Adultery ஆண்மை எனப்படுவது யாதெனின்..!
49.
 
நீங்க இல்லைன்னு சொன்னாலும், ஹாசிணியை லவ் பண்ன ஆரம்பிச்சுட்டீங்க சுந்தர்! ஏதோ தயக்கத்துல இல்லைன்னு சொல்லிட்டிருக்கீங்க! நீங்களே உங்க மனசாட்சியைக் கேட்டுப் பாருங்க!
 
நீங்க தப்பாப் புரிஞ்சிகிட்டீங்க டாக்டர். ஹாசிணி மேல இதுவரைக்கும் எனக்கு இருக்குறது வெறும் அன்புதான். காதல் இல்லை. ஆனா, இப்படியே வளந்துச்சுன்னா, நான் கண்டிப்பாக லவ் பண்ண ஆரம்பிச்சிடுவேன்.
 
நீயும் ஏன்யா குழப்புற? நீங்கள்லாம் நேராவே பேச மாட்டீங்களா?
 
நானும்ன்னா, வேற யாரு?
 
முதல்ல நீங்கச் சொல்லுங்க, அப்புறம் நான் சொல்லுறேன்.
 
ஹாசிணியை ஒரு தடவை அவங்க வீட்டு ஆட்கள் கூட நம்பாதப்பவே, அவ மேல நம்பிக்கை வெச்சேன் டாக்டர். அப்பருந்து, என் மேல அவளுக்கு ஒரு கூடுதல் அன்பு இருக்கும், அந்த அன்புதான், நல்ல சம்பளத்துல வேலை இருந்தும், எனக்கு சப்போர்ட்டா, என் ஆஃபிஸ்க்கு வர வெச்சுது. இப்பவும், அவங்க அக்கா பண்ணதுதான் தப்புன்னு, எனக்காக ஃபீல் பண்ண வெச்சுது.
 
ஹாசிணி மாதிரி ஒரு பொண்ணை லவ் பண்ணாம இருக்கவே முடியாது டாக்டர். நம்ம மேல கண்மூடித்தனமா அன்பை வெச்சு, நமக்காக எதையும் செய்யத் தயாரா இருக்குற, ஒரு அழகான பொண்ணை நீங்க எப்படி வெறுக்க முடியும்?
 
அதுனாலத்தான் சொன்னேன், இப்ப இருக்குற அன்பு எப்ப வேணாக் காதலா மாறலாம். ஹாசிணிக்கும் அப்டித்தானே. நேத்து வரைக்கும் அன்பு மட்டுந்தானே இருந்தது.
 
ஆனா, என் கவலையெல்லாம், நாளைக்கு இந்த உறவை யாராவது கொச்சைப் படுத்தலாம். என்னை விட, ஹாசிணியை அது ரொம்பக் கஷ்டப்படுத்தும். ஏன்னா, அவ என்னைக் காதலிறதை விட கூடுதல் முக்கியத்துவத்தை, அதுக்கு முன்னாடி இருந்த அன்புக்குதான் கொடுப்பா.
 
எல்லாத்தையும் விட, எனக்கு ஹாசிணி கிடைக்கிறது ஒரு வரம். ஆனா, அவளுக்கு ஏன் என்னை மாதிரி, ஏற்கனவே கல்யாணமான ஒருத்தன் கணவனா கிடைக்கனும். எனக்கென்னமோ, அவளை கைட் பண்றேங்கிற பேர்ல, என்னைத் தாண்டி பெருசா சிந்திக்காத ஒரு வாழ்க்கையை அவளுக்குக் கொடுத்திட்டேனோன்னு வருத்தமா இருக்கு டாக்டர்.

கேட்டுக் கொண்டிருந்த மதுசூதனனே பிரமித்தார். சுந்தர், ஹாசிணி, எதற்கு கூடுதல் முக்கியத்துவம் கொடுப்பாள் என்று சரியாக கணித்திருந்ததும், வலிய வருவதை, அவளுடைய நலனுக்காக தள்ளி நின்று யோசிப்பதும் சுந்தரின் மேலிருந்த மரியாதையையும் அதிகரிக்கச் செய்தது. இந்த ஜோடி இணைய ஏதாவது செய்ய வேண்டும் என்று யோசித்தவன்,
 
உங்ககிட்ட ஒரு உண்மையைச் சொல்லனும் சுந்தர்.
 
