screw driver ஸ்டோரீஸ்
அந்த உருவம் இப்போது மெல்ல இந்தப்பக்கமாக திரும்ப.. வாசுகி படக்கென தலையை உள்ளிழுத்துக் கொண்டாள்..!! சுறுசுறுப்பாக யோசித்தாள்.. அவசரமாய் ஒரு முடிவுக்கு வந்தாள்.. 'தஸ்.. புஸ்..'என்று மூச்சிரைப்புடன், கிசுகிசுப்பான குரலில் தோழிகளிடம் சொன்னாள்..!!

"சொ..சொல்றதை கவனமா கேளுங்கடி.. மூணு பேரும் ஒன்னா இருந்து, அவகிட்ட மொத்தமா மாட்டிக்க வேணாம்.. ஆ..ஆளுக்கொரு பக்கமா ஓடலாம்.. ஒருத்தியை பலிகுடுத்து மிச்ச ரெண்டுபேர் தப்பிச்சுக்கலாம்.. எ..என்ன சொல்றிங்க..??"

"ம்ம்.. ச..சரிடி..!!"

பயத்துடனும், பதைபதைப்புடனும் ஒப்புக்கொண்டனர் மற்ற இருவரும்..!! அழுகை வந்தது அவர்களுக்கு.. வாயைப் பொத்திக்கொண்டு சத்தம் வராமல் அழுதனர்..!! பீதி நிரம்பிய அவர்களது கண்கள்.. பொலபொலவென கண்ணீரை உகுத்தன..!!

இப்போது சிவப்பு அங்கி போர்த்திய அந்த உருவம்.. அவர்கள் அண்டியிருக்கிற மரத்தைநோக்கி மெல்ல நகர்ந்தது.. மரத்துக்கு அந்தப்பக்கம் அவர்களுடைய சன்னமான பேச்சுக்குரல் இங்கேயே கேட்டது..!! கொஞ்சம் கொஞ்சமாய் நிதானமாக நகர்ந்து.. மரத்திற்கு மிகஅருகே நெருங்கிவிட்டது அந்த உருவம்.. இரண்டு மூன்று அடி இடைவெளிதான்..!!

அப்போதுதான் அது நடந்தது.. மரத்துக்கு பின்புறம் இருந்து சரக்கென வெளிப்பட்டனர் மூன்று பெண்களும்.. வெளிப்பட்ட வேகத்தில் வெவ்வேறு திசையில் சர்ரென ஓட்டமெடுத்தனர்..!! அங்கிருந்து கிளம்பிய மூன்று சாலைகளில்.. ஆளுக்கொரு சாலையென சிட்டாக பறந்தோடினர்..!!

அந்த உருவம் அதை எதிர்பார்த்திருக்கவில்லை..!! சற்றே திகைத்துப்போய்.. வெடுக்வெடுக்கென மூன்று திசைகளையும் மாறிமாறி திரும்பிப் பார்த்தது..!! அப்போதுதான்..

"ஆஆஆஆஆஆ..!!!" என்று தென்றலின் அலறல்.

தறிகெட்டு ஓடிய தென்றல் தரையில் விழுந்து கிடந்தாள்.. மேற்கிளம்பிய ஒரு மரத்தின் வேர், அவளது பாதத்தை இடறி விட்டிருந்தது.. தடுமாறிப்போய் கால்கள் ரெண்டும் பின்னிக்கொள்ள கீழே விழுந்து உருண்டிருந்தாள்..!!

"ஆஆஆஆஆஆ..!!!" கொட்டுகிற மழையில் காலை பிடித்துக்கொண்டு கத்தினாள்.

மூன்று திசைகளையும் மாறி மாறி பார்த்துக் கொண்டிருந்த அந்த உருவம், இப்போது சற்றே நிதானித்தது.. தென்றல் விழுந்து கிடந்த திசையை மட்டும் கூர்மையாக வெறித்தது.. அந்த திசையில் மெல்ல நகர்ந்தது..!!

அதன்பிறகு சில நிமிடங்கள் கழித்து..!! வேறு திசையில் ஓடிய மற்ற இரு பெண்களும்.. அகழி செல்கிற சாலையில் ஆளுக்கொரு இடத்தில் இணைந்தனர்..!! பிறகு அதே சாலையில் தனித்தனியே ஓடியவர்கள்.. ஓரிடத்தில் ஒன்றாக சந்தித்துக் கொண்டனர்..!! பார்த்ததுமே ஓடிவந்து அணைத்துக் கொண்டனர்.. ஒருவரை ஒருவர் கட்டிக்கொண்டு அழுதனர்..!! தாங்கள் சேதாரமில்லாமல் தப்பித்துவிட்டாலும்.. தங்களது தோழி மாட்டிக்கொண்டாளே என்கிற பதைபதைப்பில் இருவருக்கும் நெஞ்சடைத்தது..!!

"அரிசிமூட்டை பாவம்டி.. குறிஞ்சிகிட்ட மாட்டிக்கிட்டா..!!!" அழுது அரற்றினாள் மேகலா..!!

