Thread Rating:
  • 3 Vote(s) - 3.67 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
தற்போதைய செய்திகள்
மெரினா கடற்கரை சாலையில் குடிபோதையில் பொதுமக்களிடம் ரகளை செய்த வடமாநில இளைஞர்கள்!

[Image: youth_1.png]

சென்னை உழைப்பாளர் சிலை அருகே வடமாநிலத்தை சேர்ந்த 6 இளைஞர்கள் போதையில், சாலையில் சென்று கொண்டிருந்த பொதுமக்கள், மற்றும் ஆட்டோ ஓட்டுநர்களை சரமாரியாக தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுது. 
மெரினா கடற்கரை பகுதியில்  மதுபோதையில் பொதுமக்களிடம் ரகளையில் ஈடுபட்ட வடமாநில இளைஞர்களை, அப்பகுதி வழியாக சென்ற ஆட்டோ ஓட்டுநர் ஆனந்தன் என்பவர் தட்டிகேட்டுள்ளார். இதனால் ஆத்திரமுற்ற வடமாநில இளைஞர்கள், ஆட்டோ ஓட்டுநரை தாக்கியுள்ளனர். 
இதுகுறித்து, பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், அவர்களிடமிருந்து ஆட்டோ ஓட்டுநரை மீட்டு, அரசு மருத்துவமணைக்கு அனுப்பி வைத்தனர். இதனையடுத்து வடமாநில போதை நபர்களை காவல்துறையினர் லேசான தடியடி நடத்தி குண்டுகட்டாக வாகனத்தில் ஏற்றி சென்றனர். 
இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பான சூழ்நிலை நிலவியது. தொடர்ந்து அவர்களிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். 
Like Reply


Messages In This Thread
RE: கரண்ட் affairs தமிழில் - by johnypowas - 14-03-2019, 05:13 PM



Users browsing this thread: 103 Guest(s)