"ப்ளீஸ்... சொன்னா கேளுங்க,... இதையெல்லாம் படிக்காதீங்க"
#37
"ப்ளீஸ்... சொன்னா கேளுங்க,... இதையெல்லாம் படிக்காதீங்க". 4

சரவணனை அவன் வீட்டில் இறக்கி விட்டு, என் வீட்டுக்குப் போனேன். வீடே அமைதியாக இருந்தது. அண்ணன் ஒரு ஓரமாக உட்கார்ந்து ஏதோ எழுதிக் கொண்டிருக்க, என் தங்கை என்னைப் பார்த்த்தும்,...
” அம்மா,....அவ வந்துட்டா!” என்றாள் சத்தமாக.

காளி தேவியைப் போல கண்களில் கோபம் கொப்பளிக்க, என்னை நோக்கி வேக வேகமாக வந்தவள், என் தலை முடியை கொத்தாகப் பிடித்து, ஓங்கி ஓங்கி என் கன்னங்களில் அறைந்தாள்.

கோபத்தில் மூச்சிரைக்க,”எவன்டி அது? படிக்கப் போறியா...இல்ல,...ஊர் மேயப் போறியா? படிக்க அனுப்புனா,...பரத்த மாதிரி சுத்தறியா? எத்தனை நாள் பழக்கம்டி?”


தலை முடிகள் கலைய, கண்களில் நீர் பெருகெடுக்க,.... சரவணனையும், என்னையும் சேர்த்து எங்களுக்கு தெரிந்த யாரோ பார்த்து, என் வீட்டில் பற்ற வைத்திருக்கிறார்கள் என்று எனக்கு அப்போதுதான் புரிந்தது.

“நான் கேட்டுகிட்டே இருக்கேன். வாயிலே எதையோ வச்சமாதிரி நிக்கிறியேடி. உண்மையைச் சொல்லுடி? யார் அவன்? உனக்கும் அவனுக்கும் எத்தனை நாள் பழக்கம்?” கேட்டுக் கொண்டே தலை முடியை கொத்தாகப் பிடித்துக் கொண்டு, கோபம் அடங்காமல் திரும்பவும் இரண்டு கன்னங்களிலும் மாறி மாறி அறைந்தாள்.

அங்கே நடந்து கொண்டிருந்த சம்பவத்தைக் கண்டும் காணாதது போல அண்ணன் எழுதிக் கொண்டிருக்க , என் தங்கை, என்னையும் அம்மாவையும் மாறி, மாறி மலங்க மலங்க விழித்துப் பார்த்தாள்.

“உங்க அப்பா வரட்டும் சொல்றேன். என்ன ஏதுன்னு கேக்கட்டும். வயசுக்கு வந்தப்பவே, எக்கேடோ கெட்டுப்போன்னு எவன் தலையிலயாவது கட்டிக் கொடுத்திருக்கணும். பொட்டப் புள்ளையை படிக்க வச்சது எங்களோட தப்புதான். இனி அந்த மனுஷன் வந்து கேக்கிற கேள்விக்கு நான் என்ன பதில் சொல்றது?அம்மாவும் கண்ணீர் விட்டு அழுது கலங்கினாள்.

நான் செய்தது தப்புதானோ? என்று ஒரு கனம் மனதில் நினைப்பு வந்தாலும், வாலிப வயதின் திமிறு அதை ஏற்க மறுத்தது. வீம்புக்காக காதலை தொடரச் சொன்னது.

அடித்து ஓய்ந்த அம்மா ஒரு மூலையில் சரிய, நான் எதிர் மூலையில் சரிந்தேன்.

இரவு மணி 8 ஆனது.

அப்பா உள்ளே நுழைந்ததுமே, அம்மா, என் புராணத்தை ஆரம்பிக்க, வேலை களைப்பிலும், கவலையிலும் அம்மா சொன்னதைக் கேட்ட அப்பாவுக்கு கண் மூடித் தனமான ஆத்திரம் வர, பெல்ட்டை உறுவி விளாச,....ஐயோ,...ஐயோ என்று நான் கதற, அங்கிருந்த அனைவருமே வேடிக்கை பார்த்தனர்.

