Fantasy காலம் என் கையில்
#86
கால சூழல் - 4 


இடம்: சென்னை, வேளச்சேரி (ராஜசேகர் இல்லம்)
நாள்: மார்ச் 3 சனிக்கிழமை
நேரம்: இரவு 12 : 45 மணி         

காலத்தை பயணித்த கார்த்திக் அவனின் அறையின் கதவு சத்ரூ திறந்து அங்கே நடக்கின்றதை ஒரு வித அதிர்ச்சியும் குழப்பத்திலும் பார்த்து கொண்டு இருந்தான், அங்கே வெளியே குடிபோதையில் கார்த்திக் அம்மாவின் இடுப்பில் கை வைத்து கொண்டு

கார்த்திக்: அம்மா, அந்த ஆள பேச வேண்டாம் சொல்லு, அப்பறம் நானும் பேசுவேன் அப்பறம் நல்லா இருக்காது பாத்துக்கோ

ராஜசேகர்: என்ன டா பேசுவ, பாரு டி பார்வதி உன்னோட செல்ல பையன் அப்பனை எதிர்த்து பேசுற அளவுக்கு வந்துதான் அதுவும் துறை குடிச்சுது வந்து இருக்காரு 

கார்த்திக்: Mr . ராஜசேகர் நான் உங்க பணத்துல தண்ணி அடிக்கல, நான் பார்ட் டைம் வேலை பார்த்த காசுல தான் தண்ணி அடிச்சேன்

ராஜசேகர்: என்னடா சொன்ன (மறுபடி கார்த்திக்கின் கன்னம் பழுக்கும் படி ஒரு அரை, அதை இந்த கார்த்திக் பார்த்து கொண்டு அவனின் கன்னத்தை தடவினான், எங்கே நேத்து அப்பாவிடம் அரை வாங்கினானோ அங்கே, இப்ப இந்த கார்த்திக் வாங்கும் அதே இடத்தில)

பார்வதி: என்னங்க நீங்களும் தோலுக்கு மேல வளந்த புள்ளைய அடிக்காதிங்க , பாவம் அவன், எதோ கஷ்டத்துல குடிச்சுடன், அதுக்கு போயிடு என்னோட பையன அடிக்கிறீங்க

ராஜசேகர்: இப்படியே செல்லம் குடு டி, இன்னும் அவன் தப்புக்கு மேல தப்பு பண்ணட்டும், எக்கேடோ கேட்டு போங்க (கோபத்துடன் ராஜசேகர் அவனின் அறைக்கு சென்றான்)

பார்வதி: (ஏக்கமாக தனது மகனை பார்த்தாள்) ஏன் டா செல்லம் நீயும் பதிலுக்கு பதில் பேசி அப்பா கிட்ட இன்னும் கேட்ட பேரு வாங்குற, உங்க ரெண்டு பேருக்கு நடுவுல மாட்டிட்டு நான் ரொம்ப கஷ்ட படுறேன் டா, 

(காலத்தை பயணித்த கார்த்திக் அம்மாவை பாவமாக பார்த்தான், ச்சை அம்மா ரொம்ப பாவம், நேத்து என்னால அம்மாக்கு கஷ்டம்)

கார்த்திக்: அம்மா, நான் என்ன பண்ணுனேன், தனியா வேலை பாக்கணும் நெனச்சேன் அது தப்பா, அந்த ஆளு எப்பவும் எப்படி தான் அம்மா, மொதல்ல சொந்த தங்கச்சிய கழுத்தை பிடிச்சு தொரட்டுனான் அது நடந்து 25 வருஷம் ஆச்சு, நமக்கு ஒரு குடும்பமே சொந்தம் இல்லாம போச்சு, இப்ப சொந்த பையனையும் விரோதியா பாக்குறான், அவன் மட்டும் இல்ல சுரேஷ், பூஜா எல்லாம் அதே மாறி தான் அந்த ரத்தம் தானே அப்படி தான் இருப்பாங்க

பார்வதி: கவலைப்படாத டா, அம்மா நான் இருக்கேன் டா உனக்கு, நீ உன்னோட மனசுக்கு என்ன பிடிச்சு இருக்கோ அத பண்ணு அம்மா எப்பவும் உனக்கு உறுதுணையா இருப்பேன் டா

கார்த்திக்: சரி அம்மா, எனக்கு ரொம்ப ஒரு மாறி தல சுத்துது நான் என்னோட ரூம்க்கு போறேன், நாளைக்கி பேசலாம் அம்மா

பார்வதி: சரி டா, நீ ரெஸ்ட் எடு, நான் இந்த பிரச்சனைக்கு சீக்கிரமே ஒரு நல்ல தீர்வு வர ஏதாச்சும் பண்ண முடியுமா பாக்குறேன்

கார்த்திக்: சரி அம்மா

கார்த்திக் தள்ளாடிய படி தன் ரூமை நோக்கி நடந்தான், காலத்தை பயணித்த கார்த்திக் என்ன செய்வது அறியாமல் கட்டிலுக்கு அடியில் ஒளித்து கொண்டு, அந்த வாட்சை ஆச்சிரியமாக பார்த்தான், மெல்ல அந்த வாட்சை தடவி "இது எல்லாம் உண்மையா இல்ல இது நமக்கு ஏதாச்சும் கனவா" என்று நினைத்து கொண்டு அந்த நேரத்தை கவனித்தான் 12 : 45 AM என்று வாட்ச் காமித்து, இப்ப 12 : 45 PM தானே என்று நினைத்து கொண்டு வாட்சின் நேரத்தை சரி செய்தேன், அவனின் ரூம் பழைய நிலை சென்றது, ரூம் வெப்பநிலையில், ரூம் நல்ல வெளிச்சமாக இருந்தது, ரூம் உள்ளே அம்மா குரல் "டேய் கார்த்திக் கார்த்திக் எங்க ரூம்ல கூட இல்ல வெளிய அவன் பைக் இருக்கே" என்று கூறிக்கொண்டு அவனின் பாத்ரூமை திறந்து பார்த்தாள். கார்த்திக் மனதிற்குள் இப்ப தானே அம்மாவை பார்த்தேன், ஆனா அப்ப எனக்காக அப்பாவோட சண்டை போட்டுட்டு இருந்தாங்க இப்ப ரூம்ல இருக்காங்களே என்று வேகமாக எந்திரித்தான் கட்டில் கீழ படுத்து இருப்பதை மறந்த படி, அவனின் தலை கட்டில் இடித்து " ஆஹ் அம்மா" அலறிக்கொண்டு எந்திரித்தான்
இப்படிக்கு 
Loveyourself1990

என்னுடைய (கதைகள்) திரிகள்:

காதலுக்கு வயதில்லை 
https://xossipy.com/showthread.php?tid=31384

காலம் என் கையில் 
https://xossipy.com/showthread.php?tid=31598

அன்பிற்கு உண்டோ அடைக்கும் தாழ்
https://xossipy.com/thread-32596.html
[+] 1 user Likes Loveyourself1990's post
Like Reply


Messages In This Thread
RE: காலம் என் கையில் - by Loveyourself1990 - 15-10-2020, 05:05 PM



Users browsing this thread: 28 Guest(s)