சொல்லுங்க டாக்டர்.
   
ஹாசிணி உங்களை லவ் பண்றாங்கிறதை, நீங்க சொல்றதுக்கு முன்னாடியே எனக்குத் தெரியும்!
 
என்ன சொல்றீங்க?
 
எஸ்… ஆக்சுவலி, எனக்கே டவுட்டு வந்துதான் ஹாசிணிகிட்ட நானே போய் கேட்டேன். அப்ப ஹாசிணி என்ன சொன்னா தெரியுமா என்று அன்று ஹாசிணிக்கும், டாக்டருக்கும் இடையே நடந்த உரையாடல் முழுதையும் சொன்னவன், விவேக்கை திருமணம் செய்ய முடிவெடுத்த காரணத்தின் பிண்ணனியையும் சொன்னான்.
 
இதை உங்ககிட்ட சொல்லியிருக்கவே மாட்டேன் சுந்தர். ஆனா, சம்டைம்ஸ், எதிர்காலம், சமூகத்துக்காக, ரொம்ப அதிகப்படியா யோசிச்சு, அந்த நேரத்து சந்தோஷத்தையும், நமக்கான வாழ்க்கையையும் இழந்துடுவோம். அது உங்களுக்கு நடக்கக் கூடாதுன்னுதான் இதையும் சொல்றேன்.
 
ரெண்டு பேருக்கும் ஒருத்தர் மேல ஒருத்தர் அக்கறை இருக்கு, சரியா புரிஞ்சிக்கிறீங்க, துணையா இருக்கீங்க இதுக்கு மேல என்ன வேணும்? அதுவும் ஹாசிணி, விவேக்கும் ஹரிணியும் தப்பு பண்ணதுக்கு, என் பையன் ஏன் கஷ்டப்படனும் கேட்டப்ப நான் அசந்துட்டேன். எனக்கென்னமோ, தன்னோட அக்காவோட குழந்தைங்கிறதுக்காக அவ அப்படிச் சொல்லலை. உங்கக் குழந்தைங்கிறதுனாலத்தான் அப்டி சொல்லியிருக்கா. அப்டி ஒருத்தி கிடைக்குறது ரொம்ப ரேர் சுந்தர். தேவைக்கு அதிகமா யோசிச்சு நல்ல சந்தோஷத்தை இழந்துடாதீங்க, அவ்ளோதான் சொல்லுவேன்… என்று சொல்லிக் கொண்டிருக்கும் போதே அறைக் கதவு தட்டப் பட்டது.
 
டாக்டர் சொல்லச் சொல்ல சுந்தரே பிரமித்திருந்தான். ஹாசிணி காதல் உருவானதை விளக்கியிருந்தாலும், டாக்டர் சொன்ன அளவுக்கு விளக்கவில்லை. டாக்டர் நடந்ததை அப்படியே சொன்னதுமில்லாமல், அவருடைய கருத்தையும் சேர்த்தேச் சொன்னதும் சுந்தரை அசைத்திருந்தது. அவனுக்கே, ஓவரா யோசிக்கிறோமா, வழிய வர்ற ஸ்ரீதேவியை வேணாம்ன்னு சொல்லிட்டு என்ன பண்ணப் போறோம் என்று யோசித்துக் கொண்டிருந்தவன், டாக்டர் கதவைத் திறந்ததும் அங்கு நின்று கொண்டிருந்த ஹாசிணியைக் கண்டு அதிர்ச்சியானான்.



[Image: d87c4724256a85212f534322fe3aa128.jpg]

ஹாசிணி?! நீ எப்டி இங்க?
 

ம்ம்ம்… நீங்க என்கிட்ட சண்டை போட்டுட்டு, இங்க வந்துதான் புலம்புவீங்கன்னு எனக்குத் தெரியும். அதான் உங்களுக்கும் முன்னாடியே இங்க வந்துட்டேன். அது மட்டுமில்லை, இவ்ளோ நேரம் நீங்க தண்ணி போடாமியே தண்ணி போட்ட மாதிரி உளறுனதை எல்லாம் கேட்டுகிட்டுதான் இருந்தேன்.

 

எ.. எப்டி?

