வீட்டுக்காரர்(completed)
#60
இருவரும் தனியாக இருந்த இந்த ஒரு நாளில் ரொம்ப நாள் பழகிய நண்பனை போன்ற நெருக்கம் உண்டானது இருந்தாலும் இவனிடம் எவ்வளவு நெருங்கலாம் மனம் திறந்து பேசலாம் என்ற ஐயப்பாடு இருக்கத்தான் செய்தது. சாப்பிட்டு முடித்து ஒரு மணி நேரம் மேல் ஆனது உடம்பு தானாக சாய விரும்பியது. விக்ரம் நீ கட்டிலில் படுத்துக்கோ நான் தரையில் படுக்கறேன் என்றதும் அவன் என்ன இன்னும் நம்பிக்கை வரவில்லையா சரி உன் இஷ்டம் என்று சொல்லி எனக்கு தரையில் ஒரு கம்பளத்தை விரித்து தலையணை போட்டு போர்வையும் எடுத்து குடுத்தான். நித்தியா நீ படுத்து கொள் இரவு ஒரு முக்கியமான கால்பந்து போட்டி இருக்கு சவுண்ட் வைக்காமல் நான் பார்த்து விட்டு பிறகு படுக்கிறேன். குட் நைட் என்று சொல்ல நானும் படுத்து கொண்டு முந்திய நாளை போலவே போர்வையால் முகம் முழுக்க மூடி கொண்டு படுத்தேன். ஆனால் முந்திய இரவு இருந்த பயம் இன்று இல்லை அது தான் திருடன் ரோஷன் இல்லையே.




அன்று இரவு பல நாட்களுக்கு பிறகு நிம்மதியாக உறங்கினேன். அடுத்த நாள் காலையில் விக்ரம் வெளியே கிளம்பும் போது என்னிடம் கதவை பூட்டி கொண்டு போகிறேன் உனக்கு ஏதாவது அவசரம் என்றால் என் மொபைலை கூப்பிடு வந்து விடுவேன் இரவு உணவு வாங்கி வந்து விடுகிறேன் என்றான். நான் விக்ரம் உன்னாலே ஒரு பதினைந்து நிமிடம் இருக்க முடியுமா நான் அருகே கடைக்கு சென்று விட்டு வருகிறேன் என்றேன். அவன் என்ன வேணும் சொல்லு நானே வாங்கி வருகிறேன் என்று சொல்ல நான் இல்லை நானே போகிறேன் எனக்கு பணம் மட்டும் குடுக்க முடியுமா என்றேன். விக்ரம் அருகே இருந்த அலமாரியை திறந்து விட அதில் பணம் நகை எல்லாமே இருந்தது. நான் எடுக்கட்டுமா என்று கேட்க அவன் தாராளமாக என்றான். நான் தேவையான பணத்தை எடுத்து கொண்டு அருகே இருந்த கடைக்கு சென்று சமையல் செய்ய தேவையான பொருட்களை வாங்கி கொண்டு திரும்பினேன். விக்ரம் என்ன வாங்கினேன் என்று பார்த்து நித்தியா அப்போ இரவு சாப்பாடு நீ தான் என்று சொல்ல எனக்கு அவன் சொன்ன சாப்பாடு நீதான் என்பது கொஞ்சம் உதைக்க நான் என்ன சொல்லறே என்று கேட்க அவன் நீ சமைக்க தானே வாங்கி வந்தே இரவு சாப்பாடு உன்னுடையது தானே என்றதும் நான் சரி சீக்கிரம் வந்து விடு சூடு ஆறினா சாப்பாடு சுவைக்காது என்றேன். விக்ரம் தலை ஆட்டிக்கொண்டே வெளியே சென்றான்.




