screw driver ஸ்டோரீஸ்
"எ..எங்க..??"

"அ..அதோ.. அங்.."

சொல்லவந்ததை முடிக்காமலே நிறுத்தினாள் தென்றல்.. அவள் கைநீட்டிய திசையில் இப்போது அந்த உருவத்தை காணவில்லை.. காட்டுமரங்கள்தான் காற்றுக்கு மெலிதாக தலையசைத்துக் கொண்டிருந்தன..!! பயந்துபோய் திரும்பிப்பார்த்த தோழிகள் இருவரும் குழம்பிப்போனார்கள்..!!

"எ..எங்கடி.. யாரையும் காணோம்..??"

"அ..அங்க.. அங்கதான்டி நின்னுட்டு இருந்தா.. அதோ.. அந்த மரத்துக்கு பக்கத்துல..!!"

"வெ..வெளையாடாத தென்றல்..!!"

"அடச்சீ.. வெளையாடலடி.. நெஜமாத்தான் சொல்றேன்.. நான் பார்த்தேன்.. என் ரெண்டு கண்ணாலயும் பார்த்தேன்..!! உடம்பு பூரா செவப்பு அங்கிய போத்திக்கிட்டு.. ஒத்தையா அங்க நின்னுட்டு இருந்தா.. நம்மளயே உத்த்த்து பாத்துக்கிட்டு இருந்தா.. அப்டியே கொலை நடுங்கிப்போச்சு எனக்கு..!!" படபடவென சொன்னாள் தென்றல்.

அவள் சொல்லிக்கொண்டிருக்கும்போதே.. 'டமார்ர்ர்' என்று விண்ணில் ஒரு இடிமுழக்கம்.. ஊசிச்சிதறல்களாய் சிலுசிலுவென மழைத்தூறல்..!! மூன்று பெண்களின் முகத்திலுமே இப்போது ஒரு கிலி பரவுவதை காணமுடிந்தது.. மூன்று பேருடைய நெஞ்சுமே பக்பக்கென அடித்துக்கொள்ள ஆரம்பித்திருந்தது.. தென்றலிடம் மட்டும் சற்று அதிகப்படியாகவே அந்த படபடப்பு..!!

சிகரட்டை பிடித்திருந்த விரல்கள் நடுநடுங்க, மேகலா இப்போது சொன்னாள்..!! 

"கெ..கெளம்பிறலாம்டி..!!"

வாசுகியும், மேகலாவும் கையிலிருந்த சிகரெட்டை படக்கென விசிறியெறிந்தனர்.. மூவரும் மலைச்சரிவில் விருட்டென ஏறி, நடக்கிற பாதையை அடைந்தனர்.. அகழி இருக்கிற திசையை நோக்கி அவசர அவசரமாக நடந்தனர்..!! சில்லென்று சிதறிய மழைத்தூறலை மீறி, நெற்றியில் வியர்வை அரும்பியது அவர்களுக்கு.. உடலுக்குள் ஜிவ்வென்று ஒரு பய சிலிர்ப்பு..!! அப்படியும் இப்படியுமாய் தலையை திருப்பி.. எல்லா திசைகளையும் ஒரு பயப்பார்வை பார்த்துக்கொண்டே விரைந்தனர்..!!

"ப..பயமா இருக்குடி வாசுகி..!!" உடைந்துபோன குரலில் சொன்னாள் மேகலா.

"அடச்சீ.. ஒன்னும் இல்லடி..!!" அவளுக்கு தைரியமூட்டினாள் வாசுகி.

திடீரென்று.. அவர்களுக்கு வெகுஅருகில்.. 'ஸரஸரஸர'வென காய்ந்த சருகுகள் மிதிபடுகிற சப்தம் கேட்டது..!! அந்த சப்தத்தை கேட்டதும்.. அப்படியே 'ஹக்க்க்க்' என்று நெஞ்சடைத்துப்போய், மூன்று பெண்களும் அசையாமல் உறைந்து நின்றனர்..!! பயத்தில் விரிந்த விழிகளும், மிரட்சி அப்பிய முகமும், ஏறியிறங்குகிற மார்புப்பந்துகளுமாக.. சப்தம் வந்த திசையை மெல்ல திரும்பிப் பார்த்தனர்..!!