 

ம்ம்ம்… நீங்க புலம்ப ஆரம்பிச்ச உடனே, எனக்கு சைலண்ட் மோடுல ஃபோன் பண்ணச் சொல்லி ஏற்கனவே சொல்லியிருந்தேன் என்றவள், டாக்டர் பக்கம் திரும்பி, நாம பேசுனதை இவர்கிட்ட சொல்லக் கூடாதுன்னு சொல்லியிருக்கேன்ல என்று அதட்டினாள். பின், டாக்டரின் ஃபோனை எடுத்து, ஆஃப் செய்து அவரிடம் கொடுத்தவள், நான் மாமாகிட்ட தனியா பேசிட்டு வர்றேண்ணா என்று அனுப்பியவள், திரும்பச் சுந்தரின் பக்கம் திரும்பி முறைத்தாள்.

 

இவ்வளவு நேரம் அதட்டியதில், முறைத்ததில் சுந்தருக்கும், டாக்டருக்கும் புன்னகைதான் இருந்தது. இப்போது திரும்ப தன்னை நோக்கி முறைக்கும் போது சுந்தரின் புன்னகை விரிந்தது. ஆனால் அவளது அடுத்த பேச்சு அவனை அதிர்ச்சியடைய வைத்தது.

 
யோவ் மாமா…



[Image: qfkq4Mcdabhge.jpg]

யோவா?
 

ஆமாய்யா?

 

இப்டி ஒரு ஃபிகரு, வழிய வந்து உங்களுக்கு லவ் யு சொல்றேன், என்னமோ உங்களைக் கட்டிக்க லைன்ல நிக்குற மாதிரி என்னை வேணாம்ன்னு சொல்ற? என்னை வேணாம் சொல்லிட்டா, நீங்க நல்லவன்னு கோவிலா கட்டப் போறாங்க?

 

என் ரேஞ்சு என்ன, காலேஜ்ல எத்தனை பேரு எனக்கு ரூட்டு விட்டாங்க, எல்லாத்தையும் விட்டுட்டு உம்மைத் தேடி வந்து லவ் பண்றேன்னு சொன்னா, ஃபீல் பண்ணிட்டிருக்கீங்க. ஏதோ போனாப் போகுதுன்னு மாமாவாச்சேன்னு டைம் கொடுத்தேன். இனியும் யோசிச்சுகிட்டு இருந்தீங்க…

 

என்ன பண்ணுவ?

 

ம்ம்.. என் ஸ்பீடு உங்களுக்குத் தெரியாது. அப்புறம்.. நான் உங்களுக்குத் தாலி கட்டிட்…

 

பேசிக் கொண்டிருந்தவளை அப்படியே இழுத்து அவள் உதடுகளில் முத்தமிட்டுக் கொண்டிருந்தான் சுந்தர். ஏற்கனவே ஓவரா யோசிக்கிறோம் என்றிருந்தவனை சரியாகப் புரிந்து, அவனுக்கும் முன்பே வந்து காத்திருந்த மெனக்கெடல்களிலேயே காதலில் விழுந்திருந்தவன், அவளது பேச்சையும், குழந்தைத்தனமும், அதிரடியும், உரிமையும், காதலும் கலந்த பேச்சில் இன்னும் உறுதியாகி, அவள் வழியிலேயே சென்று அதிரடியாய் தன் காதலைச் சொல்ல ஆரம்பித்திருந்தான்.

 

என்னதான் நக்காலய் பேசினாலும், தனக்கு கிடைக்கும் முதல் முத்தம், இதழ் வழி உயிர் வரை உறிஞ்சும் முத்தத்தை திடீரென்று சுந்தர் கொடுக்கும் அதிரடியில் மயங்கி நின்றாள். சுந்தர் மிக நிதானம், யோசித்துதான் செய்வான் என்ற பிம்பத்தை அடித்து நொறுக்கி முன்னேறிய போது அதில் கிடைத்த த்ரில்லில், அவள் சிலிர்த்தாள். நீண்ட நேரம் முத்தமிட்டு அவளை விடுவித்தாலும், அவள் இன்னும் கிறக்கத்தில்தான் இருந்தாள்.

 

தான் விரும்பிய காதல் அவளுக்கு கைகூடுகிறது, அந்தக் காதலை சுந்தர் அங்கீகரித்து விட்டான் என்ற தித்திப்புடன், முத்தத்தின் இனிப்பும் சேர, அதில் ரொம்பவே மயங்கிக் கிடந்தாள்.