விக்ரம் கதவை பூட்டி கொண்டு போவதை ஜன்னல் வழியாக பார்த்து கொண்டிருந்தேன். அவன் மடி இறங்கும் போது ஒரு முறை கூட திரும்பி பார்த்து நான் இருக்கிறேனா என்று பார்க்கவில்லை. நண்பர்களுக்குள்ளேயே இவ்வளவு வெறுப்பாடா ஆச்சரியமா இருந்தது. அவன் உருவம் மறைந்ததும் ஜன்னல் கதவை இறுக அடைத்து விட்டு உள்ளே சென்றேன். நேற்று இரவு போலவே அறையை சுத்தம் செய்து எனக்கு பிடித்த மாதிரி சில பொருட்களை இடம் மாற்றி முக்கியமாக அறையின் நடுவே இருந்த படுக்கையை ஓரம் தள்ளி விட்டு சுவற்றில் இருந்த அணிகள் இடையே ஒரு கயிறு கட்டி அங்கே இருந்த போர்வையை அதன் மேல் போட்டேன் அப்போதான் படுக்கைக்கு ஒரு மறைவான இடம் அமைந்தது. இப்போ அறையின் நாடு பகுதியில் சாப்பாட்டு மேஜை இருக்கும் நிலையில் இருக்க அதை தள்ளி படுக்கைக்கு நேர் எதிரே தள்ளி ஒரு ஓரமாக வைத்தேன். பிறகு கொஞ்சம் சிரமம் பட்டு பிரிட்ஜை மேஜையின் அருகே எடுத்து போனேன். விக்ரம் பரப்பி போட்டிருந்த காலணிகளை கதவோரம் அடுக்கி வைத்து அறையின் நாடு பகுதி காலியாக விட்டேன்.




அறையின் ஒரு ஓரத்தில் ஒரு சூட்கேஸ் இருந்தது அதை நகர்த்தி பார்த்தேன் கடினமாக இருந்தது. திறந்து துணிகளை எடுத்து விட்டு பிறகு நகர்த்தலாம் என்று அதை திறந்தேன். விதவிதமாக துணிகள் இருக்க மடிப்பு கலையாமல் எடுத்து பத்திரமாக கட்டில் மேலே வைத்தேன். பாதி துணிகள் எடுத்து இருந்த போது ஒரு படம் கண்ணில் பட்டது அதில் விக்ரம் கூட ஒரு பெண் மாலையுடன் திருமண கோலத்தில் அப்படியென்றால் விக்ரம் திருமணம் ஆனவன் அப்படி இருக்க எதற்கு இப்படி தனியாக அறையில் தங்கி இருக்க வேண்டும் புரியவில்லை. படத்தை எடுத்து பார்த்தேன் பெண் ரொம்பவே அழகாக விக்ரமுக்கு அம்சமாக படத்தை பார்க்கும் போதே எல்லாவிதத்திலும் மிக பொருத்தமானவளாக இருந்தாள் . ஒரு வேளை இவர்கள் சொந்த ஊர் வேறாக இருக்கலாம்னு நானே அனுமானித்தேன். அந்த படத்தை அப்படியே வைத்து பெட்டியை கட்டிலுக்கு கீழே தள்ளி மீண்டும் அதில் இருந்த துணிகளை எடுத்து வைத்தேன். இவ்வளவையும் முடிப்பதற்குள் மணி ஒன்று ஆகி இருந்தது. சாப்பிட என்ன இருக்கு என்று பிரிட்ஜை திறந்து பார்த்தேன். ஒரு ப்ரெட் பக்கெட் ஜாம் பட்டர் சீஸ் இருந்தன. எடுத்து வைத்து ப்ரெடுக்கு நடுவே ஜாம் பட்டர் தடவி சாப்பிட்டேன். குடிக்க தண்ணீர் இருக்கா என்று பார்க்க பிரிட்ஜில் வெறும் நான்கு ஐந்து பீர் கேன் தான் இருந்தது. யாரும் தான் இல்லையே குடித்து பாப்போம் அப்படி அதில் என்ன சுவை இருக்கு அதற்கு ஏன் பலர் அடிமை ஆகிறார்கள் என்று தெரிந்து விடுமே. முடிவு செய்த கொஞ்சமாக சில்லென்று இரு ஒரு கேன்னை வெளியே எடுத்து திறந்தேன். முதல் முறையாக திறந்ததால் வழக்கமாக கோக் பெப்சி கேன் திறக்கும் போது எப்படி குலுக்கி விட்டு திறப்பெனோ அது போல குலுக்கி விட்டு செய்ய திறந்த உடன் வேகமாக பீர் பொங்கி என் முகம் மேலே படிந்தது. உதடுகள் மீதும் பட்டிருந்ததால் நாக்கினால் நக்கி பார்த்தேன். ஊரில் தீபாவளி பலகாரம் அதிகம் சாப்பிட்டு விட்டு ஜீரணம் ஆகாமல் அப்பா கடையில் இருந்து ஜிஞ்சர் பீர் என்று ஒன்று வாங்கி வந்து குடுப்பார்கள் அது போன்ற சுவை தான் இருந்தது வாசம் மட்டும் கொஞ்சம் காட்டமாக இருந்தது.


