13-03-2019, 12:09 PM
அத்தியாயம் 8:
மறுநாள் மழை ஏதும் இல்லை .காலை அவன் சீக்கிரம் வந்துவிட்டான் போலும்.நான் கிளாஸ்க்குள் வந்தவுடன் அனைவரும் எழுந்து நின்றனர் அவன் மட்டும் அமர்ந்தே இருந்தான். நான் அவனை முறைத்து கொண்டே "சார் எழுந்து நிற்க மாட்டாரா "என கேட்டேன். உடனே வினோத் அவன் கையை பிடித்தி நிற்க சொன்னான். அவன் வேண்டா வெறுப்பாக எழுந்து நின்றான்.
"ஓகே !எல்லோரும் பேப்பர்ஸ் எடுத்துகிட்டு டெஸ்ட் எழுத வராண்டாவுக்கு வாங்க"என்றேன். அனைவரும் எழுந்து வந்து அமர்ந்தனர்.
அவன் வினோத் அருகில் அமர்ந்தான்.அனைவரும் எழுத ஆரம்பித்தனர்.நான் ரவுண்ட்ஸ் பார்த்துகொண்டே வந்தேன்.அப்பொழுது பியூன் வந்து "மேடம் உங்கள மந்தாகினி டீச்சர் கூப்பிடறாங்க"என்றான்.நான் ஒருமுறை திரும்பி பார்த்தேன் அனைவரும் ஒழுங்காகதான் எழுதிகொண்டிருந்தனர் நானும் நம்பி மந்தாகினியை பார்க்க சென்றேன்.
மந்தாகினி அவள் அப்பாவுக்கு உடல் சரியில்லை என ஃபோன் வந்ததாகவும் தான் உடனடியாக செல்வதாகவும் என்னை மாலை பஸ்ஸில் செல்லும்படியும் கூறினாள்.
நானும் சரி என கூறி அப்பாவை மாலை வந்து பார்ப்பதாக கூறி விட்டு வந்தேன்.அவன் வினோத்தை பார்த்து காப்பி அடித்து கொண்டிருந்தான்.நான் அவன் பின்னால் வெகு அருகில் நின்று அவனையே பார்த்து கொண்டிருந்தேன்.
வினோத் திரும்பி பார்த்துவிட்டு சைகை செய்தான் அவன் கண்டுகொள்ளாமல்"டேய்"லாஸ்ட் பாரா மறைக்குதுடா கொஞ்சம் தெளிவா காமிடா"என்றான்.வினோத் பேப்பரை எடுத்து மறைத்து வைத்தான்.உடனே அவன் "டேய் நான் இன்னும் முடிக்கவே இல்லடா"என்றான்.நான்"காமிப்பா நான் முடிச்சி கொடுக்குறேன் என்றேன். அப்பொழுதுதான் அவன் நான் பின்னால் நிற்பதை பார்த்தான்.திரும்பி பார்த்தான் முகத்தில் எந்த சலனமும் காட்டவில்லை எனக்கு ஆச்சரியமாய் இருந்தது.தப்பை செய்துவிட்டு கொஞ்சமும் சலனமில்லாமல் நிற்கிறானே என நினைத்து
"ஏண்டா அவனை பார்த்து எழுதினே "என கேட்டேன்.
அவன் கூலாக " எனக்கு தெரியல அதனாலதான் அவனை பார்த்து எழுதினேன்"எனக்கூறினான்.
"நேற்றெல்லாம் படிக்காம என்ன பண்ணிட்டிருந்த"
"..............."
"சொல்லு என்ன பண்ணிட்டிருந்தே"
"..............."
அவன் மௌனமாகவே இருந்தான். எனக்கு கோபம் கோபமாக வந்தது அவனை அடித்துவிடலாமா எனகூட தோன்றியது.
சட்டென பேப்பரை பிடுங்கி கொண்டு "பிரின்ஸ்பால் ரூமிற்கு வா"என்றேன்.
அவனும் மறுப்பேதும் சொல்லாமல் வந்தான்.
பிரின்ஸிபால் வெகு கோபமாக டஸ்டரை தூக்கி அவன் முகத்தில் அடித்தார்"யூ ராஸ்கல் இடியட் படிக்கலன்னா போய் மாடு மேய்க்க வேண்டியதுதானே எதுக்குடா ஸ்கூலுக்கு வர உனக்கெல்லாம் படிப்பு ஒரு கேடா "
அவன் எதுவும் பேசாமல் மௌனமாகவே இருந்தான்.
"என்னடா எதுவும் பேசாமல் இருக்க எதாவது பேசுடா"
"கேட்டா இப்படிதான் சார் எதுவும் பேசாமல் அமைதியாகவே இருக்கிறான்"என்றேன் நான்.என்னை முறைத்தான்.
"நாளைக்கு வரும்போது அவன் ஃபேரண்ட்ஸோட வரசொல்லும்மா அவன என் கண்முன்னால நிக்க சொல்லாத போக சொல்லு"
நான் அவனை பார்த்தேன்.அவன் கோபமாக வெளியேறினான். பிரின்ஸ்பால் இவ்வளவு கோபமாக பேசுவார் என நான் எதிர்பார்க்கவே இல்லை.
நானும் வெளியே வந்தேன்.மனதில் சந்தோசம் ஒருபக்கம் ஆனால் அவனை பார்த்தால் பாவமாகவும் இருந்தது.நான் என்ன தவறுசெய்தேன் அவன் தப்பு செய்தான்.அதற்கு தண்டனை வாங்கி கொடுத்தேன் இதில் எந்த தவறும் இருப்பதாக எனக்கு தோன்றவில்லை.இப்படியே யோசித்து கொண்டு ஸ்டாப் ரூமில் அமர்ந்திருந்தேன் தலை வலிப்பது போல் உணர்ந்தேன் பியூனிடம் சென்று Tablet வாங்கி வரசொல்லலாம் என நினைத்து எழுந்த வினாடி அவன் உள்ளே வந்தான்.கண்களில் கோபம் கால்களில் வேகம்.கதவை பாதி மூடினான்.