13-03-2019, 11:47 AM
வீட்டுக்காரர் - பகுதி - 12
மன சோர்வு உடற்சோர்வு ரெண்டும் சேர்ந்து என்னை அசதியில் ஆழ்த்த காரில் உறங்கி விட்டேன். விக்ரம் என்னை தட்டி எழுப்பும் போது தான் கண் விழித்தேன். கண் முழித்ததும் முதலில் நான் தேடியது ரோஷன் எங்கேயாவது இருக்கிறானா என்று தான். சுற்றத்தில் யாருமே இல்லை ஒரு மனநிம்மதியுடன் இறங்கி விக்ரம் அறைக்கு சென்றேன் அவன் காருக்கு பணம் குடுத்து விட்டு வந்தான். விக்ரம் கதவை திறக்க உள்ளே சென்றதும் எனக்கு என்னமோ ஒரு பத்திரமான இடத்தில் இருப்பது போன்ற உணர்வு. விக்ரம் என்னிடம் நித்தியா நீ குளிக்கணும்னா குளிக்கலாம் நான் வாசல் கதவை பூட்டி கொண்டு போகிறேன் காரணமும் சொல்லி விடுகிறேன் ஒரு வேளை நான் இல்லாத போது ரோஷன் வந்து கதவை தட்டினால் நீ தவறுதலாக திறந்து விட கூடாது அதற்கு என்று விளக்கம் குடுக்க நான் முதன் முறையாக அவன் சொன்னதற்கு புன்னகைத்து சரி அப்படியே செய்யுங்க என்றேன். அவன் சென்றதும் அசதி தீர குளித்தேன். குளித்த பிறகு உடல் அழுக்கு போனது போல மனமும் லேசானது.
விக்ரம் வெகு நேரம் கழித்து தான் கதவை திறந்து கொண்டு வந்தான். அதற்குள் நான் அறையை சுத்தம் செய்து வைத்தேன். விக்ரம் சில பொருட்கள் இடம் மாறி இருப்பதை பார்த்து நித்தியா நீ ஏன் இதையெல்லாம் செய்தாய் நான் வந்த பிறகு என்னிடம் சொல்லி இருந்தால் நானே செய்து இருப்பேனே ஆனா உண்மையில் சொல்லுகிறேன் இந்த மாற்றங்கள் செய்த பிறகு என் அறைக்கு ஒரு வித்யாசமான தோற்றம் பொலிவு கிடைச்சு இருக்கு தேங்க்ஸ் என்றான். மேஜை மீது அவன் வாங்கி வந்திருந்த உணவை வைக்க என்னிடம் ரெண்டு பேருக்கும் இரவு உணவு சாரி உனக்கு என்ன வேணும்னு கேட்காமலே ஏதோ எனக்கு தெரிந்ததை வாங்கி வந்திருக்கிறேன் என்றதும் அவன் உணவு என்று சொன்ன பிறகு தான் எனக்கும் பசியின் அறிகுறிகள் தெரிந்தது. சம்ப்ரதாயங்கள் பார்க்காமல் நான் மேஜை மீது இருந்த கவரை பிரித்து உணவு பொட்டலங்களை திறந்தேன். திறக்கும் போதே அதில் மீன் வாசம் வீச ஐயோ எத்தனை நாட்கள் ஆகிவிட்டது மீன் சாப்பிட்டு என்ற எண்ணம் வரும் போதே நாக்கில் எச்சில் ஊறியது. அடுத்த பொட்டலத்தில் நூடல்ஸ் இருந்தது. மேஜை மேல் இருந்த தட்டில் ரெண்டு பேருக்கும் பரிமாறி விக்ரம் சாப்பிடலாமா என்றேன். நான் இவ்வளவு விரைவில் சகஜமாக மாறி விடுவேன் என்று எதிர்பார்த்திருக்க மாட்டான் அது அவன் முகத்தில் நன்றாகவே தெரிந்தது. விக்ரம் பிரிட்ஜில் இருந்து இருவருக்கும் குளிர் பானம் எடுத்து வைக்க நான் விக்ரம் உனக்கு வேணும்னா நீ பீர் எடுத்துக்கோ எனக்கு உன் மேலே நம்பிக்கை இருக்கு என்றேன். விக்ரம் இல்லை வேண்டாம் என்று சொல்லி விட்டு என்னை சாப்பிட சொல்லி அவனும் சாப்பிட ஆரம்பித்தான்.
சாப்பிட்டு முடித்ததும் நான் மேஜையை சுத்தம் செய்து முடிக்க விக்ரம் சோபாவில் உட்கார்ந்து நித்தியா இது வரை நானே எல்லாம் செய்து இருக்கிறேன் இன்னைக்கு நீ செய்வதை தள்ளி இருந்து பார்க்கும் போது எனக்கே மகிழ்ச்சியாக இருக்கு ஒரு துணை இருக்கும் போது எல்லாமே பகிர்ந்து கொண்டு சொல்ல தெரியவில்லை ஆனால் மனதில் சுகமாக இருக்கிறது என்றான். நான் சிரித்தப்படி இது ஒரு வீட்டில் பெண் இருந்தால் அவள் செய்ய வேண்டிய அவளுக்கே செய்யும் போது ஒரு திருப்தி தருகிற செயல் என்று சொல்லி கொண்டே இடத்தை சுத்தம் செய்து விட்டு விக்ரம் பிரிட்ஜில் பால் இருக்கா என்றேன். அவன் இல்லையே என்றதும் இப்போ கடையில் கிடைக்குமா இரவில் நான் வெஜ் சாப்பிட்டால் பால் குடிப்பது நல்லது அது தான் கேட்டேன் என்றேன். நான் பேசும் போதே அவன் கிளம்பி விட்டான் வாங்கி வருவதற்காக.
விக்ரம் பால் வாங்கி வந்து குடுக்க நான் அங்கிருந்த இண்டேக்ஷன் ஸ்டவில் பாலை கொதிக்க வைத்து இருவருக்கும் டம்ப்ளரில் ஊற்றி ஒன்றை அவனிடம் குடுத்து அவன் எதிரே அமர்ந்தேன். டிவி இருந்தும் போடாமலே இருக்க விக்ரம் உனக்கு மத்தவங்களை போல நியூஸ் கிரிக்கெட் பைத்தியம் இல்லையா என்று கேட்க அவன் இல்லாமலா டிவி வாங்கி வச்சு இருக்கேன் பொதுவா பெண்களுக்கு அதில் விருப்பம் இருக்காது அது தான் உனக்கு இங்கே இருக்கிற ஒரே அறையில் அந்த சத்தம் கேட்டு மூட் போய் விட போகுதுன்னு போடவில்லை என்றான். அவன் அருகே இருந்த ரிமோட்டை எடுத்து நானே ஆன் செய்து ஆங்கில நியூஸ் வந்ததும் சத்தம் வைத்து எனக்காக நீ பார்க்காம இருக்க வேண்டாம் என்று ரிமோட்டை அவனிடம் குடுத்தேன்