"ஸர்ர்ர்ர்ர்ர்ரக்க்க்க்க்க்...!!!" - யாரோ ஒரு மரத்தின் மறைவில் இருந்து இன்னொரு மரத்தின் மறைவுக்கு ஓடினார்கள்.

"ஆஆஆஆஆ..!!" வாயில் கைவைத்து அலறினாள் தென்றல்.

"யா..யாரு.. யாரது..???" சற்று துணிச்சலாக கத்தினாள் வாசுகி.

அதேநொடியில்.. வானத்தில் 'திடும் திடும்' என அடுத்தடுத்து இடியோசை.. 'பளிச் பளிச்' என மின்னல் வெளிச்சம்..!! மேகங்கள் ஒன்றோடொன்று உரசிக்கொள்ள, 'ச்ச்சோ'வென்று மழைகொட்ட ஆரம்பித்தது.. நின்றிருந்த பெண்களை சடசடவென நனைத்தன மழைத்துளிகள்..!!

"எ..எனக்கு ரொம்ப பயமா இருக்குடி.. போ..போயிறலாம்டி..!! இ..இங்க நிக்கிற ஒவ்வொரு.."

வாய்க்குழறலாக பேசிய மேகலா, சொல்லவந்ததை முழுதாக முடிக்காமல் அப்படியே நிறுத்தினாள்.. அவளது பார்வை இப்போது ஓரிடத்தில் நிலைகுத்திப் போயிருந்தது.. ஓவென்று திறந்திருந்தன அவளது உதடுகள்.. அவளது முகத்திலும், கண்களிலும் அப்பட்டமாய் அப்படி ஒரு பீதி..!!

"எ..என்னடி..??"

வாசுகியின் கேள்விக்கு மேகலாவிடமிருந்து பதில் இல்லை.. வாயும் நெஞ்சும் அடைத்துப்போனது மாதிரி விக்கித்து நின்றிருந்தாள்..!!

இப்போது தென்றலும், வாசுகியும்.. மேகலாவின் பார்வை சென்ற திசைபக்கமாக.. மெல்ல மெல்ல தங்களது முகத்தை திருப்பினர்..!! அங்கே.. அவர்களுக்கு மிக மிக நெருக்கமாக.. ஒழுங்கின்றி வளர்ந்திருந்த ஒருபுதருக்கு பின்புறமாக.. கொட்டுகிற மழையில் சொட்டச்சொட்ட நனைந்தவாறு.. அந்த உருவம்..!! உடல்முழுதையும் போர்த்திய சிவப்பு அங்கி.. முகம்முழுதும் வழிகிற கருங்கூந்தல்..!!

"க்க்க்ர்ர்ர்.. க்க்க்ர்ர்ர்.. க்க்க்ர்ர்ர்..!!" என்று அந்த உருவத்திடம் இருந்து வருகிற சப்தம்.

"ஆஆஆஆஆஆஆஆஆஆஆ..!!!!!!!!!!!!!!!"

அவ்வளவுதான்..!! அலறியடித்துக் கொண்டு ஓடினர் இளம்பெண்கள் மூவரும்..!! மாலைநேரத்து மங்கலான வெளிச்சம்.. மழைபெய்து வழுக்குகிற மலைப்பாதை.. ஆங்காங்கே குறுக்கிடுகிற காட்டுமரங்கள்.. உச்சியிலிருந்து சடசடவென ஊற்றுகின்ற மழைநீர்..!! கண்மண் தெரியாமல்.. கால்கள் சென்ற திசையில்.. உடம்பெல்லாம் வெடவெடக்க.. உயிரை கையில் பிடித்துக்கொண்டு ஓடினார்கள்..!!

அவர்கள் அணிந்திருந்த காலணிகள் எல்லாம் எங்கே நழுவியதென்று தெரியவில்லை.. ஈரமான கோரைப்புற்களில் வெற்றுக் கால்களை பதித்து வேகமாக ஓடினர்..!! சரியான திசையில்தான் ஓடுகிறோமா என்பதைக்கூட அவர்கள் அறியவில்லை.. கண்ணில்பட்ட திசையில், எதிர்ப்பட்ட மரங்களுக்கு இடையில் புகுந்து ஓடிக்கொண்டே இருந்தார்கள்..!! மழையில் நனைந்து உடலோடு ஒட்டிய உடையுடனும்.. மார்புக் கூட்டுக்குள் பதறித் துடிக்கிற இருதயத்துடனும்..!!