 

ஏய் வெடிப் பட்டாசு, இப்ப தாலி கட்டுறியா, இல்ல கட்டிக்கிறியா?

 

க… கட்டிக்கிறேன்!

 

அப்ப கட்டிக்கோ என்று கையை விரித்து நின்றான்..

 

நான் அந்தக் கட்டிக்கோவைச் சொல்லலை! தா… தாலியைச் சொன்னேன்!

 

நான் அந்தத் தாலியை உனக்கு கட்டனும்ன்னா, நீ என்னை வந்து இப்ப கட்டிக்கனும்!

 

ஆங்..

 

கட்டிகிட்டாதான் கட்டிக்குவேன்! இல்ல..

 

இல்லன்னா?

 

வேற ஒருத்தியை கட்டிக்குவேன், ஓகேயா?

 

எவ அவ வர்றான்னு பாக்குறேன் என்று இடுப்பில் கை வைத்து முறைத்தாள்.

 

அப்ப வந்து கட்டிக்கோ?!

 
பட்டாசாய் வெடித்துக் கொண்டிருந்தவள், வெட்கத்துடன் தயங்கித் தயங்கி வந்து அவனை இலேசாய் கட்டிக் கொண்டாள்.



[Image: Raashi-Khanna-photo-shoot-in-white-saree-5.jpg]

நீ என்னை லவ் பண்றியா இல்லை?
 

இதென்ன கேள்வி?

 

அப்புறம், உன் லவ்வரை இப்படித்தான் கட்டிப்பியா? உனக்கு சரியா லவ் பண்ணவேத் தெரியலியே?!

 

யோவ் மாமா, இத்தனை நாளா நல்லவனாட்டம் நடிச்சு ஊரை ஏமாத்தியிருக்கியா? செம கேடியா இருக்க?

 

இப்டி ஒரு லேடியை லவ் பண்ணனும்ன்னா, நான் கேடியாத்தானே மாறனும் என்று கண் சிமிட்டியவன், கட்டிக்கோடி என்றான்.

 

இந்த முறை வெட்கங்களைத் துறந்து, ஆசையுடன், மகிழ்ச்சியுடன், புன்னகையுடன் அவன் மார்பில் சாய்ந்தவளை, அவனும் தழுவி நின்றான்.

 

அவன் மார்பில் முகம் புதைத்து நின்றவளின், தோள்களில் அவன் முகம் புதைத்து நிற்க, நீண்ட நேரம் மெய் மறந்து நின்றார்கள். பின் அவள் காதுகளில் மெல்ல கிசுகிசுத்தான்.

 

தாங்க்ஸ்டி!

 

எதுக்கு?

 

எல்லாத்துக்கும்!

 

ச்சீ போ மாமா… தாங்க்ஸ்லாம் சொல்லிட்டு!

 

இனி இப்டி வாய்ல சொல்ல மாட்டேன்!

 

பின்ன எப்டி சொல்லுவீங்க?

 

அதான் கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி சாம்பிள் காட்டுனேனே?!

 

ச்சீ… இத்தனை நாளா இந்த ரொமான்ஸ் மொகத்தை எங்க மறைச்சி வெச்சிருந்தீங்க?

 

எல்லாத்துகிட்டயுமா இதைக் காட்ட முடியும்? பொண்டாட்டிகிட்ட மட்டுந்தான் காட்ட முடியும்! நீ ரொம்ப விரும்பிக் கேக்குறதுனால, எல்லார்கிட்டயும் காட்டுறேன்! ஓகேயா?

 
கொன்னுடுவேன்! கண்ணு இன்னொரு பொண்ணு பக்கம் போச்சு, திருகிடுவேன்!



[Image: beb2e20418c05ced6530b0a182ff2e7d.jpg]

ஹா ஹா… சரி, சீரியசா ஒண்ணு சொல்றேன் கேக்குறியா?
 
என்ன?
 
நம்மக் கல்யாணம் பண்ணிக்கலாம். விவேக் வேணாம். அவனைத் தனியா டீல் பண்ணிக்கலாம்!
[+] 5 users Like whiteburst's post
Like Reply


Messages In This Thread
RE: ஆண்மை எனப்படுவது யாதெனின்..! - by whiteburst - 08-10-2020, 06:19 PM



Users browsing this thread: 62 Guest(s)