13-03-2019, 11:09 AM
“எத்தனை நாளா?”
“ரெண்டு வருஷமா.”
“இந்த சின்ன வயசுக் காதல் வாழ்க்கையிலே உங்களுக்கு கஷ்டத்தைதான் கொடுக்கும்னு உங்களுக்கு தெரியுமா?”
“தெரியும்.”
“இருந்தாலும் காதலை,..... காதலனை விட மாட்டே?”
“ம்..”
“நீங்க ரெண்டு பேரும் உங்க காதல்ல உறுதியா இருந்தீங்கன்னா, உங்க காதலைப் பிரிக்க யாராலும் முடியாது.”
“இருந்தாலும், ராத்திரி முழுக்க யோசி. அதி காலை 4 மணிக்கு வருவேன். உன் முடிவைச் சொல்லு.”
“இதுல யோசிக்கிறதுக்கு ஒன்னும் இல்லண்ணா. நீதான் எங்க காதலை வாழ வைக்கணும்.” என்று சொல்லி கண்ணீரோடு அன்ணன் காலில் விழுந்தேன்.
பேசிவிட்டு அண்ணன் போன பின்பு, அப்பாவிடம் அண்ணன் ஏதோ சொல்ல,” அதானே பாத்தேன். தொலைச்சிப் புடுவேன். தொலைச்சு” என்ரு சொல்லியபடியே அவரும் படுக்கப் போக, அண்ணனும் அவன் அறையில் படுக்க....புயலடித்து ஓய்ந்த்து போல, அமைதியானது எங்கள் வீடு.
குடி முழுகின சொகத்தில் எல்லோரும் இருக்க, சாப்பிட பிடிக்காமல் பசியோடவே படுத்துக் கொண்டோம்.
ஆனால், என் நினைவு மட்டும் அலை கடல் போல ஆர்ப்பரித்துக் கொண்டே இருந்தது. தூக்கம் வரவில்லை புரண்டு புரண்டு படுத்தேன். பஞ்சு மெத்தை முள்ளாய் குத்தியது.
விடி காலை 4 மணி.
எங்கள் அறையின் கதவு திறந்தே இருக்க, யாரோ பூனை போல நடந்து வந்து,”ஸ்...ஸ்...ஸ் “என்று சத்தம் கொடுக்க, அது என் அண்ணன் தான் என்று எனக்குப் புரிந்தது. மெதுவாக எழுந்தேன். அம்மாவும் தங்கையும் ஆழ்ந்த தூக்கத்தில் இருந்தனர். ஏற்கனவே என் உடைகள் சிலவற்றையும், என் நகைகளையும் பையில் எடுத்து, மற்றவர் பார்வைக்கு தெரியாதபடிக்கு வைத்திருந்ததை எடுத்துக் கொண்டு பின் வழியாக தெருவுக்கு வர,.... அங்கே சரவணன் கையில் ஒரு பையோடு நின்றிருந்தான்.
சரவணன் கையில் ஒரு பையோடு அங்கே நின்றிருந்தது எனக்கு ஆச்சரியமாக இருந்தாலும், இருவரும் சேர்ந்து அவரவர் வீட்டை விட்டு, ஊருக்குத் தெரியாமல் ஓடிப் போக தயாராகிக் கொண்டிருப்பதை நினைத்து அச்சமாக இருந்தது.
சரவணன் கையில் என் கை பிடித்துக் கொடுத்து, அவன் கையில் சில ஆயிரம் ரூபாய் நோட்டுகளைத் தினித்து, அமைதியாக ஆசீர்வாதம் செய்து, கண்களில் கண்ணீரோடு நிற்க,..... அவன் அன்பில் கலங்கி என் அண்ணன் காலில் நான் மீண்டும் விழ, ....என்னோடு சரவணனும் சேர்ந்து விழுந்தான்.
இருவரும் கை பிடித்து இரயில்வே ஸ்டேஷன் நோக்கி ஓட்டமும் நடையுமாகச் சென்று. சென்னை ரயிலைப் பிடித்தோம்.
சென்னை செல்லும் இரயில் அப்போதுதான் புறப்படத் தயாராக இருந்தது. சரவணன் என் கையைப் பற்றி இழுத்துக் கொண்டு ஓட, .....நான் அவன் பின்னே மூச்சிறைக்க ஓடோடிச் சென்று, முன் பதிவு செய்யப்படாத பெட்டியில் ஏறினோம்.