அடித்து ஓய்ந்த அப்பாவிடம்,”ஏங்க இவ இனிமேல படிக்க வேண்டாம். உங்க சொந்தத்திலியோ, என் சொந்த்த்திலியோ,... கூனோ, குருடோ,..... முடமோ, மொன்டியோ எவனோ ஒருத்தனுக்கு பேசி முடிச்சு, மானம் மரியாதை போறதுக்குள்ள, இருக்கிறதை வச்சு கல்யாணம் செஞ்சு வச்சிடாலாம்ங்க”.

ஆமாம்டி,... இவளை வீட்டுகுள்ளயே வச்சு பூட்டு. வெளியே விடாதே. எப்ப நம்ம மானத்த சந்தி சிரிக்க வச்சாளோ அப்பவே முடிவு பண்ணிட்டேன். இவ மாதிரி பொண்ணுங்க நாம செஞ்சு வைக்கிற கல்யாணத்துக்கு ஒத்துகிட மாட்டாளுங்க. ஒத்துகிட்டா பாரு. இல்லைன்னா இங்கேயே இவள வெட்டிப் போட்டுடறேன். நான் ஜெயிலுக்கு போனாலும் பரவாயில்லை.அமைதியா உட்கார்ந்திருந்த அண்ணனை நோக்கி,”என்னடா சொல்ற?”

“நீங்க சொல்றதும் சரிதாம்பா.”

சரி அவனை மறந்துட்டு நாம செஞ்சு வைக்கிற கல்யாணத்துக்கு ஒத்துக்கிறாளா? கேட்டுச் சொல்லு”அம்மாவுக்கு அப்பா ஆணையிட,....

” சொல்லுடி அப்பா கேக்கிறார்ல?அவ வீம்புக்காரி, எவ்வளவு அடிச்சும் ‘கம்’னே இருக்கா பாரேன். நல்லா யோசிச்சு காலைல ஒரு நல்ல முடிவைச் சொல்லு. இல்லைன்னா உங்கப்பா மனுஷனா இருக்க மாட்டார்”

“அம்மா விடும்மா, இந்த அடி அடிச்சும் ஒரு வார்த்தை பேசாம இருக்கான்னா, அவ ஏதோ முடிவோட்தான் இருக்கா? நான் பேசி கல்யாணத்துக்கு சம்மதிக்க வைக்கிறேன்.” அண்ணன் ஏதோ முடிவோடு சொல்லி நடந்துகொண்டிருந்த சம்பவத்துக்கு தற்காலிக முற்றுப் புள்ளி வைத்தான்.

அம்மா சமையலறை வேலைகளை முடிக்கப் போக, அப்பா ஹாலில் கவலை தோய்ந்த முகத்தோடு கன்னத்தில் கை முஷ்டியை முட்டுக் கொடுத்து உட்கார்ந்திருக்க, என் தங்கை தூங்கி இருந்தாள்.


அம்மா, நான், என் தங்கை மூவரும் சேர்ந்து வழக்கமாக படுக்கும் அறையில் நான் சென்று படுக்கையில் குறுகிப் படுத்திருக்க, அங்கே வந்த என் அண்ணன் பக்கத்தில் யாராவது இருக்கிறார்களா என்று பார்த்து, மெதுவான குரலில்,....

” இங்க பாரு மீனா. உனக்கு உதவத்தான் நான் வந்திருக்கேன். காதல் கொண்ட மனசு ரெண்டும் பிரியறப்போ எப்படி கஷ்டப் படும்னு எனக்கும் தெரியும். அதனால உண்மையைச் சொல்லு. யாருக்காகவும் நீ பயப் படத் தேவையில்லை. அவனை நீ உண்மையாலுமே காதலிக்கிறியா?”

ஆமாம் என்பது போல தலையாட்டினேன்.

அவன் உன்னையும் அதே மாதிரி உண்மையா காதலிக்கிறானா? இல்லை உன் உடம்பைக் காதலிக்கிறானா?

“இல்லேண்ணா,, உண்மையாத்தான் ரெண்டு பேரும் காதலிக்கிறோம்.உடம்பு சுகத்துக்காக இல்ல”
Like Reply


Messages In This Thread
RE: "ப்ளீஸ்... சொன்னா கேளுங்க,... இதையெல்லாம் படிக்காதீங்க" - by johnypowas - 13-03-2019, 11:08 AM



Users browsing this thread: 6 Guest(s)