"ப்ளீஸ்... சொன்னா கேளுங்க,... இதையெல்லாம் படிக்காதீங்க"
#39
TV பார்த்துக் கொண்டே, கடந்த கால நினைவுகளில் மூழ்கி இருந்த என்னை, வீட்டின் காலிங்க் பெல் சத்தம் நிகழ் காலத்துக்கு இழுத்து வர, எழுந்து சென்று கதவைத் திறந்து பார்த்தால்....அவர்தான்!

“என்னங்க இது! அதுக்குள்ள வந்து நிக்கிறீங்க!!?”

“கடையில அவ்வளவா ஒன்னும் வேலை இல்லே. சும்மா உட்கார்ந்திருக்கவும் போர் அடிச்சுது. தூக்கம் தூக்கமா வந்துச்சு. சரி என் மகராணி எப்படி இருக்கான்னு பாத்துட்டு போலாமுன்னு வந்தேன்.”

“பக்கத்து நாட்டு மகராணியோட விருந்து சாப்பிட்ட மயக்கத்திலே இருந்த உங்களுக்கு, உங்க வீட்டு மகராணி நெனைப்பு எப்படி வந்துச்சோ?”

“எத்தனையோ விருந்து சாப்பிட்டாலும். சொந்த வீட்டு சாப்பாட்டு ருசியே தனிதான்டி.”

“க்கும்.... இதுக்கு ஒன்னும் குறைச்சலில்லை. ஆமாங்க.... நீங்க சாப்பாடுன்னு சொன்னதும், நான் இன்னும் சமைக்கவே இல்லைங்கிறது ஞாபகத்துக்கு வருதுங்க.”

“சரி.... ஐயாதான் பக்கத்து நாட்டு மகாராணியோட விருந்திலே மயங்கிக் கிடக்கிறேன். இந்த ராணி எந்த நாட்டு ராஜா விருந்த எதிர்பார்த்து வீட்ல சாப்பாடு செய்ய மறந்திருந்தியோ?”

“ நான் எந்த நாட்டு ராஜா விருந்தையும் எதிர்பார்த்து இருக்கல. என் வீட்டு ராஜா கொடுக்கிற சாதாரண சாப்பாடே எனக்கு போதும்.”

“அப்புறம் என்ன ஆச்சு உனக்கு?”

“TV பாத்துக்கிட்டு இருந்தேங்க. அதுல, ஒரு பட்டி மன்றம், ‘ நமக்கு நாமே பார்த்து சேர்ந்துகொள்ளும் திருமணம் சிறந்ததா? பெற்றோரும், மற்றோரும் பார்த்து சேர்த்து வைக்கும் திருமணம் சிறந்ததா? ன்னு தலைப்பு. பட்டி மன்றம் நடந்த இடத்தைப் பாத்தா,.... திருச்சி. எனக்கு அப்படியே பழைய நெனப்பு எல்லாம் வந்து, இருக்கிற வேலையை மறந்துட்டேன். ஒரு அஞ்சு நிமிஷம் நீங்க ரெஸ்ட் எடுங்க, அதுக்குள்ள நான் சமைச்சிடுறேன்.”

என் கனவர் ஹாலில் சோஃபாவில் உட்கார்ந்திருக்க, சோஃபாவுக்கு முன் இருந்த டீபாயின் மேல் வைத்திருந்த என் செல்ஃபோன், ‘யாரோ அழைக்கிறார்கள்’ என்று அலறியது.

எடுத்துப் பார்த்த என் கனவர்,”ஏய்...அர்ச்சனாடி!” என்று சந்தோஷமாகச் சொல்லிக் கொண்டே, சமையல் அரையில் இருந்த என்னிடம் ஃபோனைக் கொடுக்க,” ஏன் உங்க தங்கச்சிதான் லைன்ல இருக்கா.... நீங்கதான் பேசறது?என்னமோ ஒன்னும் தெரியாதவர் மாதிரி எங்கிட்டே போனை கொண்டு வந்துகிட்டு....”என்று செல்லமாக அவரைத் திட்டிக்கொண்டே, கையில் செல் ஃபோனை வாங்கி, ஆன் செய்து,” ம்....சொல்லுடி அர்ச்சனா. என்ன திடீர்ன்னு இந்த நேரத்துல?. டயர்டெல்லாம் போய்டுச்சா?”


