10-10-2020, 07:28 PM
(This post was last modified: 10-10-2020, 07:42 PM by Lovebdsm. Edited 1 time in total. Edited 1 time in total.)
!!!?யாராக இருக்கும்?!!!
ரிசப்சன்.
ரோஜா மாலைகளுக்கிடையே சிக்கியிருந்தார்கள் அனிதாவும் கீர்த்தியும்.கழுத்தில் புதிதாய் இடம் பெற்ற இந்தத் தாலிச்சரடை வலது கையின் ஆட்காட்டி விரலால் மெல்ல நெருடுகையில் மனசுக்குள் புதுக்கவிதைகள் கோரஸாய் பாடின மாதிரி இருந்தது அனிதாவுக்கு.
மேடையில் வலையப்பட்டியும், குன்னக்குடியும் தத்தம் வாத்தியங்களோடு மும்முரமாய் இயங்கிக். கொண்டிருந்தார்கள். ஜனக்கூட்டம் மண்டபத்தை நிறைக்க, காற்று உஷ்ணமாய் இருந்தது. கித்தான் மறைப்புகளால் தடுக்கப்பட்ட தற்காலிக டைனிங் ஹாலில் ஒரு கணிசமான கூட்டம் உட்கார்ந்து பாதுஷாவையும் வேலையையும் மென்று கொண்டிருந்தது.
"ஹலோ கீர்த்தி! "
அக்காவிடம் தாழ்ந்த குரலில் பேசிக் கொண்டிருந்த கீர்த்தி சட்டென்று தலை நிமிர்ந்தான். அடுத்த கணமே முகம் மலர்ந்தான். ரோஜா மாலையினின்றும் இதழ்கள் பொல பொலவென்று உதிர எழுந்தான்.
"வாடா... பெரிய மனுஷா.... இப்பத்தான் வர்றியா?"
வந்தவன் சிரித்தான். "ஆபிஸ் வேலையா வெளியூர் போயிருந்தேன்.முகூர்த்தத்துக்கு வந்து சேர்ந்துடாலாம்ன்னு நினைச்சேன்....! முடியலை... எனி ஹௌ ரிசப்ஷனுக்கு வந்து சேர்ந்துட்டேன்..."
கீர்த்தி அனிதாவின் பக்கமாய் திரும்பினான். "அனி! அவன் என்னோட ப்ரெண்ட்... காலேஜ் மேட்... பேரு வத்சன். சரியான வாயரட்டை....!"
அனிதா அவனை ஏறிட்டபடி கைகளைக் குவித்தாள். வத்சன் நல்ல உயரத்தில் சிவப்பாய் திரிந்தான். ஒமுங்கான பல் வரிசையில் அவன் சிரிக்கையில் ஒரு இந்தி கதா நடிகனை ஞாபகப்படுத்தினான். மார்பு ரோமக் கட்டில் மெல்லிய தங்கச் சங்கிலி டாலடித்தது.
"ஏண்டா... கீர்த்தி... உன்னோட புதுப் பொண்டாட்டிக்கு என்னை அறிமுகப் படுத்தற லட்சணம் இதுதானா...?கொஞ்சம் புத்திசாலித்தனமா பேசினா வாயரட்டையா? சிஸ்டர்! நீங்களே சொல்லுங்க... இது நியாயமா?"
அனிதா ஒன்றும் பேசாமல் புன்னகைத்தாள். கீர்த்தி வத்சனின் முதுகைத் தடடினான் "சரி. சரி கையில
என்னடா அட்டைப் பெட்டி எனக்கு பிரசண்டேஷனா? என்ன கொண்டு வந்திருக்கே...?"
"கெஸ் பண்ணு பார்க்கலாம்?"
" அயன் பாக்ஸ்? பால் குக்கர்?"
"நோ!"
" டேய் லேம்ப்? காமெரா?"
"நோ!"
"நீயே சொல்லித் தொலை!"எரிச்சல் பட்டான் கீர்த்தி, "சொல்ல மாட்டேன்... உனக்கு என்னிக்கு ஃபர்ஸ்ட் நைட்?" அனிதா சிவப்பான முகத்தைத் திருப்பிக் கொள்ள, கீர்த்தி சிரித்தான். மெல்லச் சொன்னான்.
"நாளைக்கு!"
