screw driver ஸ்டோரீஸ்
அத்தியாயம் 19

அன்று மாலை ஐந்தரை மணி.. சிங்கமலையை ஒட்டிய ஆளரவமற்ற வனப்பகுதி..!! வானில் திரண்டிருந்த மேகக்கூட்டங்களும், நெருக்கமாய் வளர்ந்திருந்த காட்டுமரங்களும்.. சூரியனின் வெளிச்சத்தையும், வெப்பத்தையும் சுத்தமாக வற்றிப்போக வைத்திருந்தன..!! மெலிதாக படர ஆரம்பித்திருந்த மாலைப்பனி.. காற்றின் ஈரப்பதத்தை சற்று அதிகரிக்க வைத்திருந்தது..!! இங்குவரை கேட்ட கோயில் ஒலிப்பெருக்கியின் சன்னமான சப்தத்தை தவிர.. சூழ்நிலையை சுற்றிலும் ஒரு கெட்டியான நிசப்தம்..!!

அடர்ந்த மரங்களுக்கு இடையே சென்ற அந்த குறுகலான ஒற்றையடி மலைப்பாதையில்.. அவசர அவசரமாய் நடந்து கொண்டிருந்தனர் அந்த மூன்று இளம்பெண்கள்.. தென்றலும் அவளது பள்ளித்தோழிகள் இருவரும்..!! பாவாடை சட்டையும், ரெட்டை ஜடையுமாக முன்னால் நடப்பவள் வாசுகி.. பச்சை தாவணியும், ஒற்றை பின்னலுமாய் இடையில் செல்பவள் மேகலா..!! இருவரையும் சிறிது இடைவெளி விட்டு பின்தொடர்கிற தென்றல்.. இப்போது பொறுமையற்றவளாய் தோழிகளிடம் கேட்டாள்..!!

"ஏய்.. எங்கடி கூட்டிட்டு போறீங்க என்னை..??"

"............................."

"சொல்லுங்கடி.. கேக்குறேன்ல..??"

"ப்ச்.. கொஞ்சநேரம் வாயை மூடிட்டு கம்முனு வாடி..!!" வாசுகி எரிந்து விழவும்,

"ஏய் மேகலா.. நீயாவது சொல்லுடி.. எங்க போயிட்ருக்கோம் இப்போ..??" அடுத்தவளிடம் கேட்டாள் தென்றல்.

"ஏன் அவசரப்படுற..?? இன்னும் அஞ்சு நிமிஷத்துல உனக்கே தெரியப்போகுது..!!" மேகலா சாந்தமாகவே பதில் சொன்னாள்.

"ப்ச்.. உங்க ரெண்டுபேருக்கும் என்ன லூஸா..?? திருவிழான்னு ஊரே அங்க கோயில் முன்னாடி கெடக்குது.. நீங்க என்னடான்னா.. இந்த நேரத்துல.. காட்டுக்குள்ள.." தென்றல் சொல்லி முடிப்பதற்கு முன்பே, முன்னால் சென்றுகொண்டிருந்த வாசுகி இப்போது திரும்பி பார்த்து சொன்னாள்.

"ஊரே கோயில் முன்னாடி கெடக்குதுல.. அதான்..!! இதைவிட்டா நமக்கு வேற சான்ஸே கெடைக்காது..!!"

"அ..அப்படி என்னடி பண்ணப் போறீங்க..??" தென்றலின் கேள்வியில் இப்போது எக்கச்சக்க குழப்பமும், அதே அளவு ஆர்வமும்.

"வா.. சொல்றோம்..!!"

அடுத்த ஐந்தாம் நிமிடம்.. அந்த மலைச்சரிவில் இருந்த மறைவான பாறைக்கு பின்புறமாக அமர்ந்திருந்தனர் மூன்று மங்கையரும்..!! தென்றலுக்கு இன்னுமே என்னவிஷயம் என்று தெளிந்திருக்கவில்லை.. ஆர்வமிகுதியால் அரித்தெடுத்தாள் அவளது தோழிகளை..!!

"இப்பயாச்சும் சொல்லுங்கடி.. இங்க எதுக்கு வந்து உக்காந்திருக்கிங்க..??"

"அடச்சீய்.. அவசரத்துக்கு பொறந்தவளே..!! அப்படியே பறக்காதடி.. சொல்றோம் இரு..!!" எரிச்சலாக சொன்ன வாசுகி, மேகலாவிடம் திரும்பி

"ம்ம்.. எடுத்து காட்டுடி..!!" என்றாள். மேகலா இப்போது தென்றலை ஒரு குறும்புப் பார்வை பார்த்தவாறே,

"ஏய் அரிசிமூட்டை.. இப்போ நான் காட்டப்போறதை பாத்து, அப்படியே நீ வாயை பொளக்கப்போற..!!" என்றுவிட்டு, தனது மார்புகளை மூடியிருந்த தாவணியை, படக்கென கீழே எடுத்துப்போட்டாள்.

"எ..என்னடி பண்ற..??" - தோழியின் கழுத்துக்கு கீழ் வெறித்த தென்றலின் முகத்தில் ஒரு மிரட்சி.

"டொட்டடய்ய்ங்ங்க்..!!!!" கண்சிமிட்டிய மேகலா, விம்மிக்கொண்டிருந்த தனது ரவிக்கைக்குள் கையை விட,

"ஏய் ச்ச்சீய்ய்ய்..!!!!" கத்தியே விட்டாள் தென்றல். கண்கள் இரண்டையும் கைகள் இரண்டாலும் பொத்திக்கொண்டாள்.

"அடச்சைய்.. அது இல்லடி..!! இது வேற..!! இங்க பாரு..!!"

மேகலா அவ்வாறு கடுப்பாக சொன்னதும்தான்.. தென்றல் அவளது கண்களை மெல்ல திறந்தாள்..!! விரிந்திருந்த மேகலாவின் கைகளில் அவள் சொன்ன அந்த இது.. கோல்ட்ஃப்ளேக் சிகரெட் பாக்கெட்டும், கொளுத்துவதற்கென்று ஒரு தீப்பெட்டியும்..!! அவற்றை பார்த்ததுமே தென்றல் அப்படியே வாயைப் பிளந்தாள்.. சற்றுமுன் மேகலா சொன்னது போலவே..!!

"அடிப்பாவிகளா..!!! பீடி குடிக்கத்தான் இவ்வளவுமா..??"

"என்னது..??? பீடியா..??? அப்டியே போட்டன்னா..!! பில்ட்டர் சீரட்டுடி இது..!!" வாசுகி முகத்தை சுளித்தவாறு டென்ஷனாக சொன்னாள்.
Like Reply


Messages In This Thread
RE: screw driver ஸ்டோரீஸ் - by johnypowas - 14-03-2019, 10:16 AM



Users browsing this thread: 9 Guest(s)