்றான்

கால சக்கரம் சுழலும்... 
இப்படிக்கு 
Loveyourself1990

என்னுடைய (கதைகள்) திரிகள்:

காதலுக்கு வயதில்லை 
https://xossipy.com/showthread.php?tid=31384

காலம் என் கையில் 
https://xossipy.com/showthread.php?tid=31598

அன்பிற்கு உண்டோ அடைக்கும் தாழ்
https://xossipy.com/thread-32596.html
[+] 2 users Like Loveyourself1990's post
Like Reply


Messages In This Thread
RE: காலம் என் கையில் - by Loveyourself1990 - 27-10-2020, 08:41 PM



Users browsing this thread: 19 Guest(s)