நிற்கக் கூட இடமில்லை. கிடைத்த இடைவெளிக்குள் புகுந்து சென்று, எதிர்த்த வாசலின் ஒரமாய் நின்று கொண்டோம். ஆசுவாசப் படுத்திக்கொண்டு naaநான் சரவணனைப் பார்க்க, அவன் என்னைப் பார்த்தான். நல்ல வேளை, நெரிசலான கூட்டத்தில் எங்களைத் தெரிந்தவர்கள் யாரும் இல்லை.
இரயில், தஞ்சாவூர் ஸ்டேஷனைத் தாண்டி இருந்தது. சூரியன் தன் கதிர்களை லேசாக விரிக்க, பொழுது புலர்ந்தது.
எதையோ இழந்தவன் போல சரவணின் முகம், இருட்டடித்தது போல இருந்தது. என் முகமும் அவனுக்கு அப்படித்தான் இருந்திருக்க வேண்டும்.
“சரவணா, நாம பெத்தவங்களை மதிக்காம, சொந்த பந்தத்தை மறந்து, நம்ம வீட்டை விட்டு ஓடி வந்தது தப்போன்னு இப்ப எனக்கு உறுத்தலா இருக்கு!. உனக்கும், எனக்கும், இப்ப எந்த வருமானமும் இல்லை. நல்லது கெட்டது தெரியாத சின்ன வயசு. எதை நம்பி நாம ஓடிவந்தோம், எதுக்காக ஓடி வந்தோம்னு இப்ப எனக்கு பயமா இருக்கு.”
“வந்தது வந்துட்டோம். இனிமே வாழ்க்கையிலே போராடித்தான் ஜெயிக்கணும். எனக்கு கை வசம் போட்டோ பத்தின அத்தனை வேலையும் எனக்குத் தெரியும். அதை வச்சு நாம எப்படியும் பொழச்சுக்கலாம்கிற தைரியம் எனக்கு இருக்கு. அந்த தைரியத்தை, என் கூடவே இருந்து கடைசி வரைக்கும் கொடுக்கப் போறது நீதான். நீ கொஞ்சம் மனசு கலங்கினாலும், நான் கவுந்துடுவேன். நாம வாழ்க்கையிலே ஒரு அடி கூட எடுத்து வைக்க முடியாது.”
“என்ன ஏதுன்னு யோசிக்காமலே, திடு திப்புன்னு ரோஷத்துல, உன் மேல இருக்கிற காதல் மோகத்துல உன் கூட ஓடி வந்துட்டேன். இன்மேல் நாம எப்படி வாழப் போறோம்ங்கிறதை நெனைச்சாவே பயமா இருக்கு.”
“நீ ஒன்னும் பயப் படாதே. என் ஃப்ரன்ட் கல்கத்தாலே இருக்கான். ‘நீங்க வாங்க, உங்களுக்கு வேண்டிய ஹெல்ப் நான் பண்றேன்’னு சொல்லி இருக்கான். அதனாலே கவலைப் படாதே.அப்படி இப்படி கஷ்டப்பட்டு நாம நிமிந்து நிக்கிறவரைக்கும் அவன் நமக்கு உதவியா இருப்பான். நான் கொஞ்சம் பணம் எடுத்துகிட்டு வந்திருக்கேன். என்னை நம்பி வந்த உன்னை, ராணி மாதிரி வச்சி காப்பாத்த வேண்டியது என்னோட பொருப்பு, கடமை.”
கண்களில் கண்ணீர் தளும்ப,.... எதிர்காலம் இருட்டாய்த் தெரிய,.... சரவணனின் மடியில் சாய்ந்துகொண்டேன். நான் இருக்கிறேன் கவலைப் படாதே என்று சொல்வது போல, என் கன்னங்களில் வழிந்த கண்ணீரைத் துடைத்துவிட்டு, என் தலையை ஆதரவாக தடவிக் கொடுத்தான்.
ஏதேதோ நினைவுகள். பெற்றோரின் நினைவு. சொந்த ஊரின் நினைவு. படித்த பள்ளியின் நினைவு.எதிர்காலத்தைப் பற்றிய பயம். வாழ முடியுமா என்ற கவலை.
இரயில் இரவு சென்னை எக்மோர் ஸ்டேஷனை வந்தடைந்தது. ஆட்டோ பிடித்து சென்ட்ரல் வந்தோம்
அங்கே ஏற்கனவே அவன் நண்பன் ஒருவன் கல்கத்தாவுக்கு டிக்கட் எடுத்து, எங்களுக்காக காத்துக் கொண்டிருக்க, கொஞ்ச நேர ஓய்வுக்குப் பிரகு கல்கத்தா ட்ரெயின் பிடித்தோம். இரயில் கிளம்பியது.