14-03-2019, 10:17 AM
"எதோ ஒரு கருமம்..!! இதை குடிக்கத்தான் இம்புட்டுதூரம் இந்த காட்டுக்குள்ள வந்தீகளாக்கும்..??"
"ஹ்ம்ம்.. என்ன பண்றது.. நடுவீட்ல வச்சு குடிக்கனும்னு எனக்கும் ஆசைதான்.. எங்கம்மாக்காரி வெளக்கமாத்தாலேயே சாத்துவாளே..!!"
"ஏன்.. இப்போ மட்டும் சாத்தமாட்டாளா..??"
"அவளுக்கு தெரிஞ்சாத்தான சாத்துவா..??"
"நான்தான் இப்பப்போய் போட்டு குடுத்துடுவன்ல..??" தென்றல் கேஷுவலாக சொல்லவும், வாசுகிக்கு சுர்ரென்று கோவம் வந்தது.
"அடிங்.. போட்டு குடுப்பியா..?? ஏய் மேகலா.. அவளை அப்டியே புடிச்சு மலைலயிருந்து தள்ளி விடுடி..!! ஊருக்குள்ள கேட்டா குறிஞ்சி தூக்கிட்டு போயிட்டான்னு சொல்லிரலாம்..!!"
"ஹாஹா.. பாவம்டி..!!"
"போட்டுக் குடுப்பேன்றா.. இவளைப்போய் பாவம்ன்ற..??"
"பாவம்னு இவளை சொல்லல.. குறிஞ்சியை சொன்னேன்..!! இந்த அரிசிமூட்டையை தூக்கி சொமக்குற நெலமை அந்த குறிஞ்சிக்கு வரவேணாம்.. பாவம்.. ஹாஹாஹாஹா..!!" மேகலா சொல்லிவிட்டு சிரிக்க, வாசுகியும் அவளுடன் சேர்ந்துகொண்டாள்.
"ஹாஹாஹாஹாஹாஹா..!!"
தென்றலோ தோழிகள் இருவரையும் கடுப்புடன் முறைத்தாள்.
"ம்க்கும்..!! இவளுகளுக்கு அப்படியே மனசுக்குள்ள இலியானான்னு நெனைப்பு.. நீங்கமட்டும் என்ன கொறைச்சலாவாடி இருக்கீக.. குந்தானிகளா..!!"
"ஹாஹா.. கோச்சுக்காதடி...!! இந்தா..!!" சொல்லிக்கொண்டே வாசுகி ஒரு சிகரெட்டை எடுத்து தென்றலிடம் நீட்ட, அவள் உடனே முகத்தை சுளித்தாள்.
"ஐயே.. எனக்கு வேணாம்..!!"
"வேணாமா..?? அப்புறம் எதுக்குடி எங்ககூட வந்த..??"
"நான் எங்கடி வந்தேன்..?? நீங்கதான் ஒண்ணுமே சொல்லாம இழுத்துட்டு வந்திங்க..!!"
"அ..அது.. எங்களுக்கு ஆசை இருக்குற மாதிரி, உனக்கும் ஆசை இருக்கும்னு நெனச்சோம்..!!"
"ஆசைப்படுறதுக்கு அப்படி என்ன இருக்கு இந்த கருமத்துல..??"
"என்னடி இப்படி சொல்லிட்ட..?? பயலுக எப்பப்பாத்தாலும் இதைத்தான வாய்லவச்சு பக்குபக்குன்னு இழுத்து, குப்புகுப்புன்னு பொகை விட்றாய்ங்க..?? எத்தனை நாள் ஆசை தெரியுமா எனக்கு..?? அப்படி என்னதான் இதுல இருக்குன்னு இன்னைக்கு பாத்துடனும்..!! நீ குடிக்காட்டா போ.. நாங்க குடிக்க போறோம்..!!" ஆசையாக சொன்ன வாசுகி, அந்த சிகரெட்டை வாயில் வைத்துக்கொண்டு, மேகலாவிடம் திரும்பி,
"ஏய்.. பத்தவைடி..!!" என்றாள்.
மேகலா தனது வாயில் ஒரு சிகரெட்டை பொருத்திக் கொண்டாள்.. தீக்குச்சி உரசி வாசுகிக்கு பற்றவைத்துவிட்டு, தனது சிகரெட்டுக்கும் நெருப்பு வைத்துக்கொண்டாள்..!! தென்றல் ஒரு கையால் மூக்கை இறுகப் பொத்திக்கொள்ள.. வாசுகியும், மேகலாவும் சிகரெட் புகைக்க ஆரம்பித்தார்கள்.. ஆரம்பித்ததுமே, ஆர்வக்கோளாறில் அதிக அளவு புகையை சர்ரென உள்ளிழுத்து..
"லொக்.. லொக்.. லொக்..!!" என கண்களில் நீர் வருமளவிற்கு இருமினார்கள்.
"எ..என்னடி இது.. நல்லாவே இல்ல..!!" முகத்தை அஷ்டகோணலாக்கியவாறு சொன்னாள் மேகலா.
"ஆரம்பத்துல அப்படித்தாண்டி இருக்கும்.. குடிக்க குடிக்க நல்லாருக்கும்..!!" ஏமாற்றத்தை வெளிக்காட்டாமல் அவளை என்கரேஜ் செய்தாள் வாசுகி.
"ஏய்.. சீக்கிரம் குடிச்சு முடிங்கடி.. இருட்ட ஆரம்பிச்சிடுச்சு.. மழை வேற வர்ற மாதிரி இருக்குது..!!"
இயல்பாக சொல்லிக்கொண்டே வானத்தை பார்த்த தென்றல்.. எதேச்சையாக பார்வையை வேறுபக்கம் சுழற்றியபோதுதான்.. அந்த உருவம் அவளது கண்களில் பட்டது..!! அங்கிருந்து சற்றே தூரமாக.. அடர்ந்த காட்டு மரங்களுக்கு இடையே.. அசைவேதுமில்லாமல் தனியே நின்றிருந்த.. அந்த சிவப்பு அங்கி போர்த்திய உருவம்..!! இவர்கள் மூவரையுமே வெறித்துப் பார்ப்பது போன்றொரு தோற்றம்..!!
அந்த உருவத்தை பார்த்ததும் தென்றலுக்கு அப்படியே முதுகுத்தண்டு சில்லிட்டுப்போனது.. பயரத்தம் பாய்ந்ததில் அவளது இருதயம் தறிகெட்டு துடிக்க..
"ஆஆஆஆஆஆஆஆ..!!!" என்று பெரிதாக அலறினாள். அலறியவேகத்தில் தடுமாறி விழப்போனவளை வாசுகி தாங்கிப்பிடித்துக் கொண்டாள்.
"ஏய்ய்ய்.. என்னடி ஆச்சு..??"
"கு..குறிஞ்சி.. குறிஞ்சிடி..!!" தென்றல் திணறலாக சொன்னாள். அவளது முகத்தில் கொப்பளித்த அந்த அதீத மிரட்சி, மற்ற இரு பெண்களுக்குமே உடனடியாய் ஒரு பதற்றத்தை கிளப்பியிருந்தது.