“ச்சீய்... போடி. கொழுப்புதான் உனக்கு! அண்ணன் பக்கத்துல இருக்காரா?”

“ஆமாம். இருக்கார்.ஏதாவது சொல்லனுமா?”

“அதெல்லாம் ஒன்னும் வேணாம். நான் சொல்றதை மட்டும் கேட்டுக்கோ. வர்ற 25 ம் தேதி, நாமெல்லாம் நைனிடால் டூர் போறோம். எல்லாத்தையும் அரேஞ்ச் பண்ணிட்டு இப்பதான் வந்து சொல்றார். ஒரு அஞ்சு நாளைக்கு வேணும்கிற துணி மணிகளை மட்டும் பேக் பண்ணி ரெடியா வச்சிருங்க. செலவு மொத்தமும் எங்களோடது. OK வா?”

“அவர் கிட்டே பேசிட்டு சொல்றேனே!”

“இதுல என்னடி அவர் கிட்டே பேசிட்டு சொல்றது? அண்ணன் கிட்டே கொடு போனை”

“நேரா உங்க கிட்டேயே பேச வேண்டியதுதானே, அதென்ன எங்கிட்ட ஒப்புக்கு” என்று முனுமுனுத்தபடி போனை அவர் கையில் கொடுத்தேன்.

“சொல்லு அர்ச்சனா?”

“வர்ற 25 ம் தேதிலேர்ந்து ஒரு அஞ்சு நாளைக்கு உங்களை ஃப்ரீ பண்ணிக்கோங்க. நாமெல்லாம் நைனிடால் போறோம்.”

“என்னம்மா விஷயம்?”

“ரெண்டு ஃபேமிலி எஞ்சாய் பண்ற மாதிரி, ஃப்ரீயா நைனிடால் டூர் பேக்கேஜ் வந்தது. சரி... வந்ததை ஏன் வீண் பண்ணுவானேன்னு உங்களையும் சேத்துகிட்டோம். மீனாவையும் கூட்டிகிட்டு வந்துடுங்கண்ணா!”

“சரிம்மா.... அவ இல்லாமலா? நீ சொன்னதுக்கப்புறம் வராம இருக்க முடியுமா. கட்டாயம் வந்திட்றோம்.” 


“வழியறதைப் பார்” என்று வாய்க்குள்ளே முனுமுனுத்த என்னைப் பார்த்து,....

”என்ன மீனா போகலாம்தானே?”

“அதான்....உங்க ஆசைத் தங்கச்சி கூப்டுட்டா.... போகாம இருப்பீங்களா? இல்ல....நான் வேண்டாம்ன்னு சொன்னா, என் பேச்சைத்தான் கேப்பீங்களா?....அதான் கட்டாயம் வந்திட்றோம்ன்னு சொல்லிட்டீங்களே. அப்புறம் எதுக்கு என்னை கேக்கிறீங்க.”

“உன் பேச்சை என்னக்கிடி மீறி இருக்கேன்.”

“ம்.... ரொம்பத்தான் ஒழுங்கு!!.....என்னதான் அண்ணன் தங்கச்சியா பழகினாலும், என்னை விட்டுட்டு அர்ச்சனா....அர்ச்சனான்னுகிட்டு அவ பின்னாடியே சுத்தக் கூடாது. எப்பவும் என் கூடத்தான் இருக்கணும். இதுக்கு ஒத்துகிட்டா உங்க கூட வர்றேன்.”

“சரிடி....காதல் பிசாசே.”
நாட்கள் நகர,.... மே 24 ஆம் தேதி வந்தது.

அடுத்த நாள் நைனிடால் டூர் போவதற்கு முன்னேற்பாடாக நானும் என் கணவரும் சேர்ந்து பேக்கிங்க் செய்தோம்.

ஒரு வாரம் லீவ் போட்டு விட்டு என் கணவர் வீட்டில் இருந்தார். இருவருக்கும் போரடிக்கவே, பக்கத்தில் உள்ள தியேட்டருக்கு படம் பார்க்க சென்றிருந்தோம்.
Like Reply


Messages In This Thread
RE: "ப்ளீஸ்... சொன்னா கேளுங்க,... இதையெல்லாம் படிக்காதீங்க" - by johnypowas - 13-03-2019, 11:10 AM



Users browsing this thread: 8 Guest(s)