"ஆஆஆஆஆ..!!!!"

ஓடியவர்கள் திடீரென அலறியவாறு அப்படியே ப்ரேக் அடித்து நின்றார்கள்..!! அவர்கள் ஓடியதிசையில் எதிர்ப்புறம்.. 'சர்ர்ர்ரரக்க்க்' என்று குறுக்காக வந்துநின்றது அந்த உருவம்..!! பலமாக வீசிய காற்றில் படபடக்கிற சிவப்பு அங்கி.. முகத்தை மறைத்திட்ட முடிக்கற்றைகளில் சொட்டுகிற மழைநீர்..!!

மூன்று பெண்களும் ஒருநொடி கூட தாமதிக்கவில்லை.. பக்கவாட்டில் திரும்பி விர்ரென்று வேகமெடுத்து ஓடினர்.. அந்த உருவம் தங்களை பின்தொடர்கிறதா என்று திரும்பிப் பார்க்கக்கூட மூவருக்கும் அச்சம்..!! உயிர்பயத்தில் அலறியடித்துக்கொண்டு ஓடினர்..!!

இந்தப்பாதை சற்றே சீரற்ற பாதை.. மரங்களின் கிளைகள் பாதையின் குறுக்காக நீண்டிருந்தன.. விரிந்திருந்த முட்புதர்கள் அவர்களது புஜங்களை கீறின.. இறைந்து கிடந்த கற்கள் அவர்களது பாதத்தை பதம் பார்த்தன..!! உடம்பில் உண்டான வேதனையை பொருட்படுத்தாமல்.. உயிரை காப்பாற்றிக் கொள்கிற பதைபதைப்புடன்.. அடர்ந்த காட்டுக்குள் கிலியடித்துப்போய் ஓடிக்கொண்டிருந்தனர்..!! அகன்ற அடிப்புறம் கொண்ட மரம் ஒன்றிற்கு பின்புறமாக.. அண்டிக்கொண்டனர் மூவரும்..!!

நுரையீரல் வெளியே வந்துவிடுவது போல மூச்சிரைத்தது அவர்களுக்கு.. இருதயம் 'திடுக்.. திடுக்..' என்று அடித்துக் கொண்டதில், மார்புகள் 'சர்ர்.. சர்ர்..' என மேலும் கீழும் ஏறியிறங்கின.. அட்ரினலின் அதீதமாக சுரந்து, நாடிநரம்பெல்லாம் தாறுமாறாய் ஓடியது.. குளிராலும் குறிஞ்சி பயத்தாலும், உடம்பின் ஒவ்வொரு செல்லும் வெடவெடத்து நடுங்கியது..!! மூச்சு விடுகிற சப்தம்கூட வெளியே வரக்கூடாதென.. வாயை இரு கைகளாலும் இறுகப் பொத்திக்கொண்டு.. மூன்று பெண்களும் மரத்துக்கு பின்புறமாக பம்மியிருந்தனர்..!!

அரை நிமிடம்.. பிறகு வாசுகி மட்டும் சற்றே தைரியம் பெற்று.. தனது தலையை மெல்ல வெளியே நீட்டி.. தாங்கள் ஓடிவந்த பாதையை பார்த்தாள்.. பார்த்ததுமே பக்கென்று இருந்தது அவளுக்கு..!! அந்த உருவம் அவர்களுக்கு பக்கத்திலேதான் இன்னொரு மரத்துக்கு அருகே நின்று கொண்டிருந்தது.. 'ச்சோ'வென்று கொட்டுகிற மழையில் நனைந்தவாறு.. வேறொரு திசையை வெறித்தவாறு..!! விரிந்த விழிகளுடன் அந்த உருவத்தையே மிரட்சியாக பார்த்தாள் வாசுகி..!!
Like Reply


Messages In This Thread
RE: screw driver ஸ்டோரீஸ் - by johnypowas - 14-03-2019, 10:18 AM



Users browsing this thread: 7 Guest(s)