Thread Rating:
  • 3 Vote(s) - 3.67 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
தற்போதைய செய்திகள்
மனிதஉரிமை பெண் வழக்கறிஞருக்கு 38 ஆண்டுகள் சிறை

தெஹ்ரான் : ஈரான் நாட்டைச் சேர்ந்த பெண் வழக்கறிஞர் நஸ் ரீன் சோட்டோடே என்பவருக்கு 38 ஆண்டு சிறைத்தண்டனை விதித்தும் 148 கசையடிகள் தண்டனை விதித்தும் அந்நாட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

[Image: Tamil_News_large_2232676.jpg]

மனித உரிமைகளுக்கான வழக்கில் ஆஜராகி வாதாடும் நஸ் ரீன் தேசிய பாதுகாப்புக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக அவர் மீது வழக்குத் தொடரப்பட்டது. நாட்டின் உயர் நிலைத் தலைவர்களை அவமதித்துப் பேசியதாகவும் அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது.


[Image: gallerye_090831128_2232676.jpg]



பெண்கள் உரிமைக்காகவும், மரண தண்டனைகளுக்கு எதிராகவும் மற்றும் மனித உரிமைகளுக்காகவும் தமது வாழ்க்கையை அர்ப்பணித்த நஸ் ரீனுக்கு ஈரான் அரசு தண்டனை வழங்குவது குறித்து உலக அளவில் பல்வேறு அமைப்பினர் கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர். சிஎன்என் செய்தி நிறுவனம் அளித்துள்ள தகவலின்படி 2010 ம் ஆண்டும் இதே போன்ற குற்றச்சாட்டுகளுக்காக இவருக்கு 11 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால் 2013 ம் ஆண்டே இவர் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
Like Reply


Messages In This Thread
RE: கரண்ட் affairs தமிழில் - by johnypowas - 13-03-2019, 10:28 AM



Users browsing this thread: 27 Guest(s)