"அப்போ பிரிச்சுப் பார்த்தா போதும்.... அதுக்கு முன்னாடி பிரிச்சுடாதே..... அப்புறம். என்னை நீ திட்டுவ...!"
"அடப்பாவி! என்னடா வச்சிருக்கே உள்ளே...?"
"நிச்சயமா வெடிகுண்டு இல்லே.... பயப்படாதே... நான் போய் மொதல்ல உன்னோட ரிசப்ஷன் அயிட்டத்தை முழுங்கிட்டு வர்றேன்.... பசி ஆளை கொல்லுது!"
நகர முற்பட்டவன் நின்று அனிதாவிடம் சொன்னான் "கங்கிராட்ஸ் சிஸ்டர்...! கோயில் மாடாயிருந்த கீர்த்தியை குடும்பஸ்தனா ஆக்கிட்டிங்க கொஞ்சம் முசுடாயிருத் தாலும் நல்லவன். சின்ன விஷயத்துக்கெல்லாம் உடைஞ்சு போயிடுவான் பார்த்து ஹேண்டில் பண்ணுங்க....!"
. "சர்தான் போடா!" கீர்த்தி சிரித்தபடியே வத்சனை
நெட்டித் தள்ள அவன் டைனிங் ஹால் பக்கமாய் போனான்.
" என்னங்க உங்க ப்ரெண்ட் எப்பவும் இப்படித்தான் பேசுவாரா?" அனிதா கேட்டுவிட்டு புன்னகைத்தாள்.
"அவனுடைய சுபாவமே அப்படித்தான்.. பேசிப் பேசியே எல்லாரையும் சீக்கிரமா சிநேகம் பண்ணிக்குவான். அப்பா அம்மாவெல்லாம் திருநெல்வேலி பக்கத்துல இருக்காங்க.... இவன் இந்த கோயம்புத்தூர்ல குப்பை கொட்டிட்டிருக்கான்..."
"கல்யாணம்?"
"வேண்டாம்ன்னு சொல்லிட்டிருக்கான்....அனுமார் பக்தன்..... பிரம்மச்சாரியாவே இருந்துடப் போறதா அளந்துவிட்டு கிட்டு இருக்கான்...."
"இந்த அட்டைப் பெட்டியில் என்ன இருக்கும்?"
" நாளைக்கு ராத்திரி தான் பிரிச்சு பாக்கனும்னு
சொல்லியிருக்கான்."
"ஏதாவது அசிங்கமா இருந்துடப் போகுது!"
"அசிங்கமா இருக்கும்ங்கிறதுனாலத்தான் நாளைக்குப் பிரிச்சு பார்க்கச் சொல்லியிருக்கான் உனக்கு எக்ஸைட்மென்ட்டா இருந்தா பிரிச்சுடட்டுமா...?"
"வேண்டாம்.... வேண்டாம்...!" - அனிதா சொல்லச் சொல்ல கீர்த்தியின் அப்பா சீத்தாபதி அவர்களை நெருங்கினார்.
"கீர்த்தி நீயும் அனிதாவும் டிரஸ் சேஞ்ச் பண்ணிட்டு கோயிலுக்கு போயிட்டு வந்துடுங்க.... கச்சேரி முடிய நேரமாகும்... "
"எந்தக் கோவிலுக்கு?"- கீர்த்தி எரிச்சலாய்க் கேட்டான்.
"பக்கத்திலிருக்கிற விநாயகர் கோயிலுக்கு...! போம்மா அனிதா! டிரஸ் சேஞ்ச் பண்ணிட்டு உடனடியாக வரணும்..."
தலையை ஆட்டிய அனிதா- மண்டபத்தின் கோடியில்
இருந்த தன்னுடைய அறையை நோக்கி மெல்ல நகர்ந்தாள்.
அறையை நெருங்கி உள்ளே புக முயன்ற நேரம் அவளுடைய மாமா எத்திராஜ் எதிர்ப்பட்டார். "அம்மா அனிதா உன்னைப் பாத்து பேசறதுக்காக முருகேஷ்ன்னு ஒருத்தர் - உங்க ஆபீஸ்ல முன்னாடி வேலை பண்ணிட்டிருந்தவராம் வந்திருக்கார்... வரச் சொல்லட்டுமா?"
'முருகேஷா?'
மனசின் மையத்தில் திக்கென்று அதிர்ந்தாள் அனிதா.
.............................................................................................

Lovebdsm