'பாவம்னு இவளை சொல்லல.. குறிஞ்சியை சொன்னேன்..!!' என்று அவள் சற்றுமுன் கேலியாக சொன்னது இப்போது நினைவுக்கு வர.. அவளது அழுகை இன்னுமே அதிகமாக பீறிட்டது..!!

"அழாதடி.. வா.. மொதல்ல ஊருக்குள்ள போய் சொல்லலாம்..!!" சற்றே துணிச்சலாக சொன்ன வாசுகி, அடுத்தவினாடியே உள்ளுக்குள் உடைந்துபோய் உதடுகள் தழதழத்தாள்..!!

'அவளை அப்டியே புடிச்சு மலைலயிருந்து தள்ளி விடுடி..!! ஊருக்குள்ள கேட்டா குறிஞ்சி தூக்கிட்டு போயிட்டான்னு சொல்லிரலாம்..!!'

சிறிது நேரத்திற்கு முன்பு அவள் பேசிய வார்த்தைகள், இப்போது மீண்டும் அவளது காதுக்குள் ஒலிக்க.. 'ஓ'வென்று அவளுக்கும் அழுகை பீறிட்டு கிளம்பியது..!! அப்படியே கால்கள் மடங்கிப்போய்.. தரையில் வீழ்ந்து.. முதுகுப்புறம் விம்ம விம்ம.. குலுங்கி குலுங்கி அழுதாள்..!! மேகலாவும் இப்போது தரையில் அமர்ந்து, தோழியை அணைத்துக் கொண்டாள்.. ஆதரவாக அவளது முதுகை தடவிக்கொடுத்தாள்..!!

இருட்டுக்குள் அவ்வாறு அமர்ந்திருந்த அவர்களது முகத்தில்.. திடீரென ஒரு வெளிச்ச வெள்ளம் பாய்ந்து, கண்களை கூசச்செய்தது.. ஒருவித பதற்றத்துடனே இருவரும் எழுந்துகொண்டனர்..!! அந்த சாலையில், சிறிது தூரத்தில் ஒரு கார் வந்துகொண்டிருந்தது.. அந்த காருடைய முகப்புவிளக்கின் வெளிச்சம்தான் அது..!! காருக்குள் இருந்தவர்களை இவர்களால் உடனடியாக அடையாளம் கண்டுகொள்ள முடிந்தது.. ஆதிராவும், சிபியும்..!! அத்தனை நேரம் கோயிலில் கழித்துவிட்டு.. அப்போதுதான் வீடு திரும்பிக் கொண்டிருந்தார்கள்..!!

"அக்காஆஆஆ..!!" என்று கத்திக்கொண்டு, காரைநோக்கி ஓடினார்கள் வாசுகியும் மேகலாவும்.

"அ..அத்தான்.. வண்டியை கொஞ்சம் நிறுத்துங்க..!!"

ஆதிரா பதற்றமாக சொல்லவும், சிபி சரக்கென ப்ரேக் போட்டு காரை நிறுத்தினான்..!! ஏதோ விபரீதம் என்று புரிந்துகொண்ட இருவரும்.. காரில் இருந்து அவசரமாக இறங்கினார்கள்..!! தங்களை நோக்கி மிரட்சியாக ஓடிவந்த பெண்களிடம்..

"எ..என்னம்மா.. என்னாச்சு..??" ஆதிரா பதட்டத்துடன் கேட்டாள்.

அழுகையும், மூச்சிரைப்புமாக நடந்ததை விளக்கினார்கள் வாசுகியும், மேகலாவும்..!! அவர்கள் சொன்னதை கேட்க கேட்க.. அப்படியே அதிர்ச்சியில் உறைந்துபோனார்கள் ஆதிராவும், சிபியும்..!! நடந்ததை நம்புவதற்கு சற்று கடினமாகத்தான் இருந்தது.. அதையும்மீறி அந்தப்பெண்களின் முகத்தில் கொப்பளித்த அதீத பயமும், மிரட்சியும்.. அவர்களது வார்த்தையில் ஒரு நம்பிக்கையை ஏற்படுத்தியது..!!

ஆதிரா விக்கித்துப்போய் நின்றிருந்தாள்.. 'காலையில்தானே அந்த அப்பாவிப்பெண்ணை வாயார வாழ்த்தினோம்' என்கிற நினைவு வர.. துக்கம் தொண்டையை அடைத்து, வாயை ஒருகையால் பொத்திக் கொண்டாள்..!!

"இ..இப்போ.. எ..என்னத்தான் பண்றது..??" கணவனிடம் கவலையாக கேட்டாள். சிபி சற்று தெளிவாகத்தான் இருந்தான்.
[+] 1 user Likes johnypowas's post
Like Reply


Messages In This Thread
RE: screw driver ஸ்டோரீஸ் - by johnypowas - 14-03-2019, 10:21 AM



Users browsing this thread: 9 Guest(s)