ரெண்டு சிப் எடுக்கும் போதே குமட்டுவது போல இருக்க அத்துடன் நிறுத்தி கொண்டேன். இதை எப்படி எல்லோரும் ரசித்து குடிக்கரார்கள் என்று தோன்றியது. இதுவே வீட்டில் இருந்து இருந்தால் ஏதாவது வேலை செய்து கொண்டு இருந்த்திருப்பேன் நேரம் ஓடி இருக்கும் இங்கே போர் அடிக்க ஆரம்பித்தது. என் மொபைல் கண்ணில் பட எடுத்து நம்பர்களை புரட்டினேன். ஏனோ ரோஷன் நம்பர் வந்ததும் கொஞ்சம் கை தடுமாறியது கால் பட்டன் அழுத்த திருடன் ரோஷன் உடனே எடுத்து நித்து எங்கே இருக்கே விக்ரம் கேட்டா நீ பெங்களூர் கிளம்பி விட்டதா சொன்னான் நம்பாமல் நான் விக்ரம் வீடு வரை வந்தேன். வீடு பூட்டி இருந்தது எங்கே இருக்கே சொல்லு இப்போவே வரேன் என்றான். நான் இல்லை ரோஷன் நான் யாரையும் பார்க்க விரும்பவில்லை அதை சொல்ல தான் கால் செய்தேன் தயவு செய்து சீக்கிரம் நவீனை குணப்படுத்தி அழைத்து வா என்று சொல்லி விட்டு போன் சுவிட்ச் ஆப் செய்தேன். ஆப் செய்து விட்ட பிறகு தான் யோசித்தேன் ஏன் தான் நானே வம்பை விலைக்கு வாங்க நினைத்தேனோ என்று. அப்போதுதான் நான் இது வரை விக்ரம் நம்பர் தெரிந்து கொள்ளவில்லை என்பதை. எனக்கு பயம் வந்து விட்டது. விக்ரம் வீட்டை வெளியே பூட்டி கொண்டு சென்று விட்டான் அவசரம் என்றால் என்ன செய்வது என்று யோசித்து. சரி ஒன்றும் நடக்க கூடாதுன்னு கடவுளை வேண்டியப்படி இருந்தேன். வேலையற்ற மூளையே சாத்தானின் குடி இருப்பு என்று படித்து இருக்கிறேன் இப்போது தான் உணர்ந்தேன். நவீன் பற்றி யோசிக்க அவன் எனக்கு நல்லது செய்தானா இல்லை நல்லவன் போல நடித்து எனக்கு துரோகம் செய்தானா அவனை கெடுத்தது ரோஷனா அல்லது ரோஷன் சொன்னது போல நவீன் உறவு வைத்து இருப்பதாக சொன்ன அந்த பெண்ணா நான் நவீனிடம் ரொம்பவும் நல்ல படியாக தானே குடும்பம் நடத்தினேன். அவனுடைய எல்லா தேவைகளையும் பூர்த்தி செய்தேனே சில சமயம் அவர் தானே என் தாகத்தை தீர்க்காமல் விட்டு இருக்கிறார் அப்படி இருக்க அவருக்கு ஏன் இன்னொரு பெண் தேவை பட்டது. யோசிக்க யோசிக்க குழப்பம் அதிகமாகியது
Like Reply


Messages In This Thread
RE: வீட்டுக்காரர் - by johnypowas - 13-03-2019, 11:48 AM



Users browsing this thread: 1 Guest(s)