நீ by முகிலன்
#49
நீ -15

இரவு.. எட்டு மணி..!! டிவி முன்னால் உட்கார்ந்திருந்த நான்… திடுமெனத் தோன்றிய யோசனையுடன் உன்னைக் கேட்டேன்.
”ஆமா உனக்கு கஷ்டமா இல்லையா..தாமரை…?”
நான் கேட்டது புரியாமல் நீ திரும்பி  என் முகத்தைப் பார்த்தாய்.
”என்னங்க..?” 
” இல்ல… வீட்லயே.. உன்னை அடச்சு வெச்சிருக்கேனே..? அது கஷ்டமா இல்லையா..?” 
”ஐயோ..! அதெல்லாம் ஒன்னும் இல்லீங்க..! வீட்டுக்குள்ளயே இருந்தாலும் என்னை சந்தோசமாத்தான வெச்சுருக்கீங்க..? அப்படியெல்லாம் எதுமே நெனைக்காதிங்க..!!” 
” நீ…ரொம்ப நல்லவ.. தாமரை..!! ”
என்க.. நீ வெட்கப் பட்டுச் சிரித்தாய்
”சரி…இப்ப வெளில போலாமா..?” எனக் கேட்டேன். 
”எனக்காக… எங்கயும் வேண்டாங்க…!!” 
” நமக்காக…?” என்று சிரித்தேன். 
” எங்கீங்க..?” 
” நைட் சாப்பிடனும் இல்ல…?” 
” ஆமாங்க…” 
” நட… போய் சாப்பிட்டு… வரலாம்..! அப்படியே சினிமா போலாமா..?”
”ஐயோ… நேத்திக்கு தானுங்களே போனோம்..” 
”அப்ப இன்னிக்கு வேண்டாமா…?”
”வேண்டாங்க…!! சாப்பிட்டு வேனா… இங்கயே வந்துரலாங்க…” 
” ஏன். . உனக்கு சினிமா.. அவ்வளவா புடிக்காதா..?” 
” அதுக்குனு… டெய்லி போவாங்களா யாராவது..?” 
” நீ… என்ன பொண்ணோ..? இப்படி இருந்தேன்னா… அப்பறம் எப்படி பொழைப்பே..?” என்க…. அப்பாவியாகச் சிரித்தாய்.
உன்னை முத்தமிட்டு…
”சரி.. பொறப்படு… போலாம்..” என்றேன்.
நீ.. பாத்ரூம் போய் சோப்புப் போட்டு முகம் கழுவி வந்தாய். மறுபடி தலைவாரி…நீ புறப்பட..நான் அப்போதே முடிவு செய்து விட்டேன். உனக்கு நல்லதாக இரண்டு செட் சுடிதார் எடுத்துத் தரலாமென்று..!!
நானும் புறப்பட்டேன்..! கதவைப் பூட்டி வெளியேறி.. கொஞ்சம் இருளான பகுதியிலேயே நடந்து.. ஒரு ஆட்டோ அமர்த்திக் கொண்டேன்..!!
முதலில் துணிக்கடை..!! கடைக்குள் அழைத்துப் போனபோது… எதுவும் புரியாமல் என்னைப் பார்த்தாய். உன் கை பிடித்து… கூட்டிப்போய்…சுடிதார் செக்ஷனில் விட்டேன். கடையிலிருந்த பெண்ணிடம்.. நானே சொன்னேன். 
” லேட்டஸ்ட் மாடல்ல.. சுடி.. எடுமா..?”
நீ.. என் கை பிடித்து..
”யாருக்குங்க..?” என ரகசியமாகக் கேட்டாய். 
அந்தப் பெண். ” என்ன சைஸ்லண்ணா…?” என்று.. என்னைப் பார்க்க..!
குத்துமதிப்பாக… உன் சைஸை கணித்து..
”இவங்க சைஸ்…” என்றேன். 
அந்தப் பெண்… உன்னை நன்றாகப் பார்த்துவிட்டு… ‘ரேக் ‘ கில் தேடி எடுத்துப் போடத்தொடங்கினாள்.
நீ.. மறுபடி ரகசியமாக..
”எனக்குங்களா..?” என நம்பிக்கை இல்லாமல் கேட்டாய். 
”ம்ம்…!!” 
” ஐயோ…!! எதுக்குங்க…!!” எனச் சிணுங்கினாய். 
”நீ பேசாம.. எது புடிக்குதுனு பாரு…!!” என்றேன்.
எனக்குப் பிடித்தமான.. நிறத்தில்… வடிவமைப்பில்… நானே பார்த்துத் தேர்ந்தெடுத்தேன்..! அது உனக்கும் பிடித்தது..!! அப்பறம்… அரை டஜன் பிரா..!! ஒரு நைட்டி… என.. வாங்கிக்கொண்டு… துணிக்கடையை விட்டு வெளியேறி… அசைவ உணவகத்துக்குப் போனோம்..!!
Like Reply


Messages In This Thread
நீ by முகிலன் - by johnypowas - 05-02-2019, 07:27 PM
RE: நீ முகிலன் - by johnypowas - 05-02-2019, 07:28 PM
RE: நீ முகிலன் - by Renjith - 06-02-2019, 02:52 PM
RE: நீ முகிலன் - by johnypowas - 11-02-2019, 06:18 PM
RE: நீ முகிலன் - by johnypowas - 11-02-2019, 06:32 PM
RE: நீ முகிலன் - by johnypowas - 11-02-2019, 06:34 PM
RE: நீ முகிலன் - by johnypowas - 11-02-2019, 06:37 PM
RE: நீ முகிலன் - by Renjith - 11-02-2019, 10:28 PM
RE: நீ by முகிலன் - by Renjith - 15-02-2019, 11:02 AM
RE: நீ by முகிலன் - by Renjith - 16-02-2019, 03:34 PM
RE: நீ by முகிலன் - by Renjith - 19-02-2019, 06:25 AM
RE: நீ by முகிலன் - by Renjith - 21-02-2019, 12:18 PM
RE: நீ by முகிலன் - by Renjith - 24-02-2019, 12:42 PM
RE: நீ by முகிலன் - by johnypowas - 14-03-2019, 10:26 AM
RE: நீ by முகிலன் - by Diipak_ - 14-03-2019, 01:35 PM
RE: நீ by முகிலன் - by Renjith - 31-03-2019, 11:43 AM
RE: நீ by முகிலன் - by Renjith - 09-04-2019, 10:30 AM
RE: நீ by முகிலன் - by Renjith - 09-04-2019, 03:19 PM
RE: நீ by முகிலன் - by Renjith - 12-04-2019, 04:59 AM
RE: நீ by முகிலன் - by Renjith - 22-07-2019, 03:37 PM
RE: நீ by முகிலன் - by Renjith - 29-07-2019, 09:35 PM
RE: நீ by முகிலன் - by Renjith - 25-08-2019, 07:01 AM



Users browsing this thread: 2 Guest(s)