நீ இல்லாத வாழ்வு வெறுமையடி by ராசு
#32
வெறுங்கையோடு வந்த அவரை ஏற்றுக்கொள்ள அந்தப் பெண்ணுக்கு மனம் வரவில்லை.

அந்த மறுப்பு அவருக்கு பேரதிர்ச்சியாக இருந்தது.
மீண்டும் பெற்றோரிடம் திரும்பிப்போக அவரது தன்மானம் இடம் கொடுக்கவில்லை. அதனால் தன் உயிரை மாய்த்துக்கொண்டார்.
தாத்தாவின் குடும்பமே அதிர்ந்துபோனது. அந்தப்பெண்ணின் குணம் சரியில்லை என்றுதான் அவர்கள் மறுத்திருக்கிறார்கள்.
அதன் பிறகு தங்கள் பண வசதியைப் பற்றி வெளியில் பழகுபவர்களிடம் காட்டிக்கொள்ளக்கூடாது என்பது அந்த வீட்டின் எழுதப்படாத சட்டம். அதை அவர்கள் தாத்தா அவர்கள் மனதில் நன்றாக பதிய வைத்துவிட்டார்.
அவளாலும் அதைப் புரிந்துகொள்ள முடிந்தது. அவளும் மனிதர்களின் சுயநலத்தைக் கண்டவள்தானே. அத்தகைய சுயநலத்தால் வாழ்வை வெறுத்துக்கொண்டிருந்தவளும் அவள்தானே. அதனால் அவளால் மகேந்திரனைப் பற்றி தவறாக எண்ண முடியவில்லை.
யுகேந்திரன் போன்று தன்னைப் புரிந்தபிறகு இவ்வாறு பேசமாட்டான் என்று தன்னைத்தானே தேற்றிக்கொண்டிருந்தாள்.
அவ்வாறு அவனை விட்டு விலகியிருந்தது கூட நிம்மதியாய் இருந்தது. இப்போது அவன் சமாதானமாய் பேசிவிட்டு சென்றதிலிருந்து அவளது மனம் படபடக்கிறது. இத்தகைய நிலை அவளுக்குப் புதிது.
ஒருவேளை விழ இருந்த பயத்தினால் இன்னும் மனம் படபடக்கிறதோ என்று தன்னைத்தேற்றிக்கொள்ள முயன்றாள். ஆனால் கண்களை மூடினால் அவன் தன்னைப் பார்த்த பார்வையேதான் வந்து நிற்கிறது.
ன்று ஞாயிற்றுக்கிழமை. விடுமுறை.
காலையிலேயே கிருஷ்ணவேணி வெளியில் சென்றுவிட்டாள். கூட வருகிறேன் என்று சொன்ன யுகேந்திரனை மறுத்துவிட்டு சென்றிருந்தாள். அப்படி எங்கே செல்கிறாள் என்று தெரியவில்லை.
காலை உணவு நேரம் வேற ஆகிவிட்டது. இன்னும் இந்தப்பெண்ணைக் காணோமே என்று மனதிற்குள் புலம்பியவாறே அடிக்கொருதரம் வாசலையேப் பார்த்துக்கொண்டிருந்தார்.

அப்போது தனது ஸ்கூட்டியுடன் உள்ளே நுழைந்தாள்.

அவள் இந்த வீட்டிற்கு வந்து ஒரு மாதம் முடிந்துவிட்டது. நாட்கள் ஓடியதே தெரியவில்லை.

வனிதாமணி அவர்கள் வீட்டின் வேலையாட்களிடம் அவள் தனது ஒன்றுவிட்ட சகோதரனின் மகள் என்று சொல்லி வைத்திருக்கிறார்.

“என்னம்மா? இத்தனை நேரமாயிடுச்சு? சாப்பிட வேண்டாமா? நீதானே விடுமுறை நாட்களில் எல்லோரும் சேர்ந்து சாப்பிடுவோம்னு சொல்லியிருக்கே. இப்ப அதை நீயே மறக்கலாமா?”

“மறக்கலே அத்தே. மதிய சாப்பாடு இன்னிக்கு நான் சமைக்கலாம்னு இருக்கேன். அதற்குத் தேவையானதை வாங்கி வரத்தான் போனேன்.”

“நம்ம வீட்டில் இல்லாதது அப்படி என்ன வாங்கப்போனே? முன்னாடியே என்கிட்ட சொல்லியிருந்தா சாப்பிட்ட பிறகு சேர்ந்தே போய் வாங்கியிருக்கலாமே?”

செல்லமாய் கடிந்துகொண்டார்.

“அதுதான் சரியான நேரத்திற்கு வந்துட்டேனே அத்தை. வாங்க போகலாம்.”

உள்ளே சென்றனர்.

காலை உணவிற்குப் பின்னர் அவள் வனிதாமணியை சமையல் அறைக்குள்ளேயே விடவில்லை.

“நீங்க போய் மாமாவோட பேசிக்கிட்டிருங்க. நான் கூப்பிட்ட பிறகுதான் வரனும்.”

“ஆமாம்மா. நாங்க கூப்பிட்ட பிறகுதான் வரனும்” என்று அவளுடன் கூட்டு சேர்ந்துகொண்டான் யுகேந்திரன்.

“நீ என்ன பண்ணப்போறே?”

அவள் செல்லமாய் அதட்டினாள்.

“நீ தனியா கஷ்டப்பட்டா என் மனம் தாங்காது கிருஷ்மா. அதுதான்.”

“சரி. என்னவோ பண்ணித்தொலை. ஆனால் சாப்பிடும்போது இதை நான் செஞ்சேன். எப்படி இருக்கு. அப்படின்னு எதையும் சொல்லி அலட்டிக்காம இருக்கனும்.”

“அதெல்லாம் செய்யவே மாட்டேன். என்னை நம்பு.”

இருவரும் செய்ய ஆரம்பித்தனர். முதன் முதலில் சமைப்பதால் சைவ உணவுக்கான ஏற்பாடுகளையே செய்திருந்தாள்.



சமைத்தவற்றை எல்லாம் இருவரும் கொண்டு வந்து சமையல் மேசையில் வைத்த பிறகு அனைவரையும் கூப்பிட்டனர்.
“அத்தை. முதன் முதலா சமைக்கிறதால் சைவ சமையல்தான். அடுத்த வாரம் அசைவம் செய்யறேன்.” என்றாள்.
Like Reply


Messages In This Thread
RE: நீ இல்லாத வாழ்வு வெறுமையடி by ராசு - by johnypowas - 13-03-2019, 12:04 PM



Users browsing this thread: 2 Guest(s)